சிங்கக் கொடியின் கீழ் ஒன்றுபட முடியுமா?

November 13, 2009
கொஸ்வத்தை தேவாலய தாக்குதல்  காணொளி

கொஸ்வத்தை தேவாலய தாக்குதல் காணொளி

உபத்திரவப்படுவதே கிறிஸ்தவ வாழ்க்கை, அதிலும் இலங்கையில் விஷேடம்.

கிறிஸ்தவ போதனையை தொடர்பவர்கள் மீது உலகெங்கும் வெறுப்பு உண்டு இதில் இலங்கை விதிவிலக்கல்ல.

பொது மக்களை ஏவி கிறிஸ்தவர்கள் மீது வன்முறையை கையாள்வது கொஸ்வத்தையில் மாத்திரமல்ல இலங்கையின் பல பகுதிகளிலும் இடம் பெற்றது.

காலி பகுதியில் கிறிஸ்தவ சபை மீது குறிப்பிட்ட கட்சி ஒன்று உபத்திரவம் கொடுத்ததுடன், ஒரு பாதிரியாரையும் சிறையில் அடைப்பித்தனர்,(குறிக்கப்பட்ட போதகர் பிணையில் சென்றபோது இயற்கை மரணமடைந்தார்).

புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் 1995 ஆம் ஆண்டு அக்கராயனில் கிறிஸ்தவ சபை ஒன்று தீயிட்டு கொழுத்தப்பட்டது(யாழிலிருந்து இடம்பெயர்ந்த சபை) போரின் இறுதிக் காலப் பகுதியிலும் பல்வேறு விதமான துன்பங்களை புலிகள் கிறிஸ்தவர்கள் மீது சுமத்தினர்.

இவ்வருடம் ஓகஸ்ட் மாதமளவில் மன்னார் பகுதியில் கிறிஸ்தவ சபை ஒன்றின் மீது தாக்குதல் தொடுக்கும் முகமாக சுமார் 2000 பேர் வரை கூடியிருந்த கூட்டத்தை பொலிஸார் அடித்து விரட்டினர்.

இறுதியாக ஊடகங்களின் பார்வையில் அகப்பட்டது கொஸ்வத்தை சம்பவம்.

மன்னாரில் அடக்கிய கலவரத்தை ஏன் கொஸ்வத்தையில் அடக்க முடியவில்லை என்பது தான் இங்கு பிரச்சனை?

ஏனெனில் இலங்கை எனப்படும் ஸ்ரீலங்கா சிங்களவர்களினதும் பௌத்தர்களினதும் நாடு.

இங்கு விழுந்த அடி கிறிஸ்தவர்களுக்கு விழுந்த அடியல்ல. தமிழர்களுக்கு எதிராக நடந்த வன்முறையாகும்.

புலிகளை வெற்றிகண்டதாக கூறப்படும் போரின் பின்னர் நிகழ்ந்த முதலாவது பெரிய இனக்கலவரமாக இதனை கருத இடமுண்டு.

ஏனெனில் அதிகமான சிறு சிறு கிறிஸ்தவ சபைகள் தமிழர்களால் உருவாக்கப்பட்டுள்ளதுடன், தமிழர்களைக் கொண்டதாகவும், அதிகமான போதகர்கள் தமிழர்களாகவும் உள்ளனர். என்பதை முதலில் தெரிந்திருந்தால் இது புரியும்.

மன்னாரில் நிகழ்ந்த சம்பவமானது, சங்கிலி மன்னனின் பட்டயத்திற்கு இரையாகிய 600 கிறிஸ்தவ இரத்த சாட்சிகளின் இரத்தம் கசியும் மண்ணில் கிறிஸ்தவர்களுக் கொதிராக மாற்றுக் கிறிஸ்தவர்கள், அதுவும் தமிழர்களுக்கு எதிராக தமிழர்கள் மேற்கொள்ள இருந்த கலவரம் அடக்கப்பட்டது ஒரு வகையில் போற்றத்தக்கது.

கொஸ்வத்தை உள்ளிட்ட தென்னிலங்கையின்(சிங்கள பகுதிகளில்) பல இடங்களிலும் நிகழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்களுக் கெதிரான வன்முறைகளின் போது சிங்கக் கொடியுடன் பௌத்த துறவிகளும் நேரடியாக வெளிப்பட்டனர்.

இதே தேசிய கொடி தான் தமிழர்களின் பிரதேசங்கள் ஒவ்வொன்றும் ஆக்கிரமிக்கப்பட்ட போதும் பறக்கவிடப்பட்டதுடன், அதே காவி உடை தரித்த பௌத்த துறவயிடம் தான் ஆசீரும் பெறப்பட்டது.

இது போன்ற தேசியக் கொடிக்கு நெஞ்சை நிமிர்த்தி மரியாதை செய்தும், இலங்கை மக்களின் தேசியக் கொடி என்று கூறுவதும் எவ்வளவு பொருத்தம்.

ஆகவே இந்தக் தேசிய கொடியின் கிழ் நிலங்களை புலிகளிடம் இருந்து மீட்டது என்பது கூறுவது சரியா? அல்லது தமிழர்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்று கூறுவது சரியா?

ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு பயங்கரவாதம் தடையாக உள்ளதாக கூறி புலிகளை முற்றாக ஒழித்துக்கட்டிய நாட்டில் காவி உடைக்கிடையே பயங்கரவாதம் ஒழிந்திருப்பதை தேசியக் கொடியால் போர்த்தி மக்கள் மீது ஏவிடுகின்றது அரசு.

‘சிறுபான்மை என்ற சொல்லுக்கே இனி இடமில்லை” என்று ஜனாதிபதி கூறுவதன் அர்த்தம் இது தானா?

மிக விரைவில் ஜனாதிபதி தேர்தல் ஒன்று ஸ்ரீலங்காவில் இடம் பெறும் என்ற எதிர்பார்த்திருக்கும் இத் தருனத்தில் எல்லா விடயங்களையும் ஒருமித்தே நோக்க வேண்டும்.

அவசர அவசரமாக மக்களை மீளக் குடியமர்த்துவதற்கு இயற்ககை மீதுள்ள அச்சம் ஒரு காரணமாக இருக்க கூடும், அதே வேளை தேர்தல் மற்றும் பல அரசியல் நோக்கங்களுக்காகவும் மீள் குடியேற்றம், போக்குவரத்து மற்றும் சேவைகள் ஆரம்பிப்பு என மக்களை சந்தேஷத்தில் தினறவைக்கின்றது அரசு, ஆனால் எல்லாவற்றுக்கும் முடியாக(மகுடமாக) இருக்கும் உயர் பாதுகாப்பு வலய காணிகள் மற்றும் பாதுகாப்பு அனுமதியில் மட்டும் தளர்வு ஏற்படவேயில்லை.

இலகுவில் மாற்று மொழியை பயன்படுத்தும் மனப்பாங்கு கொண்ட தமிழ் மக்கள் இவ் விடயங்களில் ஏமாற்றமடைந்தால் ஜனாதிபதி கூறியது போன்று ‘சிறுபான்மை என்றே சொல்” எதிர்காலத்தில் இல்லாமற் போய்விடும்.

அதற்கு வசதியாக மாங்குளம் அபிருத்தி செய்யப்படவுள்ளது. ஏற்கனவே புலிகளிடமும் இத்திட்டம் இருந்தது.

புலிகள் இத்திட்டத்தை முன்னெடுத்தால் தமிழ் பாதுகாக்கப்பட்டிருக்கும், ஆனால் அரசு இத்திட்டத்தை முன்னெடுத்திருப்பதானது வவுனியாவரைக்கும் பரவியிருக்கும் சிங்கள மொழி தமிழர்களின் கோட்டைகளுக்குள்ளும் பரவும் என்பதே யதார்த்தமானது.

இதற்கிடையே ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ளவுள்ள ஸ்ரீலங்காவில் தற்போதைய ஜனாதிபதி மகிந்தவிற்கு நிகரான ஒரு போட்டி வேட்பாளரை கண்டுபிடிப்பதில் கடினம். இதற்கு ஸ்ரீலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய கூட்டுப்படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் சரத்பென்சேகாவைத் தவிர வேறு யாரும் இல்லை.

இராணுவ மயமாக்களில் சிக்கியிருக்கும் ஸ்ரீலங்காவில் பேரினவாதிகளின் விருப்பத்தை நிறைவேற்றுபவர் தான் வெற்றியடைய முடியும் என்ற நிலைப்பாட்டை ஏற்படுத்தியிருக்கும் இவ் இராணுவ வெற்றியானது. ஜனநாயகத்தை சீரளிக்கும் தலைமையை உருவாக்க வழிவிடும்.

இதற்கு உரிய காலம் பிறந்துவிட்டது போன்ற ஒரு நிலைப்பாடாகவே சரத்பொன்சேகாவின் பதவிவிலகல் கடிதம் கையளிப்பும் நிகழ்ந்துள்ளது.

ஏற்கனவே இராணுவ சுதியில் இருக்கும் ஸ்ரீலங்காவின் பேரினவதிகளின் காதுகளை குளிர்மைப்படுத்தும் இராணுவ வெற்றிபிரதாபங்கள் தேர்தல் பிரசாரமாக கிடைக்கவுள்ளன.

ஆகவே ஸ்ரீலங்காவில் இனி வரப்போகும் ஆட்சியானது சர்வதிகாரத்தை அல்லது இராணுவ அந்தஸ்தை கொண்டதாக அமையும். எனவே புலிகள் இல்லாத இச் சூழ்நிலையில் சிறுபான்மையினங்கள் அரசை புகழ்ந்து சலுகைகளை அனுபவிக்க வேண்டியது தான். சிறுபான்மையினரின் கருத்துக்கள் வெறும் புரளியாகவே அமையும்.

ஆகவே கொஸ்வத்தை சம்பவம் போன்ற சம்பவங்கள் தமிழ் இனத்துக்கு எதிரான சிந்தனையாக பார்க்கப்படாதது போன்று, வேறு ஒரு தோற்றத்தில் தமிழினம் அழிவடைய வழிதிறக்கப்டுகின்றது என்பதை கூர்ந்து அவதானிக்க வேண்டும்.

யாழ்ப்பாணத்திலுள்ள நாவலர் மண்டபத்திற்கு பின்புறமாக அமைந்திருக்கும் நூதன சாலையை பார்வையிட்ட எனக்கு பெரிய ஒரு கவலை, எமது புராதன சின்னங்கள் இன்னும் எவ்வளவே பாதுகாக்க வேண்டியுள்ளதே என்று.

பாழடைந்த கட்டடம் போன்ற ஒரு ஒதுக்குப் பகுதியில் அவ் நூதன சாலை இருந்தது கவலைக்கு மிகப் பெரிய காரணம். ஆகவே நான் கேட்டேன் ஏன் இது இப்படியே இருக்கின்றது? வேறு புதிய பொருட்களை சேகரிக்க முடிந்ததா? என்று. கிடைத்த பதில் இருப்பதை மட்டும் பாதுகாக்கலாம் புதிய தொல்பொருட்களை கண்டுபிடிக்க அனுமதி இல்லை, ஆனால் பௌத்த அடையாளங்கள் தொடர்பான தொல்பொருள் ஆய்வுகள் தொடர்ந்து இடம் பெறுகின்றது என்பது தான் அந்த பதில்.

சிறுபான்மை என்ற சொல் இல்லாமல் போவதற்கு காலம் தூரமல்ல.

பிழைகளை சுட்டிக் காட்டவும் vincentjeyan@yahoo.co.uk


இலங்கையில் மனித நேயமிக்கவர்கள் மீண்டும் மக்கள் முன் வருக.

November 4, 2009
b0g3c355ymx3jbyulawf5l3a_TNL%20pic%20main%20front

படத்தை அழுத்தி மேலதிக விபரத்தை பார்க்கவும்

பம்பலபிட்டடியில் கடந்த மாத இறுதி பகுதியில் கொல்லப்பட்ட பாலரட்ணம் சிவகுமார் (வயது 26) தொடர்பாக இலங்கை வாழ் மக்களுக்கும் மனித உரிமை ஆர்வலர்களுக்கும் மிகுந்த அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

இவ்விடயத்தை மனித உரிமை மீறல் என்று பார்ப்பதா? இன அழிப்பு என்ற ரீதியில் பார்ப்பதா?

எப்படித்தான் பார்த்தாலும் எல்லாம் ஒன்றே.

குறிக்கப்பட்ட கொலைச் சம்பவத்தை மக்கள் பலரும் நேரில் கண்டதுடன், வீடியோ பதிவு செய்து ஊடகங்கள் மூலம் பொது மக்கள் பார்வைக்கும் முன்வைக்கப்பட்டது.

குறிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மக்கள் (ஸ்ரீலங்காவில்) பலரும் தமது கருத்துக்களை முன்வைக்கையில் இது போன்ற மனித நாகரீகமற்ற சம்பவத்திற்காகா கவலைப்படுகின்றோம்,வெக்கமடைகின்றோம், சட்டம் நீதி ஒழுங்கு இல்லையா?, பொலிஸாரின் கடமை என்பது இதுதானா?, இரக்கமே இல்லையா? என பல்வேறான தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

thines7xu

படத்தை அழுத்தி மேலதிக விபரத்தை பார்க்கவும்

இது போன்றொரு சம்பவம் 2005 நவம்பர் 16ம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றது
திருட்டுச் சம்பவத்தில் அகப்பட்ட மைக்னேசி தினேஷ் (வயது 20) என்பவர் யாழ் இந்துக் கல்லுரி மைதானத்தில் கூடைப்பந்தாட்ட கம்பத்தில் கட்டப்பட்டு கூடிநின்றவர்களால் கும்பிட கும்பிட அடித்துக் கொல்லப்பட்டார்.

