22
Jun
09

வன்முறை தேர்தல்கள் வேண்டாம். வளமான வார்த்தைகள் போதும்.

 

Two persons death in islands(Jaffna) for 2001 preliamentary electin compaign. photo by Vincent Jeyan

2001 இடம் பெற்ற தேர்தல் வன்முறையில் ஈ.பி.டி.பியினரால் கொல்லப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆதரவாளரான யாழ்.பல்கலைக்கழக ஊழியர் ஒருவரின் இறுதி ஊர்வலத்தில் ஜனநாயக சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளதை வெளிப்படுத்த கறுப்புப்பட்டியை வாயில் அணிந்து கொண்டு ஆனந்தசங்கரி, அமரர் ரவிராஜ், சுரேஸ்பிரேமச்சந்திரன்.இத்தேர்தலில் புலிகளை ஆதரித்து கூட்டணி அமைத்து பிரச்சார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. படப்பிடிப்பு:-வின்சென்ற் ஜெயன்

 

 

இந்தத் தேர்தல் எமக்கு வேண்டாம். கடந்த காலங்களில் வன்முறைகள் நிறைந்த இரத்தம் படிந்த தேர்தல் முடிவுகளை தமிழ் மக்கள் எதிர்பார்க்கவில்லை. மாறாக சமாதனம் நிரம்பிய சுத்த இதயமுள்ள முடிவுகளே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும்.

கால காலமாக அப்பாவி தமிழ் மக்கள் இலங்கை அரசினாலும், தமிழ் தலைமைகளாலும், வெளிநாட்டு சக்திகளாலும் ஏமாற்றப்பட்டது போதும்.

இப்போதும் மக்களை ஏமாற்றும் தேர்தல் வித்தைகள் யாழ்ப்பாணம் வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இவ் வித்தைகளின் உச்சம் தொட்ட அன்று தான் 2001ஆண்டு யாழ் மாநகரசபை தேர்தல் பிரச்சாரத்தின்போது இரு உயிர்கள் உருவப்பட்டன.

Two persons death in islands(Jaffna) for 2001 preliamentary electin compaign. Phot by Vincent Jeyan

2001 ஆண்டு தீவகத்தில் ஒரே சம்பவத்தில் ஈ.பி.டி.பியினரால் மேற்கொள்ளப்பட்ட தேர்தல் வன்முறையில் கொல்லப்பட்ட இன்னொரு தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆதரவாளரின் மரணச்சடங்கு இது. இவ் இளைஞன் யாருக்காக உயிர் நீத்தானோ அவர்கள் அவனுக்கு இறுதி மரியாதையை செலுத்வேயில்லை.படப்பிடிப்பு:-வின்சென்ற்ஜெயன்

உயிர்கள் உருவும் கூட்டணிகளுக்கு இதுவெல்லாம் பயங்கரவாதமாக தெரிவதில்லை.

தற்போது தமிழ் மக்கள் உள்ள மனநிலையில் இத்தேர்தலில் மக்கள் அக்கறை செலுத்தப் போவதில்லை, என்றாலும் தேர்தல் என்னும் கனியை காட்டி மக்களை நாயாக அலக்கழிப்பது தமிழ் தலைமைகளின் வழமையான ஏமாற்று வித்தை.

மக்கள் தாமுண்டு தமது கடமையுண்டென இருக்க வில்லங்கத்திற்கு வாகனத்தில் ஏற்றி நடத்திமுடிச்ச கூட்டங்களின் படங்களை காட்டி அரசியல் நடத்தியது புதிய வரலாறு.

இததை விட ஆயுத்தை காட்டி, ஆள்அடையாள அட்டையை பிடுங்கி, ஆட்களை கடத்தி நடத்தும் அரசியல் பூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்கு சீவன் போகுது என்ற நடைமுறைச் சிக்கல் அனுபவப்பட்டவருக்குத்தான் தெரியும்.