Sandilippayஇது போன்றொரு இன்னொரு யாழ் சண்டிலிப்பாயில் இடம் பெற்றது குறிப்பிட்ட நபர் ஒரு மனநலம் பாதிக்கப்ட்டவர் அவர்Sandilippay கொல்லப்பட்டதற்கான காரணம் இது வரை தெரியாது, குறிப்பிட்ட நபரை இரவு வேளை தூக்கிச் சென்ற சிலர் கடுமையாக தாக்கி கொன்றதன் பின்னர் தற்கொலை செய்தவர் போல சடலத்தை மரத்தில் கட்டி தொங்கவிட்டனர்.

இது போன்ற வேறு பல சம்பவங்களும் இடம் பெற்றிருக்கலாம்.

யுத்தத்தை காரணம் காட்டி மனித பண்புகள் குழிதோண்டி புதைக்ப்பட்டுள்ள இலங்கையில் இன்னும் எத்தனையே விடயங்கள் மண்ணோடு மண்ணாகிவிட்டன.

யாழில் நடந்த தினேஷ்சின் கொலைச் சம்பவம் மக்களால் தண்டனை வழங்கப்படுவதாக கலாச்சாரம் பேணும் குழுவினால் பதாகையும் வைக்கப்பட்டது. அங்கு கூடியிருந்த பலரும் கிரிக்கட் விக்கட்டுகளாலும், பற்றினாலும், வேறு சிலர் செயின் மற்றும் தடியினாலும் அடித்துக் கொன்றனர்,

இதனை இன அழிப்பு என்ற பட்டியலில் சேர்ப்பதா? மனித உரிமை மீறல் பட்டியலில் சேர்ப்பதா?

யாழில் புதிதாய் திருடப் பழகியவர்களும் உண்டு, ஒரு தடவை திருட்டு சம்பவம் ஒன்றில் சந்தேகிக்கப்டும் ஒருவர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார், அவரிடம் கேட்டேன் ‘ஏன் திருடினீர்கள் உழைத்து தின்னலாம் தானே” என்று. அதற்கு கூறினார் உழைப்பில்லை கையில் காசு ஒன்றும் இல்லை, சாமான்கள் நினைச்சுப் பார்க்க முடியாத விலை, நான் நகை திருடவில்லை அரிசியைத்தான் எடுத்தேன் என்றார்.

இவ் உண்மைச் சம்பவத்தை கூறி திருடர்களை ஊக்குவிக்கவில்லை மாறாக நாம் கற்றுக் கொள்வதற்கும் கையாள்வதற்கும் நிறையவே உள்ளது என்பதை முன்வைக்கின்றேன்.

வடக்கு கிழக்கில் வெறுமனே திருட்டு மட்டுமன்றி பல உயிர்பறிப்பு மற்றும் மானபங்க சம்பவங்களும் நிறைவேறியதை மறுக்கவுமில்லை.

பம்பலப்பிட்டியில் கொல்லப்பட்டவர் தமிழ் பெயரை உடையவராக இருந்தாலும் அவர் பேசுவது சிங்கள மொழியே.

குறிப்பிட்ட நபரை தமிழன் என்று தெரிந்து தான் கொன்றார்கள் என்று அர்த்தப்படுத்துவது எவ்வளவு தூரம் சரியானது என்பதை சிந்திக்க வேண்டும்.

எது எப்படியிருப்பினும் விலங்கிலும் கேவலமான ஜாதி இலங்கையில் உருவாகி இருப்பதை இச் சம்பவம் வெளிப்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் மக்கள் முன் பார்வைக்கு வைக்ப்பட்டதினால் தான் அதற்கு பல்வேறு எதிர்ப்புக்களை மக்கள் வெளியிட்டுள்ளனர்.

இதே போன்று தான் வன்னியில் கரு முதற்கொண்டு முதியவர் வரை தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர் என்பதை இலங்கை வாழ் மக்கள் அறிந்திருந்தால் ஜனாபதி மகிந்த ராஜபக்ஷவிற்கும், சரத்பொன்சேகாவிற்கும், கோட்டபாயவிற்கும் எதிராக குரல் கொடுத்திருப்பர்.

ஊடக அடக்கு முறையை இன்று வரை கையாள்வதால் தம்மைச் சுற்றி என்ன நிகழ்கின்றது என்பதை அறியாத மக்களாக உள்ளதுடன், கேட்டவைகளை மட்டும் நம்பிக்கொண்டு தம்மை அறியாமலே வன்முறையாளர்களுக்கு பால்வார்க்கின்றனர்.

நேர்மையான ஊடகம் இலங்கை மக்களுக்கு கிடைத்திருந்தால் இறுதியாக நிகழ்ந்ததாக கூறப்பட்ட யுத்தத்திற்கு பொரும்பான்மையான மக்கள் ஒத்துழைப்பு வழங்கியிருக்க மாட்டார்கள், அத்துடன் ஏற்கனவே காணாமல் போன அல்லது கடத்டதப்பட்டவர்களுக்கான பதிலை கூறுமாறு நிர்ப்பதந்தித்திருப்பர்.

சிவகுமாரின் கொலைச் சம்பவம் மக்களுக்கு முன்வைக்கப்பட்டதன் மூலம் மக்கள் வன்முறையை ஆதரிக்கவில்லை என்பதை தெளிவாக வெளிப்படுத்டதியுள்ளனர்.

இலங்கையின் மருத்துவ மனைகளிலோ அல்லது பள்ளிகளிலோ கிடைக்காத மனித நேயம் எவ்வாறு இராணுவத்துக்குள்ளும் பொலிஸிக்குள்ளும் இருக்கும் என்பதை எதிர்பார்ப்பது.

இலங்கையில் மனித நேயம் படைத்தவர்கள் மீது சாயம் பூசி ஒதுக்கப்ட்டுள்ளனர். அவர்களை மீண்டும் மக்கள் முன்னிலையில் கொண்டுவருவதற்கு சர்வதேசம் தொடர் அழுத்தங்களை ஸ்ரீலங்காவிற்கு வழங்க வேண்டும்.

இவ்வாறான சம்பவங்களை வெறுமனே ‘தமிழ் சிங்களம்” என பிரித்துப் பார்க்கக் கூடாது இது எமது நாட்டில் தொடர்கதையான கேவலமான பண்புகள்.

சாதாரணமாக பேரூந்தில் பச்சப்பாலகருடன் பயணிக்கும் தாய்மாருக்கு கூட இருக்கை கொடுக்க மறுக்கும் தமிழ் மனிதபிறவிகள் பலபோருடன் தர்க்கித்ததுண்டு. ஒவ்வொரு சிறுவிடயத்திலிருந்தும் பிறக்கும் மனிதப் பண்புகள் எம்மிடம் அழிவடைந்து கொண்டிருக்கின்றது.

ஆகவே இன்னும் பல சம்பவங்களுக்கு வெளிநாட்டு பணம் காரணம் என்பதை பல இடங்களிலும் உறுதிப்படுத்திக் கொண்டேன்.

வெளிநாட்டு பணம் எம் சமூகத்தில் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற பாதிப்புக்களை பல பக்கங்களில் எழுத முடியும் இப்போது ஒரு உதாரணம்.

அண்மையில் முகாம்களில் எம்மக்கள் பலரும் துன்பங்களை அனுபவித்து வந்தனர், எனினும் ஒரு சிலர் பல லட்சங்களை அள்ளிக்கொடுத்து தம் உறவுகளை முகாமிலிருந்து மீட்டனர், பணம் இல்லாதவன் என்ன செய்வது?

எமது மக்கள் அவலத்திலிருந்து நிதந்தரமாக விடுபட வேண்டும் என்பதே எமது விருப்பம். அதற்காகத்தானே இவ்வளவு தியாகங்களையும்(பணத்தையும்) செய்து வந்தீர்கள்.

ஒட்டுமொத்த மக்களும் விடுபடவேண்டும் அதற்கு நாம் ஒன்றுபடுவோம் என ஏன் எம் இனத்துக்கு சிந்திக்க முடியாதுள்ளது? இங்கே நாம் செய்வது இன அழிப்பு இல்லையா? இவ்வாறு தான் ஒவ்வொரு விடயத்திலும்.

எனவே அரசு தரப்பு செய்யும் தவறுகள் அல்லது பேரினவாதிகள் செய்யும் தவறுகளுடன் எம் தவறுகளையும் எதிர்த்து போராட வேண்டும்.

தற்போது இலங்கையில் நிகழும் ஒவ்வொரு சம்பவங்களையும் ஆழமாகவும் நீண்டநோக்கிலும் பார்த்து விவேகமான செயற்பாட்டில் ஈடுபடுவது ஒவ்வருதமிழனுக்கும் உள்ள பாரிய கடமையாகும்.

வேதனையை அனுபவித்த இனம் தான் அதன் வலியை உணரமுடியும் என்ற அடிப்படையில் மனித நேயம் எங்கெல்லாம் மாசுறுகின்றதோ அப்போதெல்லாம் குரல் கொடுக்கும் இனமான தமிழ் இனம் சர்வதேசத்தில் தென்பட வேண்டும். அப்போது தான் எம்மினத்தின் துயர் நீங்கும்.


புலம் பெயர் மாவீரர் தினம் காலத்தின் தேவையை உணர்ந்து நடத்தப்படுமா?

October 27, 2009
NOV2726102009266

சுவிற்சிலாந்தில் காணப்படும் இவ் நினைவுச் சின்னம் போர்வீரர்களை நினைவு கூருகின்றது. கிரபுன்டன் மாநிலத்தில் இத் துபி அமைந்திருக்கும் வளாகச் சுவர்களில் பிற நினைவு கற்களும் உண்டு, சுவிற்சிலாந்தின் தேசிய தினம் மாநில வாரியாக கொண்டாடப்படும் போது இவ் வளாகத்துக்குள் தான் முக்கிய கொட்டகை அமைக்கப்டுகின்றது. இதே போன்ற சூழ்நிலை மாவீரர்களுக்கு ஏற்படாமல் காப்பது ஒவ்வொரு தமிழரினதும் கடமை. படம் வின்சென்ற் ஜெயன்

கடந்த வருடங்களில் இடம் பெற்ற மாவீரர் தினத்திலும் இவ் வருடத்தில் இடம் பெற இருக்கும் மாவீரர் தினம் தொடர்பான அதிக அக்கறை ஸ்ரீலங்கா அரசிற்கும் புலிகளின் செயற்பாடுகளை உற்று நோக்குவோருக்கும் உள்ளது.

புலிகள் என்றொரு அமைப்பு இருந்ததற்கு ஆதாரம் கூட இருக்கக் கூடாது என்பது தான் அரசின் நோக்கம். அதனால் தான் விடுதலைப் புலிகளின் தலைவர் உள்ளிட்ட போராளிகளின் ‘உடல்களை யாரிடமும் கையளிக்கமாட்டோம் இவைகளை வைத்துக் கொண்டு அஞ்சலி அது இது என்று நினைவுபடுத்துவதற்கும் விரும்பத்தகாதவர்கள் இங்கு வருவதை நாம் விரும்பவில்லை” என்று இராணுவப் பேச்சாளர் உதயநானயக்கார ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ‘நாடுகடந்த தழிழீழ அரசு” என்ற புதிய நிலைப்பாடு, புதிய தலைவராக அறியப்பட்ட செல்வராசா பத்மநாதனின் கைது, மற்றும் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார் இல்லை என்ற சர்ச்சை, உரையை யார் செய்வார்? என்ற கேள்வி, தற்போதைய புலம் பெயர் தமிழர்களின் ஈழம் தொடர்பான நிலைப்பாடு? என பல சந்தேகங்களுக்கு விடைகாணவும், புலம் பெயர் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை இனம் காணவும் இம் மாவீரர் தினம் உதவும் என எதிர்பார்க்கப்டுகின்றது.

தலைமைப் பீடத்தின் இழப்புக்களையடுத்து அதிகார ப+ர்வமான செய்தி தளங்கள் கூட இயங்க முடியாமலிருக்கையில் நாடுகடந்த தழிழீழ அரசு எந்தளவிற்கு செயற்படும் இதற்கு தமிழ் மக்கள் எந்தளவிற்கு கைகொடுப்பார்கள் என்ற மதிப்பீட்டினை இம் மாவீரர் தினம் வெளிப்படுத்தும்.

1990 களிலிருந்து மிகவும் உணர்வு பூர்வமாக தமிழர் தாயக பிரதேசம் எங்கும் நினைகூரப்பட்டுவந்தது. தற்போது புலிகள் இல்லாத நிலையில் இம் மாவீரர்களுக்கு தாயகத்தில் அஞ்சலி செலுத்தப்படுகின்றதோ இல்லையோ? புலம் பெயர் நாடுகளி;ல் வாழும் தமிழர்கள் வழமைபோன்று இம் முறையும் மாவீரர்களை நினைவுகூர்வார்கள் என்;பதில் ஐயமில்லை.

ஒட்டுமொத்த இழப்பின் பின்னரும் இடைத்தங்கல் முகாம் என்று கூறப்படும் முகாம்களில் அனுபவிக்கும் துயரத்திலிருந்தாவது சிறிது நிம்மதி கிடைக்குமா? என ஏங்கித் தவிக்கும் மக்களை தனது அரசியல் இலாப செயற்பாட்டில் அரசு ஈடுபடுத்திவருகின்றது.

முன்னாள் புலிகளுக்கு மறுவாழ்வு என்ற போர்வையில் புலனாய்வாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிவைத்தல்.
மீள்குடியேற்றம் என்ற போர்வையில் வன்னியிலிருக்கும் மக்களை கட்டம் கட்டமாக வெளியேற்றும் நடவடிக்கையின் முதற் படியாக அங்கு தமது வாழ்வை ஆரம்பித்த மக்களை பிறந்த இடங்களை மையமாக வைத்து பிற மாவட்டங்களில் குடியமர்த்தியது.
சர்வதேச நெருககடிகளில் தப்புவதற்கென முன்னாள் புலி சிறார்களுக்கு கல்வி, வன்னிப் பகுதியில் மீண்டும் குடியேற்றம்
மீள்கட்டுமானம் என்ற போர்வையில் வன்னியில் இராணுவ கட்டுமானங்களை மேற்கொள்ளல்

என சர்வதேசத்திற்காக நாடகமாடும் வேலைகளில் அரசு அக்கறையாக இருந்து கொண்டு தமிழர்களின் உணர்வுகளையும் இச் செயற்பாடுகள் மூலமாக திசைதிருப்புவதிலும் எதிர்கால அரசியல் ஸ்திரத்திற்காகவும் மிகவும் நூதனமான தந்திரங்களை அரசு கையாளுகின்றது.

புலிகளின் இராணுவ கட்டுமானம் முற்றாக தகர்ந்துள்ள இச் சூழ்நிலையில், மீண்டும் போராட்ட உணர்வுகள் தளைத்திடாதிருக்க வன்முறையற்ற அடக்குமுறை உள்ளிட்ட அடக்கு முறைகளை அரசு கையாள்கின்றது.

ஈழ ஆதரவாளர்கள் என்று அடையாளம் காணப்பட்ட தமிழக அரசியல்வாதிகள் தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் கோமாளிக்கூத்திற்கு விலைபோதல்.
செய்தியாளர்களை மறைமுகமாகவே நேரடியாகவே அச்சுறுத்தி உண்மைகளை மறைத்தல்.
எது கிடைத்தாலும் போதும் என்ற மன நிலைக்கு மக்களை பணிய வைத்து தனது பிரசாரத்திற்காக செற்ப தேவையை நிறைவுசெய்தல்
போன்ற விடயங்கள் வெளிப்படையாக உள்ளன.

இது போன்ற பல சவால்களின் மத்தியில் தான் புலம் பெயர் தமிழர்கள் தாம் நினைவு கூரவுள்ள மாவீரர் தினத்தை எதிர் நோக்க வேண்டியுள்ளது.

இதற்கிடையில் தலைவர் பிரபாகரனின் மரணத்தை மக்களுக்கு உரிய முறையில் அறிவிப்பதற்கு தழிழ் ஊடகங்கள் பூரண ஒத்துழைப்புக்களை வழங்காமையினால் தமிழர்களிடையே பிரிவுகளை ஏற்படுத்தியதுடன், இறுதிவரை களத்திலிருந்து விலகாமல் மக்களோடு மக்களாக, போராளிகளோடு போராளியாக தன்னையும் குடும்பத்தையும் ஈழ விடுதலைக்காக அர்ப்பனித்த தங்கள் தலைவனை கொச்சைப்படுத்திய இனமாக தமிழினம் உள்ளது.

இதைவிட புலி எதிர்ப்பாளர்களின் பிரசாரம் சிறந்தது என்றே கூறவேண்டும்.

‘சுமார் முப்பதாயிரம் மக்களையும் ஏனைய போராளிகளையும் பறிகொடுத்துவிட்டு எம் தலைவன் வெற்றிகரமாக தப்பிவிட்டார்”,
‘தலைவர் உயிர் தப்புவது தான் எம் போராட்டத்தின் இலட்சியம்”, என்றது போலும் ‘போரட்ட ஆரம்ப நாட்களில் அச்சுவேலி வங்கி கொள்ளையடிப்பு சம்பவத்திற்காக தேடப்படுபவர் என்று ஸ்ரீலங்கா அரசு கூறியது. ஆகவே கொள்ளைக்காரன் தான் தப்புவதற்காக போராட்டத்தை நடத்தினான்” என்று பொருள்படும் படியான செயற்பாட்டைத்தான் புலம் பெயர் தமிழ் சமூகம் வெளிப்படுத்தியது, இதைவிடவும் பெரிய துரோகம் ஒன்றுமில்லை.

அன்புக்குரியவரின் இழப்பை ஏற்பது கடினம் தான் எனினும் தமிழ்மக்கள் இவ்விடயத்தில் கவணமாக செயற்பட்டிருக்க வேண்டும்.

இவ்வாறு தவறுக்கு மேல் தவறான செயற்பாடுகள் தடுமாற்றத்தையே உருவாக்கும்.

வன்னியில் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள் காரணமாக உளவியல் தாக்கத்திற்குள்ளான பலரும் உறவுகளின் இழப்பினால் உதவிகளற்றுள்ள(பாதுகாப்பு) பலரும் வன்னி தவிர்ந்த பிறமாவட்டங்களில் மீளக் குடியமர விருப்பம் தெரிவித்துள்ளனர். உறவினர்களின் பிணையின் அடிப்படையிலேயே அவ்வாறு பிறமாவட்டங்களுகளில் மீள் குடியேற்றப்பட்டுள்ளனர். இது மக்களை வன்னியிலிருந்து அப்புறப்படுத்துவதற்கான இலகுவழியை அரசிற்கு ஏற்படுத்தியுள்ளது.

உளவியல் தாக்கத்திற்குள்ளான மக்களின் அவலம் தொடர் கதையாகத் தான் உள்ளது, மேலும் ஏற்கனவே விடுவிக்கப்பட்ட பகுதி என கூறப்படும் பகுதிகள் பெருமளவானவை உயர் பாதுகாப்ப வலயங்கள் என்ற போர்வையில் அபகரிக்கப்பட்டுள்ளது.

தொடரும் பயண அனுமதி மற்றம், பொலிஸ் பதிவு நடைமுறைகள், தடுப்பு முகாம்களில் உள்ள அப்பாவிகளின் அவலம், என்ற உள்ளக கவலைகளின் மத்தியில் வாழும் தமிழ் மக்கள் மாவீரர்களின் நாளை மறந்துவிட பல காலங்கள் தேவை.

இதே வேதனையுடன் தான் முன்னைய நாட்களிலும் தாயகத்தில் மாவீரர்கள் நினைவு கூரப்பட்டார்கள், தமது பிள்ளைகளின் கல்லறைகளை கட்டியணைத்து கதறும் காட்சி எதிரியையும் கண்கலங்க வைக்கும். சாதாரண நாட்களில் பூங்கா போல காட்சியளிக்கும் மாவீரர் துயிலும் இல்லம் அமைதியான பல நினைவுகளை மீட்டும். மன அமைதிக்கென்றே கல்லறைகளை நாடிச் செல்லுவோரும் உள்ளனர்.

எனினும் தாயகத்தில் நினைவுகூரப்படும் மாவீரர் தினம் போன்ற உணர்பூர்வமான நிகழ்வாக புலம் பெயர் நாடுகளில் காணமுடியாது, தாயகத்திலிருந்து ஒருவர் நேரடியாக இந்நிகழ்வில் பங்குபற்றினால் இதனை களியாட்ட நிகழ்வு என்று தான் கூறுவர்.

இவை எல்லாவற்றுக்கும் எதிர்மாறான உணர்வை ஏற்படுத்தும் புலம் பெயர் மாவீரர் தினம் இம் முறை காலத்தின் தேவையை உணர்ந்து நடத்தப்படுமா? இம்முறை தமிழர்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தும் மாவீரர் தினமாக அமையுமா?


எதற்காக மீண்டும் ஒரு நாடகம். இராஜதந்திர வலையில் நாம்

October 18, 2009

இந்திய பிரதிநிதிகளின் வருகை தமிழ் மக்களுக்கு நிம்மதியை ஏற்பத்தும் என்பது போல எம்மவர்கள் ஏன் இன்னும் நம்புகின்றனரோ?

தழிழ் மக்களின் உரிமைக்கான போராட்டம் ஆயுத வடிவெடுத்து 30 ஆண்டுகள் கழித்தும் இறுதி நேரத்தில் கூட கைகொடுக்காத இந்தியா இனியும் கைகொடுப்பதற்கு என்ன இருக்கின்றது என்பதை எமது சுயபுத்தியில் சிந்திக்க வேண்டும்.

திரைக் கதைகளில் வருவது போன்ற ஒரு கதாநாயகனாக இந்தியா வந்து உதவும் என்று எம்மவர்கள் கனவு காண்பது ஏனோ புதிராகவே உள்ளது.

தமிழ் ஈழத்திற்கான தேவையும் தியாகமும் எம்மக்களிடமே உள்ளது எதற்காக இந்தியாவின் கையை எதிர் பார்க்கவேண்டும்.

ஒரு நாட்டின் ஆதரவு குறிப்பாக அண்டை நாட்டின் ஆதரவு அவசியம் தான்.

பிரதமர் அமரர் இந்திராகாந்தி மற்றும் முதலமைச்சர் அமரர் எம்.ஜி.ஆர் காலப் பகுதிக்குப் பின்னர் ஈழத் தமிழர்களின் பிரச்சனை தொடர்பாக இதயபூர்வமான தீர்வினை இந்தியா கொண்டிருக்கவில்லை. அவர்களின் கால பகுதிக்குப் பின்னர் பெரிய சக்திகளை அடக்குவதற்கு எம்மவர்களின் போராட்டத்தை பயன்படுத்தினர்.

இவ் இராஜதந்திர வலையில் சுதந்திரத்திற்காக போராட முன்வந்த எம் தாயக இளைஞர்கள் உட்பட இலங்கை இந்திய அரசியலும் சிக்கியதினால் எம் இனத்தின் விடுதலை கேள்விக்கு உள்ளாகத் தொடங்கியது.

இதனடிப்படையில் சகோதரப் படுகொலைகள் உட்பட விடுதலை பெற வேண்டிய இனம் தன்னைத்தானே சுடத் தொடங்கியது ஒரு சோகமாக தொடர, இலங்கை இந்திய ஒப்பந்த வேளையில் இந்திய பிரதமர் ராஜிவ்காந்தி மீதான ஸ்ரீலங்கா சிப்பாயின் கொலை முற்சியை இரண்டு நாடுகளும் ஒற்றுமையாக மறைத்துக் கொண்டு. கொலைப் பழியை மட்டும் புலிகள் மீது சுமத்தி அதற்காக முழு தமிழ் இனத்தையும் வேடையாடுகின்றது இந்தியா.

இந்தியாவிடம் ஒரு கேள்வி மட்டும் உள்ளது. இந்தியா உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என எதிர் பார்க்கிறீர்கள்? என்பது தான்.

இதற்கு ஏற்றாற் போல் எம்மவர்களும் இந்தியா எமது மீட்பன் என்பது போல் அறிக்கையும் விடுவர்.

குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது அறிக்கைகளில் ‘ சந்திப்பு ஆக்கபூர்வமானதாக இருந்தது”, ‘அவர்கள் மிக உன்னிப்பாக கேட்டறிந்தார்கள்”, நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது”. போன்ற செற்தொடர்களை பாவித்து மக்களை ஏமாற்றுகின்றார்கள்.

அவருக்கு வாக்களிக்கவும் இவரைப் புறக்கணிக்கவும் என எமது கடைமைகளை மறந்து அண்டை நாட்டில் நடக்கும் தோர்தலில் ஈடுபடுவது எவ்வளவு பொருத்தமான விடயம்?

தழீழ மக்களுக்கு சார்பாக அண்டை நாட்டில் நடக்கும் கவணயீர்ப்புகள் உச்சாகத்தை தருபவை தான் அதற்காக அவற்றை முழுமையாக நம்பக் கூடாது.

தமிழக முதல்வர் கருணாதி தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்ததும் சங்கிலிப் போராட்டங்கள் நடத்தியதும் அவரின் செல்வாக்கை பரீட்சிப்பதற்கே என்று பலருக்கும் புரியவில்லை.

இதன் பின்னர் தனது பேச்சை கேட்டு ஜனாதிபதி ராஜபக்ஷ யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டார் எனக்கூறி தமிழக மக்களை ஏமாற்றிய தமிழக முதல்வர் கருணாநிதி தானது சில மணிநேர உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டதாக கூறிய போது வன்னி மண்ணில் வயிற்றில் இருந்த கரு உட்பட முதியவர்கள் வரை கொல்லப்பட்டுக் கொண்டிருந்தனர்.

இந்தக் கோமாளியின் குழு இலங்கை சென்று திரும்பியது அல்லாமல் 15 நாட்களுக்குள் சுமார் 58ஆயிரம் மக்கள் மீளக் குடியேற்றப்டுவர் எனவும் அறிக்கையிட்டது. தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைத்துவிடும் என்பது போல எம் மக்கள் சிந்திக்கின்றனர்.