அது இது என்று அவசர தந்தி அனுப்ப அதிகாரிகள் செய்த வேலையையும் விட்டுட்டு ஓடிச் சென்றால் வீட்டு படலையைத் திறக்கவே பொழுதுபட்டுவிடும், பின்னர் அங்கு நடக்கும் பிரங்கத்திற்கு ஆமா போட்டுவிட்டு வீடுதிரும்புவதற்கிடையில் வலைப்பூவில் தோழருடன் சினந்துசிரிக்கும் படம் வெளிவந்திடும்.

சாப்பாட்டு கோப்பைக்குள் கைவைக்கும் போது கைபேசி கத்தும் ‘மச்சான் உன்ர படம் வந்திருக்கு என்ன நல்லா நடக்குதோ? நம்பஏலாம இருக்கு” என்று அவர் சொல்ல இவர் ‘ஓமச்சான் உனக்குத் தெரியும் தானே எல்லாத்தையும் கதைக்க ஏலாது அதவிட்டுட்டு என்ர குடும்பத்த பற்றிகேளு உன்ர குடும்பத்த பற்றி கேளு”

இது தான் நம்ம அரசியல்.

உண்மையில் முகாம்களுக்குள் வாடுவது வேறு நாட்டுகாரனா? அல்லது மனித இனமே அற்ற ஒரு விலங்கா?

அவர்களும் எமது ரத்தத்தின் ரத்தங்களே.

இவற்றுக்கு காரணமாணவர்கள் யார் எவர் என்றில்லை தமிழ் தலைமைகள் தான் பெறுப்பேற்க வேண்டும்.

ஒருவர் ஒருவர் மீது குற்றம் சாட்டுவதை மக்கள் ஏற்கக் முடியாதிருந்தும்  மெளனிகளாகவே இருக்கின்றனர்.

ஏனெனில் மக்களுக்காக குரல் கொடுக்காமல் சொந்த அரசியல் குப்பைகளுக்காக மக்களை துன்ப்படுத்தியமையை வரலாறு அறிந்த தமிழ் மகன் வெறுப்பாகவே உள்ளான்.

அண்மையில் முடிவுக்கு வந்த இரண்டாம் மகாபாரதம் பலரின் காட்டிக் கொடுப்பினால் தான் தோல்வியான முடிவுக்க வந்தது என்பது உண்மை.

இதில் கருணா அம்மானின் துரோகத்தனம் என்பது முக்கிய பங்கு வகிக்கின்றது, அதற்கு நன்றியாகத் தான் அவருக்கு சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவர் பதவி பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகார பொறுப்பாளர் கே.பத்மநாதன் பிரபாகரனை ஏமாற்றிவிட்டார் என்ன கருணா கூறியதாக தகவல்கல் தெரிவித்திருந்தன.

பத்மநாதன் தலைவர் பிரபாகரனை ஏமாற்றவில்லை பத்மநாதனை வெளிநாட்டு முகவர்கள் ஏமாற்றியதால் தான் விடுதலைப் போர் நசுக்கப்பட்டது.

இதற்காக இந்திய அரசு நளினி பிரியங்காவின் சந்திப்பை ஏற்பாடு செய்தது. தமிழ் மக்கள் நன்றாகவே ஏமாந்து கூண்டுக்குள் அடைபட்டுள்ளனர்.

இச் சந்திப்புக்களின் பாதகங்களை தமிழ் ஊடகவியலாளர்கள் மக்களுக்கு கூறாமல் மக்களை ஏமாற்றிவிட்டனர்.

தமிழ் ஊடகவியலாளர்கள் மனதுக்கு இனிமையாக இருக்க வேண்டும் என எண்ணி பல வி்டயங்களை மக்களிடத்தில் எடுத்துச் செல்வதில் பின்னடித்தமையே இன்றைய நிலைமை.

இன்றும் கூட தலைவரின் வீரமரணம் தொடர்பாக இருதலைக் கொள்ளிகள் போல உள்ளனர்.

புலம் பொயர் தமிழ் மக்களிடம் இருந்து கிடைக்கும் அரசியல் பலத்தை விட, தாங்கள் குடியிருக்கும் வீட்டுக்கும் ஓடும் வாகனத்திற்கும் பணம் சம்பாதிக்கும் கூட்ம் ஒன்று உள்ளது என்று அவர்கள் நம்புகின்றனர் போலும்.