ஸ்ரீலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி தமிழக அரசியல் வாதிகளை ‘கோமளிகள்” என்று கூறிய வார்த்தையை நிருபித்துவிட்டார்கள்.

மேலும் அகதி முகாம்களுக்கு சென்று பார்வையிட்ட போதும் வவுனியாவில் உள்ள அனைத்து முகாம்களுக்கும் இவர்கள் செல்லவில்லை.

(இக் குழு இலங்கையில் நின்ற போது தான் தடுப்பு முகாமில் மரம் முறிந்து விழுந்து இருவர் கை மற்றும் காலை இழந்ததுடன் குழந்தை ஒன்றும் காயங்களுக்கள்ளானது.)

இக் குழுவினர் அகதி முகாம்கள் தரமாக உள்ளது என்று கூறியிருப்பது ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில் தழிழகத்தில் இலங்கை அகதிகளுக்கான தங்குமிடம் மிகக் கேவலமாக இருக்கின்றது. பல வருடங்களாக பராமரிக்கப்டும் தமிழக அகதி முகாம்களில் பல குறைபாடுகள் இருக்கின்றன என்று அங்கு வசிக்கும் எம் உறவுகள் தெரிவிக்கின்றனர்.

மனிதப் பேரவலம் நிகழ்ந்த போது கண்ணை மூடிக் கொண்டிருந்த இந்தியா எதற்காக மீண்டும் ஒரு நாடகம் ஆடுகின்றது.

  • நளினி-பிரியங்கா சந்திப்பின் மூலம் தமிழ் மக்களை திசைதிருப்பிய இந்திய இறுதியில் இராணுவ உதவிகளை வழங்கியது.
  • சங்கிலி போராட்டம் நடத்தி நாடகம் காட்டிய கருணாநிதி யுத்தம் முடிவடைந்தது என கூறி தமிழக மக்களின் உணர்வுகளை அடக்கினார்.
  • தற்போது தமிழக குழுவின் விஜயம்,கருணாநிதியின் 15 நாள் மீளக் குடியேற்ற புரளி?…

இலங்கையை மனித உரிமைகள் குற்றச் சாட்டு மற்றும் போரியல் குற்றத்திலிருந்து மீட்பதில் பெரும் பங்காற்றிய இந்தியா, தற்போது தழிழீழ அனுதாபிகள் என்று இனம் காணப்பட்டவர்களை தனது திட்டத்தில் பயன்படுத்துகின்றது.

இதன் மூலம் மேற்குலகில் தமிழர்களின் குரல்களை நசுக்குவதில் புதிய பாதையை வகுக்கின்றது இந்தியா.

மேற்குலகின் முன் தலைகுனிவடைந்துள்ள இலங்கை தனது நட்பை ஆசியாவில் நிலைநிறுத்த மேற்கொள்ளும் முயற்றியில் உள்ளது. இதற்கு இது போன்ற நாடகங்கள் பெரும் உதவியாக இருக்கும்.

அத்துடன் தழிழீழ அனுதாபிகள் மூலம் ஸ்ரீலங்காவும் தனது பிரசாரங்களை மேற்கொண்டு புலம் பெயர் தமிழர்களை நாட்டுக்கு வரவழைப்பதுடன், புலம் பெயர் தமிழ் சமூகத்தின் போராட்டங்களின் அரசியல் தாக்கத்தை குறைக்கவும், மேலும் புதிய முதலீடுகளை இலங்கையில் மேற்கொள்ள புலம் பெயர் தமிழ் சமூகத்தை தூண்டவும் முடியும் என்பது தான் இவர்களின் திட்டங்கள்.

அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை நிகழ்வுகளாக கருதாமல் கைதட்டாமல். எதற்காக என்று சிந்திக்க வேண்டும்.

மௌனமாக இருந்தது போதும் துணிந்து பிழைகளை சுட்டிக்காட்டி இராஜதந்திர வலைகளை அறுக்க வேண்டும்.

எமது விடுதலைக்கு நாம் போராடுவதை விடுத்து அடுத்தவனை நம்பாதீர்கள்.


போர் முனையில் பலரிடமும் ‘கமரா” மற்றும் ‘கமராபோன்” இருந்தமைக்கு பாதுகாப்பு அமைச்சே ஆதாரம்.

September 15, 2009

000சனல்-4 இல் ஒளிபரப்பாகி உலகத்தின் கவணத்தை ஈர்த்த அந்தக் கொலைக் காட்சி யாவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இலங்கையில் நடந்து முடிந்தாக கூறப்படும் யுத்தத்தின் இறுதி மாதங்களில் பதிவு செய்யப்பட்ட அந்த ஒளிநாடா பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

தமிழ் மக்கள் நாள்தோறும் கண்ணால் கண்டும்,அனுபவித்தும் வரும் இத் துன்பங்கள் ஊடக நிறுவனங்களின் செய்தி பஞ்சத்தை பொறுத்து தான் வெளிவரும். இதனால் பல சம்பவங்கள் பாதிக்கப்பட்ட நபருடன் முடிவடைந்ததுண்டு.

இவ் உண்மைச் சம்பவங்கள் பலவும் அப்படியாம்?! இப்படியாம்?! மெய்யே? என்று அச்சமூட்டும் ஒரு வதந்தி போல அது திரிபடைந்ததும் உண்டு.

கடந்த 30 வருட கால யுத்தத்தில் தமிழ் மக்கள் விலங்கினத்தில் கேடுகெட்ட இனமாக கருதப்பட்து போலவே இருந்தது.

இறுதி சமாதான நடவடிக்கை காலத்தில் நாளுக்கு இரண்டு மூன்று என மாத்திரை விழுங்கிய கணக்கில் கொலையாளிகள் தமது மனநேயை தீர்த்துக் கொண்டிருந்தனர்.

‘நாயைச் சுடுகின்ற மாதிரி மனுஷனைச் சுடுகின்றான்” என்ற வழக்க சொல் ‘ மனுஷனைச் சுடுகிற மாதிரி நாயைச் சுடுகின்றான் என இரண்டு நாய்கள் தமக்குள் பேசின” என்று நகைக்குமளவுக்கு கொலைகள் இடம்பெற்றது.

கடந்த 30வருட யுத்த காலத்தில் அனுபவித்த துன்பங்கள் பலரின் மனக் கண்களில் இன்றும் இருக்கின்றன.

இந்திய இராணுவத்தின் பல படுகொலைகள் பாலியல் வல்லுறவுகள், என்பனவும் இதில் அடங்கும்.

இந்திய இராணுவத்தின் ஒரு சுற்றி வளைப்பின் போது இளைஞன் ஒருவன் தாக்கப்பட்டான் அவன் அன்று அம்மா என்று கதறிய கூக்குரல் இன்று வரை என் காதில் கேட்டுக் கொண்டிருக்கின்றது. ஏனெனில் நான் அப்போது சிறுவனாயிருந்தேன் என் மனது பாதிப்புக்குள்ளானது.

அடக்கு முறையின் ஒவ்வெரு உதாரணங்களையும் ஒவ்வொரு தமிழனிடமும் கேட்டு அறிந்து கொள்ளலாம்.

இப்படியாக மறைக்க முற்பட்ட சாட்சிகளில் ஒன்றாக இருந்த அந்த படுகொலை காட்சியாக்கப்ட்டு உலகின் கண்களுக்கு முன்வைக்கப்பட்டுள்ளது.

இச் சாட்சியை கண்டு அஞ்சியது  மகிந்த அரசு.

உண்மையில் குறிப்பிட்ட காட்சி திட்டமிட்ட பரப்புரைக்காக காட்சிபடுத்தப்பட்டதல்ல.

கொலைவெறி இன்பத்தை பகிர்வதற்காக பதிவு செய்ப்பட்ட குறிப்பிட்ட காட்சியானது ஜனநாயகத்தை விரும்பும் உண்மையான நபர் ஒருவரின் கைக்கு கிட்டியது தான் இதன் வெற்றி. இப்படி வம்புக்காக எடுத்த படங்கள் சில இணையத் தளங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதை அவதானிக்கலாம்.

போர் முனையில் இருந்த இராணுவத்தினர் பலரிடமும் ‘கமரா” மற்றும் ‘கமராபோன்” இருந்தன இதற்கு பாதுகாப்பு அமைச்சு பல தடைவைகளில் வெளியிட்ட போர் தொடர்பான படங்களே ஆதாரம்.

சனல்-4இல் ஒளிபரப்பப்பட்ட அந்த காட்சி உண்மைக்கு புறம்பானது எனவும் இது போன்ற செயல்களில் தம் படையினர் ஈடுபடவில்லை என்றும் இலங்கை அரசு ஆணித்தரமாக மறுக்கின்றது. (இலங்கையில் மனிதர்கள் எப்பொழுது மனிதாபிமானத்துடன் செயற்படுகின்றார்கள், மனிதனின் மரணப் படுக்கையான வேளையில், கடவுளின் இல்லமாக தெரியும் வைத்தியசாலையில் கூட அது இல்லை.)

இதை விட இராணுவத்தின் புலனாய்வுத் துறையின் பின்னனியுடன் இயங்கும் இலத்திரனியல் ஊடகங்கள் பலவும் அந்தக் கொலையில் ஈடுப்பட்டிருப்பவர்கள் புலிகள் எனவும் அதில் கொல்லப்படும் நபர் ஒருவர் புளொட்டின் வவுனியா உறுப்பினர் பாருக் எனவும் தெரிவித்திருந்தன.

தெளிவாயிருந்த பலர் அவ் ஊடகங்களின் அச் செய்திகளுக்கு தமது விமர்சனங்களை தெரிவித்துள்ளதுடன் பாருக் என்பவர் தற்போது திரிகோணமலையில் வசித்து வருவதாவும் தெரிவித்துள்ளனர்.

இங்கு கவணிக்க வேண்டிய விடயம் என்ன வென்றால். வெளிநாட்டில் வாழும் தமிழர்களை இலக்கு வைத்து அரசு மேற்கொண்டு வரும் சதி முயற்சிகளில் தமிழ் மக்கள் தம்மை பாதுகாக்க வேண்டும் என்பதே.

1.ஏற்கனவே போரில் ஈடுபட்ட இராணுவத் தளபதிகள் சிலர் வெளிநாடுகளில் தங்கியுள்ளனர்,மற்றும் வெளிநாட்டு வீதிகளில் போராடவும் தொடங்கியுள்ளனர், 2.தவிரவும் விடுதலைப் புலிகளுக்கு புனர்வாழ்வு என்ற பேரில் புலனாய்வாளர்கள் வெளிநாடகளுக்கு குறிப்பாக மலேசியா மற்றும் அரபு நாடுகளுக்கு அனுப்பட்டுள்ளனர், 3.வடக்கு கிழக்கு அபிவிருத்தி என்ற மாயயை தேற்றுவித்து புலம் பெயர் தமிழர்களின் மன நிலையை கவருதல் போன்ற பல கோணங்களில் வலைவீசப்பட்டுள்ளது.

இந்த அடிப்படையிலேயே குறிப்பிட்ட சில ஊடகங்கள் அரசிலும் அதிக அக்கறையாக இவ்விடயத்தை மறுத்து செய்திகளை வெளியிடுவதுடன் நாட்டில் புலிகள் இல்லை என்று அரசு கூறுவதற்கு முரணாக புலிகளுக்கு எதிரான தமது வெறுப்புனர்வை காட்டுகின்றனர்.

தவிர குறிப்பிட்ட ஒளிநாடா தொடர்பான பத்து நாள் விசாரனைகள் முடிவடைந்து அது தொடர்பான அறிக்கையும் வெளியிடப்பட்டதுடன், ‘சனல்-4 நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுப்பதற்கு சட்மா அதிபருடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும். இது சனல்-4 நிறுவனத்திற்கு சாவலாக அமைவதுடன் ஏனையோருக்கு படிப்பினையாகவும் இருப்பதே எமது நோக்கம் என அமைச்சர் சமரசிங்க கூறியுள்ளார்.

‘தொடுகை வடிவ உலகில்” வாழுந்து கொண்டிருக்கின்றோம் என்பதை மறந்து குறிப்பிட்ட விசாரனையாளர்கள் அறிக்கை மற்றும் விளக்கங்களை வெளியிட்டிருப்பது நகைப்புக்கிடமானது.

கைத்தொலைபேசி கமராக்களின் தரத்தை குறைத்து மதிப்பிட முடியாது என்பதை குறிப்பிட்ட விசாரனைக் குழு முதலில் ஏற்க வேண்டும்.

மேலும் காட்சி எதில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை விட சம்பவமே முக்கியமானது. குறிப்பிட்ட விசாரனையாளர்கள் காட்சிப்படுத்தப்பட்ட கருவி எது என்பதற்கான விளக்கத்தை முன்வைக்கின்றனரே தவிர அக்காட்சி பொய்யானது என்று கூறமுடியவில்லை.

பதிவுசெய்யப்பட்ட கருவியை எது என்பதை நிருபிப்பதன் மூலம் அச்சம்பவத்தை மறைக்க முடியாது.

அச் சம்பவத்தை மூடிமறைத்தாலும் இது போன்ற அதிர்ச்சி தரும் ஏனைய விடயங்கள் எதிர் காலத்தில் அம்பலத்துக்கு வருவதை தவிர்ப்பதற்காண நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது.

கைத்தொலைபேசியில் பதிவு செய்யப்படும் படங்களின் தரம் கிடைக்கப்படும் ஒளியைப் பொறுத்தும் குறித்த காட்சியை நோக்கிய வில்லையின் சுருக்கமும் படத்தின் தரத்தை நிர்ணயிக்கும். ஒளிநாடாவாக இருந்தால் கமராவின் அசைவின் வேகமும் காட்சியின் தரத்தை நிர்ணயிக்கும், கைத்தொலைபேசியில் எடுக்கும் படங்கள் ஒளிநாடாவாக இருந்தாலும் சரி, ஒளிப்படமாக இருந்தாலும் சரி வில்லையை சுருக்காது நிலையான தூரத்தை பயன்படுத்தினால் மாத்திரமே சிறந்த காட்சியை பெற முடியும். காட்சிக்கு அருகில் சென்று பதிவு செய்தல் சிறந்த தரமான காட்சியை பதிவுசெய்யலாம்.

கைத்தொலைபேசியில் மாத்திரம் படப்பிடிப்பு செய்யும் இந்த பதிவை பார்வையிடுங்கள்.  http://vincentjeyan.blogspot.com/

சனல்-4 இல் காண்பிக்கபட்டுள்ள காட்சியானது. வில்லை சுருக்கத்துக்கு உட்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்பது தொளிவாக உணரப்படுகின்றது.

குறிப்பிட்ட காட்சி தொடர்பான விசாரனையின் இறுதியில் இலங்கை அரசு அறிவித்திருக்கும் எச்சரிக்கையானது நாடுகடந்த வன்முறையை முன்னெடுக்கும் நோக்கத்தின் வெளிப்பாடாக பொருள்கொள்ள வேண்டும்.

விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் செ.பத்மநாதன் கைது செய்யப்பட்டுள்ள விவகாரத்துடன் இதனையும் ஒன்றித்து கவணிக்க வேண்டும்.

சனல்-4இல் வெளியாகிய குறிப்பிட்ட ஒளிநாடா உற்பட, இறுதிப் போரின் சில கோரக் காட்சிகளை சீனா மற்றும் ஜரோப்பிய நபர்களுடன் பகிர்ந்து கொண்ட போது இது எங்கு இடம்பெற்றது என்று கேட்டதுடன், அக்காடசிகளை காண்பித்ததற்காக தரக்குறைவாகவும் என்னை மதிப்பிட்டார்கள். அதாவது இதுபோன்ற காட்சிகளை காண்பிக்க வேண்டாம் என்று கூறுகின்றார்கள்.

மேற்கு உலகமும் மோக உலகமும் இது போன்ற வன்முறைகளை கற்பனை கதைகளாகவும், திகிலூட்டும் திரைப்படமாகவும் தான் பார்க்க விரும்புகின்றதே தவிர உண்மையாக நிகழும் சம்பவத்தை பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை.

இது போன்ற வன்முறை காட்சிகளைப் பார்த்து மக்கள் மனச்சுமையுடன் இருப்பதை அந்த நாட்டு அரசுகளும் ஊடகங்களும் விரும்பாமல் இருப்பதற்கு காரணமும் உண்டு, ஏனெனில் இரண்டாம் உலகப்போரின் வடுக்களில் இருந்து மக்களை மீட்டெடுத்து நாட்டின் அபிவிருத்தியை பற்றி சிந்திக்கின்றார்கள்.

பார்ப்பதற்கே விருப்பமில்லாத இக் காட்சிகளை எம்மக்கள் அனுபவித்து வருவதற்கு வழி அமைத்தவர்கள் யார்? ‘பயங்கரவாத்தை ஒழிக்க தமது முழு ஆதரவும் உண்டு” என கூறிய சர்வதேசம் தான் இதற்கு பொறுப்பு கூறவேண்டும்.

இதற்கு தமிழ் மக்களாகிய நாம் என்ன செய்யப்போகின்றோம்.

தொடர்ந்தும் காலம் தப்பிய அறிக்கைகளை வெளியிடுவதையும் கருத்துக் கூறுவதையும் தவிர்த்து, எதிர் அறிக்கைகளையும் எதிர் நகர்வுகளையும் செய்வதற்கு சுறுசுறுப்பாய் இருக்க வேண்டும். இவ் நடவடிக்கையை கடந்த காலங்களை விட தற்போதே முழுவேகத்துடன் செய்யவேண்டும்


நவீன கிட்லரின் நடைமுறைகளை கற்பது அவசியமா?

September 2, 2009

ஸ்ரீலங்கா இராணுவத்திடம் இருந்து பாக்கிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகள் பயிற்சி எடுக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

ஸ்ரீலங்கா இராணுவம் ஆளனி,படைக்கலன்களின் பெருக்கம் மற்றும் அதிகூடிய(பரந்த கொலைவெறி) சூட்டு வலு காரணமாக , உள்ளுர் வளங்களுடன் மற்றும் பெருளாதார,மருத்துவ நெருக்கடியின் மத்தியில் போராடிய அமைப்பை வெற்றிகண்டுள்ளமையை வெற்றி என்று கூறலாமா?

ஸ்ரீலங்கா இராணுவத்திடம் பயிற்சி எடுக்க உத்தேசித்துள்ள நாடுகள் எதற்காக பயிற்சி எடுக்க திட்மிட்டுள்ளன. இன அழிப்பு நடவடிக்கைக்கா? அல்லது சிறந்த இராணுவ நிபுணத்துவத்திற்கா?

எதுவாக இருந்தாலும் இதற்கு பிரபல்யம் மிக்கவர்களில் கருணாவும் ஒருவர் என்பதை மறந்துவிடக்கூடாது.

சிலாவத்துறையில் ஆரம்பித்த வடமுனை போரானது எந்த இராணுவ தந்திரத்தை பின்பற்றியதாக அல்லது ஏதாவது புதிய தந்திரத்தை பின்பற்றியதாக இருந்ததா? என்பதை ஆராயமல், ஸ்ரீலங்கா படைகளிடம் பயிற்சி பெறவுள்ள இத் திட்டம் தவறானது என்றே கருத இடமுண்டு.
போர் ஆரம்பித்த முதற் கொண்டு இடைவிடாத தாக்குதல் முறையையே படைகள் பின்பற்றி வந்தன. மேலும் பரவலான தாக்குதல் முறைகள் இதில் விமான குண்டுத் தாக்குதல்கள் முழத்திற்கு முழம் இடம் பெற்றதாகும்.

ஏற்கனவே ஊடுருவியிருந்த(ஒப்பந்த காலத்திலோ அதற்கு முன்னரோ) படையினர் தகவல்களை துல்லியமாக வழங்கியிருந்ததினால் விமானத் தாக்குதல்கள் சில வெற்றியளிப்பவையாக இருந்தது. மேலும் வீதியோர கிளைமோர் தாக்குதல்களையும் ஆழ ஊடுருவும் படையணியினர் மேற்கொண்டதினால் மக்கள் மத்தியில் பதட்டம் அதிகரித்து இருந்தது.
ஆழ ஊடுருவும் படையணியினர் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் ஊடுருவது மிகக் கடினமான ஒரு விடயமல்ல.

 ஏற்கனவே மடுவை அண்டிய காடுகள் ஊடாக புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பொருட்கள் எடுத்து வரும் செயற்பாடுகள், இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் மக்கள் தப்பிச் செல்லுதல் போன்றன இடம் பெற்று வந்தன. இந்த காடுகளை அண்டிய எல்லைகளில் புலிகளின் காவலரண்கள் இருக்கவில்லை.

யானைகள் மற்றும் காட்டு மிருகங்கள் அதிகமாக உள்ள பகுதியாகவும் இவை காணப்பட்டன.இராணுவத்தைப் போல் நடு காட்டில் முழு நீளத்திற்கும் கம்பி வேலி அடித்து காவலரன் அமைத்து இரவு பகல் கடமையில் ஈடுபடக் கூடிய வசதி புலிகளிடம் இருக்கவில்லை.

ஆகவே தான் 1996 ஆம் ஆண்டு குறிப்பிட்ட காடுகளை அண்டிய பகுதியில் அப்போது பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த அனுருத்த ரத்வத்தை சென்ற உலங்குவானூர்தி தொழிநுட்ப கோளாறு காரணமாக தரை இறங்கியதும் பின்னர் அந்தப்பகுதி வாசி ஒருவர் மனிதாபிமானமாக நேர்மையாக நடந்துகொண்டதினால் அமைச்சர் கால் நடையாக இராணுவ பகுதியை சென்றடைந்தமையும்,அமைச்சரால் அந்த தமிழ்மகனுக்கு எதிர்கால நல்வாழ்வு பற்றி நன்றியாக கூறப்பட்ட வக்குறுதிகள் நிறைவேற்றாமையும் ஞாபகம் இருக்கக் கூடிய கதைகள்.

இந்தச் சம்பவத்தின் பின்னர் புலிகளின் பகுதிக்குள் படையினர் ஊடுருவது தொடர்பகாக ஆராயப்பட்டு அதற்கென ‘ஆழ ஊடுருவும் படையணி” பொரளையில் கொல்லப்பட்ட மேஜர் நத்தலிப் தலைமையில் அமைக்கப்படது.

இவை எல்லாம் கோட்டபாயவுக்கோ அல்லது சரத் பென்சேகாவுக்கோ உதித்த புத்திகள் அல்ல.

மேலும் சமாதான கால பகுதியில் விடுதலைப் புலிகளின் கோரிக்கைகளுக்கு இணங்குவது போல பாசங்கு செய்து புலிகளின் அமைப்புக்குள் ஊடுருவிய ரணில் அரசு விடுதலைப் புலிகளின் பல கப்பல்களை தாக்கி அழித்ததுடன் முக்கிய தாக்குதல் தளபதியான கருணாவை புலிகள் அமைப்பில் இருந்து பிரித்தெடுத்தமை போன்ற உறுதியான அடிப்படை வெற்றிகளின் விளைவுகளும், இந்தியா சீனா, பாக்கிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளின் தொழில்நுட்பவியல் உதவிகளும் ஒன்று குவிந்தமை புலிகளின் இராணுவ கட்டமைப்பை சிதைக்க உதவியது.

இதற்கு மேல் கடந்த சுமார் 3வருடத்திற்குள் பதவியேற்ற சரத் பென்சேகாவின் இராணுவத் தலைமையோ, பாதுகாப்பு செயலாளரின் உத்திகளோ அல்லது ஜனாதிபதியின் திறமையான திட்டமிடல்களோ புலிகளின் இராணுவ பலத்தை சிதைத்தது என்று கருத முடியாது.

முப்பது வருட போரின் இறுதி நான்கு வருடங்களில் இருதரப்பினராலும் மனித உரிமைகள் மிகவும் மோசமாக மீறப்பட்டமையானது மக்களை வெகுவாக பாதித்தது. இதனால் மக்களின் விடுதலை உணர்வும் பாதிக்கப்பட்டதுடன், போராட்ட நிலையிலிருந்தும் ஒதுங்கினர்.

அதிலும் மாவிலாறில் போர் ஆரம்பித்து முதற் கொண்டு பல்வேறு அமைப்புக்கள் மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என பல எச்சரிக்கைகளும் கவலைகளும் வெளியிடப்பட்ட போதும் அவை கணக்கில் எடுக்கப்டாமல் இடைவிடாத போர் நடத்தப்பட்டுக் கொண்டிருந்தது.

இதனிடையே கருணாவின் பிரிவு முதற் கொண்டு தொடர் தோல்விச் செய்திகளை தமிழ் மக்களையும், ஈழ விடுதலை உணர்வாளர்களையும் உளவியல் ரீதியாக பாதிக்கும் வகையில் தொடர் பிரசாரங்களில் ஸ்ரீலங்கா அரசு ஈடுபட்டு வந்தது.

இதற்கு சாதகமாக கருணாவின் முழு கட்டுப்பாட்டிலிருந்த கிழக்கு பகுதியை முதலில் கைப்பற்றும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வெற்றிச் செய்தியை அறிவித்து, அது தொடர்பான காட்சிகளை அடிக்கடி தேசிய தொலைக்காட்சிகளில் காண்பித்து, நாட்டு மக்களில் ஒரு பகுதியினரை இராணுவ மயமாக்கியதுடன், இன்னுமொரு பகுதியினரை உளவியல் தாக்கத்திற்கு உள்ளாக்கியது.

இறுதிக்கட்ட போர் மாவிலாற்றில் ஆரம்பமாகியது முதல் முள்ளியவாய்க்கால் வரை கண்மூடித் தனமான தாக்குதல்களை படையினர் மேற்கொண்டனர். இதில் பல ஆயிரக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர், மற்றும் காட்டு விலங்குகள் பலவும் உயிரிழந்தன.

கண்மூடித்தனமான இத்தாக்குதல்களை குறைந்த ஆளனியுடன், குறைந்தளவு இராணுவ தளபாடங்களுடன், சுமார் 3 வருடங்கள் விடுதலைப் புலிகள் சமாளித்துள்ளார்கள் என்பது தான் முக்கிய விடயம்.

அள்ளிவீசியெறிந்த குண்டுகளின் புறத்தல், கட்டவிழ்க்கப்பட்ட பட்டிகளைப் போல் கவச வாகன சகிதம் வருகை தந்தவர்களை தடுத்து நிறுத்தி பல உக்கிர தாக்குதல்களையும் புலிகள் மேற்கொணடனர்.