இந்த இறுதிப் பேரானது ஓரு சோத்தி அரசாங்கத்திடம் மடைமைத்தனமாக சிக்கிக் கொண்டு தோற்தல்ல.

பல நாடுகளின் ஆதரவுகள், வல்லரசுகளின் உதவிகள், சர்வதேச சர்வ நாச ஆயுதங்கரளின் பயன்பாட்டிலும், ஈவிரக்கமற்ற மனித உரிமை மீறலினாலுமே வெல்லப்பட்டது.

இத்தனை எதிர்ப்புக்களையும் சுமார் 3 வருடங்கள் உள்ளுர் வளங்களுடனும் தனி ஒரு அமைப்பு மட்டுமே, அதுவும் அரச போருக்கு எதிராக குரல் எழுப்பியவர்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருந்த நிலையிலேயே தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார் என்பதை உலகம் அறியும்.

அதுவும் நெற்றியில் வீரத்தழும்புபட்டே.!

இந்த உண்மையை மூடி மறைப்பதற்கான காரணம் என்ன?

‘இறுதி மணித்தியாலங்கள்” என கடற்புலிகளிலன் தலைவர் சூசை தொடர்பு கொணட போது எமது சர்வதேச விவகார பொறுப்பாளர் கே.பத்மநாதன் என்று கூறியதும் பொய் என்பது போல

தலைவர் அவர்களால் நியமிக்கப்பட்ட சர்வதேச பேச்சாளர் விலைபோய்வி்டார், அவர் துரோகியாகிவிட்டார், இவர் பிரிக்கப்பார்க்கின்றார் என்ற வார்த்தைகள் இனியும் எடுபடாது.

தமிழ் மக்களின் தற்போதைய ஒரேபலமாகிய புலம் பெயர் தமிழர்களின் பலத்தையும் உணர்வையும் சரிவர புரிந்து கொண்டு ஈழத்தில் அடிமைப்படும் மக்களின் விடிவுக்காக போராட வேண்டும்.

தலைவரின் வீரமரணம் தொடர்பான இருதலைக் கொள்ளி நிலையானது யார் தலைமை? என்று சொல்லாமல் நடக்கும் ஒரு தேர்தலே.

அப்பாவி தமிழ் மக்களை பொறுத்தவரை தமிழ் தலைமைகள் அவரவர் காலகட்டத்திற்குள் யாவரும் மக்களை துன்பப்படுத்தியவர்களே.

ஜனநாயக நீரேட்டம் என்பது ஆபத்துமிக்க சுழிகள் நிறைந்த கரையாகவே தமிழ்மக்களுக்கு தென்படுகின்றது.

தற்போதுள்ள இலங்கை தமிழ் அரசியல் நிலைமையானது விடுதலைப் புலிகளினாலும் அதன் ஆதரவாளர்களால் அதாவது புலம் பெயர் தமிழர்களின் போரட்டங்களினாலுமே நிலை நிற்கின்றது என்பது உண்மை.

எனவே மக்களுக்கு கடந்த காலங்களில் இழைத்த தவறுகளுக்கு பிரயாச்சித்தமாக எல்லாரும் ஒன்றுபடுங்கள்.

வன்முறை தேர்தல்கள் வேண்டாம். வளமான வார்த்தைகள் போதும்.


0 Responses to “வன்முறை தேர்தல்கள் வேண்டாம். வளமான வார்த்தைகள் போதும்.”



  1. Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s


  • பகிர் – Share

    Rightdiary பகிர் – Share

www.rightdiary.com LAUNCHING PROGRAM

Tamil 10 top sites [www.tamil10 .com ]

 

June 2009
M T W T F S S
« May   Jul »
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

Flickr My Photos

The guardian

Untitled

1/4 daguerreotype plate in hand

Disfrutando!!!

Pan Twardowski

Lazy Lass [eXPLoReD]

I Snuck into My Neighbor's Yard to Take this Photo and My Neighbor Caught Me

before the great collapse(explore)

Waiting in line

Chi

More Photos

Follow

Get every new post delivered to your Inbox.