மேலும் இதற்கென புலிகளால் அமைக்கப்பட்ட பதுங்கு குழிகளும் தடுப்பு மண் அணைகளும் பல இராணுவ நிபுணர்களை வியப்பில் ஆழ்த்தியது.
இறுதி வரை மனோதிடத்துடன் போராடிய புலிகளுக்கு பல நாடுகளாலும் ஸ்ரீலங்கா அரசுக்கு வழங்கப்பட்ட தொழிநுட்ப உதவிகள் பெரும் சாவலாக அமைந்தது.

ஒவ்வொரு உறுப்பினரினதும் அசைவினை மிகத் துள்ளியமாக அவதானிக்கக் கூடிய கருவிகள் இராணுவத்திற்கு வழங்கப்பட்டிருந்தன. புலிகள் பயன்படுத்தும் வாகனத்தின் இலக்கத் தகடுகளைக்கூட அவதானிக்கக் கூடிய தொழில்நுட்பம் அரசிற்கு பிற நாடுகள் வழங்கியிருந்தன..

மற்றும் புலிகளின் கட்டுப்பாட்டுபகுதியில் இருந்த மக்களுக்கு பொருளாதார நெருக்கடிகளும், மருத்துவ நெருக்கடிகளும் ஏற்படுத்தப்பட்டமை புலிகளையும் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாக்கியது.
இப்படியான ஒரு சூழலில் நிகழ்ந்த இப் போராட்டத்தில் மீட்புப்பணிகளை இறுதிவரையும் புலிகள் மேற்கொண்ட வண்ணமே இருந்தனர்.

வார்த்தைகளால் விபரிக்க முடியாத துன்பத்தை மக்களுக்கு ஏற்படுத்திவிட்ட இந்த போரில் இராணுவத்தரப்பு மேற்கொண்ட உத்தி இடைவிடாத தாக்குதல் மற்றும் கண்மூடித்தனமான தாக்குதல். அதாவது ‘தேனியை கொட்டுடன் கொழுத்தி தேன் எடுக்கும்” முறை போன்றே இப்போர் நடந்து முடிந்துள்ளது..

  • இதில் பிற நாடுகள் கற்றுக் கொள்வதற்கு என்ன உள்ளது?
  • இன அழிப்பு எப்படி என்றா?
  • அல்லது தாம் வழங்கிய ஆயுதங்களின் பயன்பாடு எவ்வாறிருந்தது என்பதின் மதிப்பீட்டிற்கா?
  • அல்லது ஸ்ரீங்கா அரசு மேற்கொண்ட மனித உரிமை மீறல்களை மறைப்பதற்கு வசதியாக ‘பயங்கரவாதத்தை வெற்றிகொண்ட அரசு” என்ற கௌரவத்தை கொடுப்பதற்காகவா?

இராணுவப் பயிற்சியை பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ள கதையானது நிச்சயமாக ஸ்ரீலங்கா அரசின் மனித உரிமை மீறல் சம்பவங்களை உலகம் மறப்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சியாகவே நோக்க இடமுண்டு.

இவ் இறுதிக் கட்ட போர் ஆரம்பித்த நாள் முதற் கொண்டு புலிகள் மீது அரசாங்கம் கடுமையான குற்றச்சாட்டை அரசு சுமத்தியதுடன், புலிகள் தாக்கியதினால் தான் தாம் தாக்கியதாகவும் கூறிவந்தது.

இந்தக் காலப் பகுதியில் உள்ளுர் ஊடகவியலாளர்களை அடக்கப்பட்ட நிலையில், பிரபல வெளிநாட்டு ஊடகங்களில் அரச அறிக்கைகள் முதன்மை இடத்தை பிடித்திருந்தமையும் அரசாங்கத்திற்கு போர் பிரசாரத்திற்கு சிறந்த வசதியை ஏற்படுத்தியிருந்தது..

மேலும் சில முக்கிய சம்பவங்கள் தொடர்பாக விடுதலைப் புலிகளும் ஊடகங்களுடன் உடனுக்கு உடன் தொடர்பு கொள்ளாமை அல்லது தொடர்பு கொள்ள வசதி கிடைக்காமையானது அரசிற்கு மேலும் சாதக நிலைமையை உருவாக்கியிருந்தது.

அதாவது அரசிற்கு கிடைத்த அல்லது தனது அதிகாரத்திற்கு உட்பட்டிருந்த சகல வளங்களையும் போருக்கு என அரசு முதன்மைப்படுத்தியிருந்தது.

இதன் காரணமாக உள்ளுர், சர்வதேச தொண்டு நிறுவனங்களும் அரசின் சட்ட திட்டங்களுக்கு அடிபணிய வேண்டி இருந்ததுடன், சில தொண்டர்கள் கொல்லப்படவும், நாட்டைவிட்டு வெளியேறவும், சிலரின் பயணஅனுமதிகள் ரத்துசெய்யப்படவும் நேரிட்டது.

இவ்வாறு தனது அதிகாரத்தை பயன்படுத்தி சகல தரப்பினரையும் அடுக்கு முறைக்குட்படுத்தியே இந்தப் போரில் அரசு வென்றது.

இன்னொரு கிட்லர் பிறப்பே புலிகளின் இராணுவ தோல்விக்கு காரணமாக இருந்தது. நவீன கிட்லரின் நடைமுறைகளை கற்பது அவசியமா?


பகற் கொலைகள்-ஜெ.டி.எஸ் திடுக்கிடும் செய்தி.

August 26, 2009
VIDEO^

VIDEO^

ஏற்கனவே பல தமிழ் ஊடகங்கள் இனப் படுகொலையை கூறிவந்த போதும் அத் தகவல்களை உறுதிப்படுத்த முடியவில்லை என்று கூறிவந்த பிறமொழி ஊடகங்களுக்கும் சர்வதேசத்திற்கும் இன்னொரு சாட்சியை ”இலங்கையின் ஜனநாயக ஊடகத்திற்கான அமைப்பு” உலகிற்கு உலகிற்கு முன்வைத்துள்ளது.

  1. இறுதி யுத்த களத்தில் சுமார் 25 யிரம் பேர்வரை மாண்டுள்ளனர்
    சிங்கள தாய்மார்களே உங்கள் பிள்ளைகள் தமிழனை வெற்றி கொண்டதாக கூறப்படும் இக் காட்சியை பார்த்து பாற்சோறு பொங்கி, புத்தனுக்கும் கொடுத்து புதல்வருக்கும் கொடுங்கள். VIDEO^ சிங்கள தாய்மார்களே உங்கள் பிள்ளைகள் தமிழனை வெற்றி கொண்டதாக கூறப்படும் இக் காட்சியை பார்த்து பாற்சோறு பொங்கி, புத்தனுக்கும் கொடுத்து புதல்வருக்கும் கொடுங்கள்.

    மேலும் 25 யிரம் பேர்வரை காயப்பட்டுள்ளனர் என களத்திலிருந்து ஒலித்தது தளபதி சூசையின் குரல். இறந்தவர்கiளை அந்தந்தப்படியே புதைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று மக்கள் மூலமாக கசிந்த தகவல் வதந்தி என்று கூறப்பட்டது.

  2. பெண் புலி உறுப்பினர் ஒருவர் களத்தில் தாம் கண்ட
    பெண் புலி உறுப்பினர் ஒருவர் களத்தில் தாம் கண்ட தகவல் என்று கூறுகின்றார் ஆண் பெண் யாவரையும் நிர்வாணப்படுத்தி சோதனை செய்வதையும், குறிப்பிட்ட வயது தரத்தினரை தனியான அழைத்து சென்று சுட்டுக் கொள்வதையும் தாம் தொலைநோக்கி ஊடாக அவதானித்ததை கூறியிருந்தார்.  VIDEO^ பெண் புலி உறுப்பினர் ஒருவர் களத்தில் தாம் கண்ட தகவல் என்று கூறுகின்றார் ஆண் பெண் யாவரையும் நிர்வாணப்படுத்தி சோதனை செய்வதையும், குறிப்பிட்ட வயது தரத்தினரை தனியான அழைத்து சென்று சுட்டுக் கொள்வதையும் தாம் தொலைநோக்கி ஊடாக அவதானித்ததை கூறியிருந்தார்.

    தகவல் என்று கூறுகின்றார் ஆண் பெண் யாவரையும் நிர்வாணப்படுத்தி சோதனை செய்வதையும், குறிப்பிட்ட வயது தரத்தினரை தனியான அழைத்து சென்று சுட்டுக் கொள்வதையும் தாம் தொலைநோக்கி ஊடாக அவதானித்ததை கூறியிருந்தார்.

  3. மேலும் விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் யாவரும் கொல்லப்பட்டு புலிகள் செயலிழந்த பின்னர், அவ் உடல்கள் இருந்த பகுதியிலிருந்து இராணுவத்தரப்பு செய்தியாளர்கள் பேட்டிவழங்குகையில் பின்னனியில் துப்பாக்கி சூட்டு சத்தங்கள் கேட்கின்றன. அதற்கான விடை இன்று கிடைத்துள்ளது
  4. மேலும் சாட்சியங்கள் அழிக்கப்படுகின்றது என்றும் கூறப்பட்டது, அதுவும் காதில் ஏறவில்லை.
    விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் யாவரும் கொல்லப்பட்டு புலிகள் செயலிழந்த பின்னர், அவ் உடல்கள் இருந்த பகுதியிலிருந்து இராணுவத்தரப்பு செய்தியாளர்கள் பேட்டிவழங்குகையில் பின்னனியில் துப்பாக்கி சூட்டு சத்தங்கள் கேட்கின்றன. அதற்கான விடை இன்று கிடைத்துள்ளது  VIDEO^ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் யாவரும் கொல்லப்பட்டு புலிகள் செயலிழந்த பின்னர், அவ் உடல்கள் இருந்த பகுதியிலிருந்து இராணுவத்தரப்பு செய்தியாளர்கள் பேட்டிவழங்குகையில் பின்னனியில் துப்பாக்கி சூட்டு சத்தங்கள் கேட்கின்றன. அதற்கான விடை இன்று கிடைத்துள்ளது 
  5. இங்கே கண்கள் கட்டப்பட்டு, நிர்வாணப்படுத்தி, பல கொடுமைகளின் பின்னர் கொல்ல அழைத்து வரும் போது (-0.21செக்கனில்)‘அம்மா” என்று கதறும் போது கூட மனதுருக முடியாத காட்டுமிராண்டித் தனத்தை அரசு நிகழ்த்தியுள்ளது. இங்கு ஒரு சிங்கள இராணுவ காவாலி கூறுகின்றான் (-0.26செக்கனில்)‘ உவனை தான் என்னட்ட தார கேட்டேன், (-0.03செக்கனில்)போடு போ…டு எங்கட அரச சொத்துக்கு அடிச்சமாதிரி அடிக்கவேண்டும்”

ஒரு இராணுவ சிப்பாய்யின் கைத்தொலை பேசியில் சிக்கிய இக் காட்சி உண்மையை நிருபிப்பதற்காக வெளியிடப்பட்டதா? அல்லது தனது கொலை வெறி இன்பத்தை பகிர வெளியிடப்பட்டதா என்ற விவாதத்திற்கு அப்பாற்பட்டு ஒரு சாட்சியாக உள்ளது இக் காணொளி, ஏற்கனவே தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனின் புகைப்படமும் வெளிவந்திருந்தமை தெரிந்ததே. இது போன்ற பல பாலியல்பலாற்காரம் மற்றும் கொலைகள் சம்பந்தப்பட்ட சாட்சியங்கள் வெளிவரவுள்ளதாக அறிய முடிகின்றது.

சிங்கள தாய்மார்களே உங்கள் பிள்ளைகள் தமிழனை வெற்றி கொண்டதாக கூறப்படும் இக் காட்சியை பார்த்து பாற்சோறு பொங்கி, புத்தனுக்கும் கொடுத்து புதல்வருக்கும் கொடுங்கள்.

பயங்கரவாத அரச நிர்வாகத்தினரை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

May 15, 2009

இலங்கையில் ‘ஜனாயகம்” என்ற சொற்பதமே பயன்பாட்டில் இல்லாத நிலையில் அரசாங்க கட்டுப்பாட் பகுதிகளில் வசித்து வருபவர்களிடமிருந்து வெளிவரும் கருத்துக்களை உண்மை என்ற எடுகோளை பயன்னடுத்துவது மிகப் பெரிய பாதிப்பினை ஏற்றகனவே பாதிப்புக்குள்ளாகி உள்ளனோருக்கு மீண்டும் பாதிப்பினை ஏற்றடுத்தும் என்பதனை மிகவும் வேதனையுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

சிங்கள தாய்மார்களே உங்கள் பிள்ளைகள் தமிழனை வெற்றி கொண்டதாக கூறப்படும் இக் காட்சியை பார்த்து பாற்சோறு பொங்கி, புத்தனுக்கும் கொடுத்து புதல்வருக்கும் கொடுங்கள். சிங்கள தாய்மார்களே உங்கள் பிள்ளைகள் தமிழனை வெற்றி கொண்டதாக கூறப்படும் இக் காட்சியை பார்த்து பாற்சோறு பொங்கி, புத்தனுக்கும் கொடுத்து புதல்வருக்கும் கொடுங்கள்.

யாழ் மாநகர சபை தேர்தல் மீண்டும் நட்த்தப்பட வேண்டிய ஒன்றாகும்.

August 26, 2009

அண்மையில் நடந்து முடிந்த மாநகர சபை தேர்தலின் போது குடாநாட்டில் சுமார் 20வீத வாக்குகளும் வவுனியாவில் 40 வீத வாக்குகளும் பதிவு செய்யப்பட்டிருந்தமை யாவரும் அறிந்ததே.

இதில் யாழில் 20வீதமான வாக்கு பதிவுக்கு மக்களின் ஆர்வமின்மை மட்டுமல்ல தன்னுடைய பிழை ஒன்றும் நிகழ்ந்ததாக அமைச்சர் டக்லஸ் தேவானந்தா ஆகஸ்ட் 09 பிபிசியின் தமிழோசை நிகழ்ச்சிக்கு வழங்கிய பேட்டியின் போது தெரிவித்திருந்தார்.

‘யாழ்ப்பாணத்திற்கு எடுத்து வரப்பட்ட வாக்காளர் அட்டை 94,087 அதிலும் 56,543 மட்டுமே விநியோகிக்கப்பட்டன, மிகுதி குறிக்கப்பட்ட ஆட்கள் இன்மையாலும் சரியான ஒழுங்குபடுத்தல் இன்மையாலும் விநியோகிக்கப்பட் வில்லை என்றும், மேலும் அட்டைகள் விநியோகிக்கப்ட்டவர்களில் சுமார் 10,000 வாக்காளர் தற்போது இல்லை என்று எடுத்தாலும், 10,000 அடையாள அட்டை பிரச்சனை காரணமாக வாக்களிக்க முடியவில்லை என்றும் கூறினார். தேசிய அட்டை திணைக்களத்தினுடைய இணக்கத்துடன் இராணுவம் அடையாள அட்டை கொடுத்திருந்தது, அந்த அடையாள அட்டை செல்லுபடியாகும் என்ற நினைப்புடன் இருந்ததால் இறுதி நேரத்தில் அந்த 10,000 வாக்காளர்கள் வாக்களிக்க முடியவில்லை.

இது அரசின் பிழையல்ல, இது என்னுடைய குறைபாடாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும், ஏனெனில் தேர்தல் வேலைகளில் மூழ்கியிருந்ததினால் அந்தப் பகுதியை கவணிக்கவில்லை, தேசிய அடையாள அட்டை திணைக்களத்தினால் அங்கிகரிக்கப்ட்ட ஒரு அடையாள அட்டையாக இருக்கின்ற படியினால் தேர்தல் ஆணையாளருக்கு சரியாக எடுத்துரைக்கப்படவில்லை அவருக்கு எடுத்துரைக்காததினால் தேர்தல் ஆணையாளர் அதனை தவிர்த்துவிட்டார்.”

இந்த கூற்றுக்களை கவணமாக ஆராய்ந்தால் இவ்வளவு நாட்களும் ஒப்புக் கொள்ளாத பல விடயங்களை அரசாங்கம் ஒப்புக் கொள்கின்றது என்று எடுக்கலாம்.

ஊடக அடக்கு முறை மூலம் ஏற்கனவே தணிக்கைக்கு உட்பட்ட விடயங்களை அமைச்சர் ஒத்துக்கொள்கின்றார்.

வாக்காளர் பட்டியல் அடிப்படையில் மட்டும்

சுமார் 37,544+10,000 வாக்காளர்களை புறக்கணித்துள்ள இத் தேர்தல் மீண்டும் நடத்தப்பட வேண்டிய அவசியம் உள்ளது என்ற ஒரு விடயமும் தொக்கிநிற்கின்றது.

சுமாராக 30 கிலோமீட்டர் பரப்பளவுள்ள யாழ் மாநகர சபையின் பகுதிகளுக்குள் ஏறக்குறைய 57,544 ஆயிரம் வாக்காளர்கள் இழந்துள்ளதாக கூறப்படும் இப் புள்ளி விபரங்களை பல்வேறு விதமாக ஆராயலாம்.

இராணுவ கெடுபிடிக்குள் குடாநாடு இருக்கின்றது என்று அமைச்சர் கூறும் கருத்தை அடையாள அட்டைகள் அடையாளப்படுத்திவிட்டன.

அரசினால் விடுவிக்கப்பட்டு அபிவிருத்தி பணிகள் இடம் பெறுவதாக கடந்த 14 வருடங்களாக கூறிவருகின்றது, இன்னும் அரசின் சேவைகள் மக்களை சென்றடையவில்லை என்பதற்கு இது முக்கிய எடுத்துக்காட்டு.

இரணுவ சிறையிலிருக்கும் குடாநாட்டு மக்கள் தேசிய அடையாள அடைடையிலும் பார்க்க இராணுவத்தினரால் வழங்கப்படும் ‘விஷேட அடையாள அட்டையை” முக்கியமாக கருதுகின்றனர்.

தேசிய ஆட்பதிவு திணைக்களத்தின் அனுமதியுடன் வழங்கப்பட்ட விஷேட அடையாள அட்டைகளை தேர்தல் ஆணையாளர் எடுத்த எடுப்பிலே அனுமதிக்காமை மற்றும் விஷேட அடையாள அட்டை தொடர்பான விளக்கம் அவருக்கு தேவைப்படுவதகவும் அமைச்சர் கூறுகின்றார்.

குடா நாட்டில் நபர் ஒருவர் தனது அடையாளத்தை நிரூபிப்பதற்கு எவ்வளவு சிரமத்தை எதிர் நோக்குகின்றனர், அடிப்படையில் உள்ள இச் சிரமம் தேர்தலில் மட்டுமல்ல ஒவ்வொரு விடயத்திலும் ஒவ்வொரு வரையும் பாதிக்கின்றது.

தேர்தல் வேலைகளில் மூழ்கிய அமைச்சர்

மாநகர சபை தேர்தல்களை முன்னிட்டே பல வேலைத் திட்டங்களை தற்போது மேற்கொண்டு வருகின்றீர்கள் என்ன ஊடகங்கள் பல தடவை கேள்விகளை எழுப்பிய போதெல்லாம், அப்படியல்ல எம்மக்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடைமைகளை செய்து கொண்டிருக்கின்றேன், என்று மக்களில் அக்கறை உள்ளவரென காண்பித்து வந்தார் அமைச்சர்.

தேர்தல் வேலைகளில் ‘மூழ்கியிருந்தபடியினால் அந்தப் பகுதியை கவணிக்க வில்லை” என்கின்றார்.

கட்சி தலைவர் என்ற ரீதியில் அதனை கவணிப்பதில் தவறில்லை. எனினும் கபடமில்லாத மக்கள் சேவகன் என்று காண்பித்து, உலகை ஏமாற்றுவதாக தெரிவிக்கின்றார்.

தவறை ஒத்துக் கொள்ளும் மகான்

‘அரசின் தவறில்லை என் தவறு” என்று கூறுவதால் குடா நாட்டை தமது கட்சியின் பிடிக்குள் வைத்திருப்பதை தெரிவிக்கின்றார்.

இது வெறும் தனிமனிதன் விட்ட தவறு என்று கருத முடியாது. அல்லது ஒரு அமைச்சர் விட்ட தவறாகவும் கருத முடியாது. அரசு விட்ட தவறாகவே கருத வேண்டும்.

எது எவ்வாறிருப்பினும் விடப்பட்டதாக கூறப்படும் இத்தவறானது சாதாரண விடயமல்ல.
யார்விட்ட தவறாக இலுந்தாலும் தேர்தல் முடிவுகளை தலைகீழாக்கி ஒரு பகுதியினரின் எதிர்காலத்தை வீணாக்கும் நடவடிக்கையாகவே இதை கருத வேண்டும்.

அமைதியான கள்ளவாக்கு சேகரிக்கும் தந்திரமாகவே இத்தவறு நிகழ்ந்திருக்கின்றது.
மேலும் ‘போத்தல் வாக்காளர்களை” (தமக்கு சாதகமான பகுதிகளை) நோக்கி வாக்காளர் அட்டைகள் விநியோகிப்பதற்கு சாதகமாகவே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

குறிப்பாக கடற்றொழிலாளர்களின் ஜீவனோபாயத்தை அச்சுறுத்தியே பெரும்பான்மையான வாக்குகள் பெறப்பட்டன. ஏனைய பகுதிகளுக்கு வாக்காளர் அட்டைகள் வழங்கப்பட்டால் வேறுவகையான பதில் கிடைக்கும் என ஏற்கனவே கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவல்களை அடிப்படையாக வைத்தே மீதி வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கவில்லை.

யாழ் மாநகர சபை தேர்தல் மீண்டும் நட்த்தப்பட வேண்டிய ஒன்றாகும்.

இதுவரை இவ்விடயத்தில் ஏனைய கட்சிகள் அக்கறை செலுத்தியதாக அறிய முடியவில்லை.

இதுவரை கவணிக்கப்டாத சுற்றுப்புறச் சூழல்
 
உலகிற்கு காண்பிப்பதற்கென வடக்கு கிழக்கில் நடக்கும் அபிவிருத்தி திட்டங்கள் முறையான சுற்றுப்புறச் சூழ்நிலைகளை உள்வாங்கி மேற்கொள்ளப்டுவதில்லை.

ஏற்கனவே குடாநட்டில் பல்வேறு வேலைத் திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. பெரும்பாலானவை சுற்றுப்புறச் சூழலை பெரிதும் பாதித்துள்ளன.

இந்த பின்னனியில், யாழ் மாநகர சபையும் அரசின் கைக்கு சென்றுள்ளதை கவணிக்க வேண்டும்.

உலகிற்கு காண்பிப்பதற்காக மட்டுமே வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுமானால் சுற்றுப்புறச் சூழல் மேலும் பாதிப்புக்குள்ளாகும்.

தமிழர்களின் பிரச்சனைகள் வெறும் அரசியலுடன் மட்டும் நின்றுவிடாது சுற்றுப்புறச் சூழ்நிலைகளையும் கவணத்தில் கொண்டு முன்னெடுக்கப்பட வேண்டும்.


‘மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகம் இதுவே ஈ.பி.டி.பியின் இலட்சியம்”

August 22, 2009

phoca_thumb_l_DSC05871‘மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகம் இதுவே ஈ.பி.டி.பியின் இலட்சியம்” 2001 ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தல் காலத்தில் செய்த பிரசாரம்.

வெறும் 8வருடங்கள் கடப்பதற்கிடையிலேயே எத்தனை எடுபிடி வேலைகள் முடிந்து விட்டன. எதை சாதித்தார்கள்?

வடக்கும் கிழக்கும் பிரிந்தது தான் இதன் பெறுபேறு.

நாட்டில் நிகழ்ந்த அனைத்து துயரங்களுக்கும் தனியாக புலிகள் மட்டும் காரணம் அல்ல.

தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் தனி ஒருவரின் கையில் தனி மனிதனின் தீர்மானங்களை வெளிப்படுத்துவதாக இருந்தமை என்பது உண்மை தான், ஆனால் அது ஒரு சமநிலையை தோற்றுவித்தமையை யாரும் மறைத்து விட முடியாது.

எனினும் இப் போராட்டம் தோற்றதற்கு தனி ஒரு காரணம் என்றில்லாமல் பல காரணங்கள் ஒன்றுடன் ஒன்றாக பிணைக்கப்பட்டுள்ளது. இதில் காட்டிக் கொடுத்தவர்கள் தாம் விட்ட விட்டுக்கொண்டேயிருக்கின்ற தவறினை மீளாய்வு செய்கின்றார்களா?

எனினும் இன்று விடுதலைப் புலிகள் களத்தில் இல்லாத நிலையில் ஜனநாய நீரோட்டத்தில் குதித்து குளிக்கின்றோம் என்பவர்கள் எதை சாதித்தார்கள்.

அபிவிருத்தி திட்டங்கள் நடைபெறுகின்றன என்று கூறுவது இதற்கு விடையல்ல.

யுத்தத்தினால் பல வசதி வாய்ப்புகள் வடக்கு கிழக்கு மக்களுக்கு கிடைக்க வில்லை என்பது உண்மை தான், இதற்கும் புலிகள் மீது தான் குற்றச் சாட்டுள்ளது.

மாற்று கட்சிகளின் கையில் மாநகர,நகர,பிரதேச சபைகள் சென்ற காரணத்தினால் அவைகள் நிர்வாகத்தை நடத்துவதற்கு அரசும் அரசுடன் ஒட்டிக் கொண்ட கட்சியும் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பது தான் அண்மைக் கால அரசியல் உண்மை.

வெறும் புலிகளை மட்டும் குற்றம் சாட்டுவதில் அர்த்தமில்லை.

 புலிகள் தமது பகுதிகளில் நிர்வாகத்தினை ஒழுங்காகவே நிகழ்த்தி வந்தனர். இருக்கும் வளத்தைக் கொண்டு சிறப்பான வெளியீடுகளை கொண்டிருந்தனர். அரசின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் தொடங்கப்பட்ட பின்னரும் காவல்துறையினரும், போரளிளும் மக்களை மீட்கும் பணிகளை இறுதி வரையும் மேற்கொண்டே இருந்தனர். அத்துடன் இறுதி வரை செய்திகளையும் வெளியிட்டனர்.

உண்மையில் வடக்கு கிழக்கில் அபிவிருத்தி என்று ஒன்றும் இல்லை. 1983 க்கு முற்பட்ட காலத்தில் இருந்த கம்பனிகள், தொழிற்சாலைகள், கட்டடங்கள், மற்றும் வளங்கள் இன்று இல்லை அதனை மீண்டும் பெற்றுக் கொள்வது அபிவிருத்தியா? இது தொடர்பான கேள்வி ஒரு புறமிருக்கட்டும்.

தற்போது யாழில் மீளக்குடியமர்வது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மக்களை சந்தித்து உரையாடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் குறிப்பாக உறுதிப்படுத்தப்பட்ட தகவலாக தெரியவந்த தெரியவந்துள்ள விடயம்! உயர் பாதுகாப்பு பகுதியில் இருக்கும் காணி உரிமையாளர்கள் குடாநாட்டுக்குள் வேறு ஏதாவது ஒரு இடத்தில தமக்குரிய நிலப்பகுதியை காண்பித்தால் அங்கு வீடு கட்டிகொடுக்கப்படும் என்று அமைச்சர் அவர்கள் தெரிவித்தாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

1990 முதல் தீவுப்பகுதியிலிருந்து அகதிகளாக்கப்பட்ட மக்களுக்கு முதற்கட்டமாக இச் செய்தி கூறப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக வீடு வாசல் இழந்து நிர்க்கதியாகி, பலரிடம் பல்லுக்காட்டி நொந்து போன வாழ்வு போதும் என்று இருக்கும் மக்கள் இதற்கு ஒத்துவர தயாராகவே உள்ளனர்.

போரினால் நொந்து போயுள்ள மக்களுக்கு இவ்வாறன சலுகைகளை சுதந்திரமாக காண்பிக்கவே இது போன்ற அமைச்சர்கள் உள்ளனர் போலும்.

மேலும் இதில் உள்ள இன்னொரு விடயம். அகதிகளாக்கப்பட்ட மக்களுக்கு பிறிதொரு இடத்தில் வீடு கட்டிகொடுப்டபதன் மூலம் இராணுவபயன்பாட்டுக்கோ அல்லது அரசின் தேவைக்கோ குறிப்பிட்ட காணிகள் அரச உடமையாக்கப்படுகின்றன என்பதை கவணிக்க வேண்டும்.

மே மாதம் இறுதி யுத்தம் நடந்து முடிந்த பின்னர் கொழும்பில் ஒரு முச்சக்கர வண்டி ஓட்டுனர் தனது வாடிக்ககையாளனுடன் உரையாடியது தற்போது ஞாபகத்திற்கு வருகின்றது.

‘யுத்தம் முடிந்து விட்டது தானே நம்ம ஆக்கள்(இராணுவ சிப்பாய்கள்) குடும்பத்துக்கு காணி கொடுக்கப் போகின்றார்கள், நானும் ஒரு துண்டு வாங்குவேன்”

இது முச்சக்கர வண்டி ஓட்டுனரின் கருத்தாக மட்டுமல்ல படையில் இணைந்த ஒவ்வொரு சிப்பாய்களுக்கும் மூளைச் சலவைக்காக பயன்பட்ட சொல்லின் வெளிப்பாடாகவும் பார்க்க வேண்டும்.

பாதுகாப்பு என்ற போர்வையில் தமிழ் மக்களின் காணிகளை பறிமுதல் செய்வது அரசின் திட்டம். இதற்காகவே அமைச்சர் கருணா (முரளிதரன்) பிள்ளையான்(சந்திரகாந்தன்) டக்லஸ் தேவானந்தா போன்றோருக்கு அதியுயர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

நடந்து முடிந்த மாநகர சபை தேர்தல் வெற்றியின் பின்னர் யாழ் மாநகர சபையினை முஸ்லிம் கட்சி ஒன்று பங்கு போட சீறிக் கொண்டிருக்கின்றது.

அரசின் திட்டம் இதில் தெளிவாக புலப்படுகின்றது. யாழில் இரண்டு கட்சிகளை தேர்தலில் போட்டியிட ஏவிய அரசு ஒருவரின் கைக்குள் மாத்திரம் அதிகாரம் செல்வதை விரும்பவில்லை என்பதை தெளிவாக கூறுவதன், எக்காலத்திலும் சிறு அதிகாரம் கூட தமிழனின் கையில் இருக்காது என்றே கூறகின்றது.

இதே பிரச்சனை கிழக்கு முதலமைச்சர் பதவியிலும் நடந்த இழுபறிக்கு காரணமாகவும் இருந்தது. புலிகளுடனான யுத்தம் இடம் பெற்றுக்கொண்டிருந்ததினால் பிள்ளையானுக்கு அப்பதவி வழங்கப்பட்டது. ஏனெனில் அரசு நியாயமாக நடக்கின்றது காண்பிக்க வேண்டியிருந்தது. எது எப்படியிருப்பினும் அரசு தனது அடிமை ஆட்சி புத்தியை காண்பித்தது தான் உண்மை.

இன்று விடுதலைப் புலிகள் இல்லாத நிலையில் நமது கையேந்தி மந்திரிகள் இவை நடந்தேற தாராளமாகவே இடம் கொடுப்பர்.  கையேந்தி மந்திரிகள் எப்போது சுய துணிவடைகின்றார்களோ அன்று அவர்கள் பழைய நினைவுக்கு திரும்பிவிடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

எம்முடைய தமிழ் அரசியல் கட்சிகள் யாவும் ஒன்றுக்கு ஒன்று ஒத்துழைப்பு வழங்க முடியாத அளவிற்கு பிரிந்து நிற்பது தான் பேரின சிந்தனையாளர்களுக்கு வசதியாக உள்ளது.

யுத்தகளத்திலும், தடுப்பு முகாமிலும், சாதாரண வாழ்விலும் எம் மக்களின் துயரங்களை மனதார உணர்வார்களாயின் இவர்கள் ஒன்றுபட முடியும்.

தமிழர் தரப்பில் பல்வேறு அரசியல் கட்சிகள் இருப்பினும்(அரசுடன் இணைந்தோ,எதிரணியிலோ) பல்வேறு கொள்கைகள் மத்தியிலும் ஓரேயொரு கொள்கை ரீதியிலாவது ஒன்றினைந்து தமிழருக்கான பலமான அமைப்பை உருவாக்க வேண்டும்.

கையேந்தி மந்திரிகாலமும் ஒழியும், கொண்ட இலட்சியமும் நினைவில் நிற்கும்.


ரூபா200 வவுனியா வரையான பயணத்திற்கு,ஈ.பி.டி.பி ரூபா2000 அறவிடுகின்றது

August 20, 2009

நாட்டில் யுத்தம் முடிவடைந்து விட்டது, நாட்டில் இனி பயங்கரவாதம் இல்லை ஆகவே மக்கள் சுதந்தரமாக நடமாடலாம் என்கிறது அரசு. உண்மை தான் தூய சிங்களவர்கள் (பேரினவாத கொள்கையுடைய) சுதந்தரமாக நடமாடலாம்.

யாழ் குடாநாட்டு மக்களும் நாட்டின் ஏனைய பாகங்களுடன் இணைக்கப்பட்டுள்ளனர் என்பதை உலகிற்கு வித்தை காட்டுவதற்கு ஏ9 பாதையும் திறக்கப்பட்டுள்ளது. பாசாங்கு சுதந்திரம்-இலங்கையில் July 28, 2009   என்ற பகுதியில் குறிப்பிட்டது போல தொடர்ந்தும் பயண அனுமதி நடைமுறை உள்ளது.

யாழ் குடாநாட்டில் உள்ளோர் பாதுகாப்பு அனுமதி வைத்திருந்தால் ஏ9 பாதை வழியே பயணம் செய்ய முடியும்.

நாளொன்றுக்கு சுமார் 10 முதல் 07 வரையான பேரூந்துகள் பயணிக்கும் அன்றைய நாள் காலையில் பயண சிட்டையை பெற்றுக் கொள்வதற்கு பதிவுகளை மேற் கொண்டால் அன்று பிற்பகல் பயணம் செய்ய முடியும்.

நபர் ஒருவருக்கு ரூபா200 வவுனியா வரையான பயணத்திற்கு அறவிடப்படுகின்றது. பின்னர் வவுனியாவிலிருந்து பிற இடங்களுக்கு பயணம் மேற் கொள்ள முடியும். யாழ்ப்பாண சந்தியாக கருதப்படும் மதவாச்சியை கடக்கும் ஒவ்வொரு தமிழனும் ஆழமாக சோதனைக்குட்பட வேண்டும், இது தமிழருக்கான சுதந்திரம்.

பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட கொழும்புக்கான விசாவுடன் வந்தவர்கள் மட்டும் தான் மீண்டும் ஏ9 வழியே யாழ் திரும்ப முடியும். ஏனையவர்கள் விமானம் மூலம் அல்லது கப்பல் மூலம் தான் யாழுக்கு பயணிக்க முடியும்.

அமைச்சர்(பேரின அரசிற்கு அமைந்து நடப்பவர் என்று அர்த்தமும் கொள்ளலாம்) டக்லஸ் தேவானந்தா அவர்கள் கூறினார். பயணத்துக்கான பாகாப்பு ஏற்பாடுகள் நடை பெற்று வருவதால் தான் ஏ9 பாதையை தெடர்ந்தும் திறக்க முடியாமல் உள்ளதாகவும் அந்த ஏற்பாடுகள் முடிந்தவுடன் உடனடியாக பாதையை திறப்பதற்கான ஏற்பாடுகளை நான் மேற்கொண்டு வருகின்றேன் என்று கூறினார்.

அவர் ஏற்பாடு செய்தது அது அல்ல என்பதை தற்போது புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது என் மக்கள் கூறுகின்றனர்.

அவரின் கட்சிக்கென ஏற்பாடு செய்ப்பட்ட பேரூந்து வந்து சேர்வதில் ஏற்பட்ட தாமதமே இதற்கு காரணம் என்று மக்கள் கூறுகின்றனர்.

பாதுகாப்பு அனுமதியுள்ள பயணி ஒருவர், கொழும்புக்கு நேரடி பேரூந்தில் பயணம் செய்வதானால் ஈ.பி.டி.பி கட்சியில் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். ஒரு வழி பயணத்திற்கு ரூபா2000 அறவிடப்படுகின்றது.

விடுதலைப் புலிகளுடனான ஒப்பந்த காலத்தின் போது யாழ்-கொழும்பு வாகன சேவைகள் ரூபா1100 மட்டுமே அறவிட்டனர், இதற்கான விலை நிர்ணயத்தை விடுதலைப் புலிகள் மேற்கொண்டிருந்தனர், மேலும் விடுதலைப் புலிகள் தலைக்கு ரூபா 150 கப்பமாக பறிக்கினறனர் என தமது இதய வீ(வி)ணைகளை திறந்தவர்கள். இரக்கமற்று இவ்வளவு தொகை அறவிடுவது நியாயமா? என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

மேலும் அவர் ஏற்பாடு செய்துள்ள இன்னொரு பாதுகாப்பு நடவடிக்கை திருடர் கூட்டம்.

யாழ் செல்வதற்கென பதிவுகள் வவுனியாவில் இரணுவத்தினரால் மேற்கொள்ப்படுகின்றது, அங்கு பதிவுகளை மேற்கொள்ள செல்லும் பயணிகளின் சொத்துக்கள் களவாடப்படுகின்றது என்று தெரியவந்திருக்கின்றது.

அதாவது கொழும்பு கோடடையிலிருந்து வவுனியாவரும் இரவுதபால் ரயில் அனுராதபுரத்தில் இருந்து வவுனியா நோக்கி புறப்படுகையில் பல கொள்ளைச் சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதை பல தமிழரும் அனுபவத்தில் உணர்ந்திருப்பர். தற்போது அந்த கொள்ளளைச் சம்பவம்  மக்கள் நலன் கருதி வவுனியாவிற்கு நகர்த்தப்பட்டுள்ளது, அதுவும் பதிவுகள் இடம் பெறும் இராணுவ வலயத்துக்குள்.

அண்மையில் மீண்டும் ஏ9 பாதை திறக்கப்பட்டுள்ளதை கேள்வியுற்ற பயணிகள் சிலர் பதிவுகளை மேற்கொள்ள சென்ற போது பலரின் கைத்தொலைபேசிகள்,நகைகள்,பொதிகள்,மற்றும் பதிவுகளை மேற்கொள்ள சென்ற சிலரின் துவிச்சக்கர வண்டிகளும் திருடப்பட்டுள்ளன, குறித்த ஒரே தடைவையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதை உணர்ந்த பாதிக்கப்டவர்கள் திருடர்கள் சீருடையில் இருந்துள்ளனர் என்ற யதார்த்தத்தை புரிந்ததினால் வாய்மூடிச் சென்றுள்ளனர். பாதிக்கப்பட்ட ஒருவர் இதனைக் கூறினார் தொலை பேசியில் உரையாடிய அவர் அச்சம் காரணமாக மேற்கொண்டு விபரமாக கூறவில்லை.

ஆகக் கூடியது, பயணத்தில் ஈடுபடும் தமிழ் மக்களின் பாதுகாப்பையே உறுதிப்படுத்த முடியாத அமைச்சரை நம்பி எவ்வாறு தமிழ் மக்கள் தலைநிமிர்வர். யாழ் மாநகர சபையினை இந்தக் கட்சி எவ்வாறு பாதுகாக்கும் என்ற கேள்வியும் எழுகின்றது.