16
Oct
10

தமது இனத்தையே ஏமாற்றும் தமிழ் அரசியல்வாதிகள்

நேர்மையற்ற தமிழ் அரசியலாளர்களால் தமிழினம் இழந்தது தான் அதிகம். ஆகக்கூடியபட்சம் உள்ளுர் வளங்களை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் முடியாத தமிழ் அரசியல் வாதிகள் அதற்கு கூறும் காரணங்கள் அன்று புலிகள் இன்று இராணுவம்.

பனங்கிழங்கு விற்பனைக்காக வன்னியில் 5 லட்சம் பனைவிதைகள் இராணுவத்தினாரல் நாட்டப்பட்டடுள்ளது.

யாழ் குடாநாட்டின் முக்கிய சின்னங்களில் ஒன்று பனை என பெருமையுடன் கூறுகின்றனர், எமது கற்பகதரு சின்னத்தை பேரினவாதிகள் திட்டமிட்டு அழிக்கின்றனர் என அரசியலும் செய்வார்கள் ஆனால் அதை நம்பி சீவியம் நடத்தும் சமூகத்தை ஒதுக்கிவைக்கின்றனர்.

பலர் இன்று பனை,தென்னந் தொழிலிலிருந்து விடுபட்டுள்ளனர்.

எந்த பேரினவாதி அதை அழித்தானோ, அவனே இன்று தமிழர்களின் பொருளாதார மற்றும் வள சுரண்டல்களுக்கு பயன்படுத்துகின்றான். நாளை ஜப்பான்காரர் நவீன தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து அதன் பயனை அடையத் தொடங்கினால் எம்மவர்கள் “ரை” கட்டிக்கொண்டு பனை ஏறுவதில் பெருமையாக என்னுவார்கள். ஆனால் அனுமதி கேட்டு தான் ஏறவேண்டியிருக்கும், அதற்கும் அரசியல் செல்வாக்கு தேவைப்படலாம்.

இப்படியே சிறுசிறு விடயங்களை அற்பமாக என்னி ஒதுக்கிவைக்கும் தமிழ் அரசியல் வாதிகள் எப்போது திருந்துவார்கள்.

வாக்கு பெட்டியும், கதிரைகளும் தான் அரசியல் பலம் என்பதற்கும் அப்பால், வடக்கு கிழக்கில் கிடைக்கும் வளங்களை மக்களுக்காக, மக்களுக்கென்றெ பயன்படுத்தினால் அதுவும் தமிழரின் பாரிய அரசியல் சக்தி என்பதை ஏன் இன்னும் உணரவில்லை?

“ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு” என்று முன்னோர்கள் தீர்க்கதரிசனமாகவே உரைத்திருக்கின்றனர்.

“காற்றுள்ள போதே தூற்றிக்கொள்” போன்ற பழமொழிகளும் இதனையே உணர்த்துகின்றன.

இன்று தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ வேண்டுமானால் தமிழர்களிடம் ஒற்றுமை வேண்டும் என்பதை சகலரும் உணர்ந்துள்ளனர், ஆனால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அவர்களால் ஒற்றமைப்பட முடியாதுள்ளது.

சுயநலத்திற்காக இரத்த உறவையே விலைபேசும் இவ் உலகில், அடுத்தவனின் கதி தான் என்ன? இந்த வகையில் யாவரும் தவறு செய்ததே. ஆகவே ஒருவருக்கொருவர் பழிசுமத்த தகுதியற்றவர்கள். ஆகவே தமது தகுதியை தாமே சோதித்தறிய வேண்டும்.

ஏற்கனவே துரோகிகள் என தங்களுக்கு தாங்களே முத்திரை குத்திக் கொண்டவர்களை தவிர ( பிழை என்று தொரிந்திருந்தும் பேரின வாதிகளை திருப்தி படுத்துபவர்கள் ) த.தே.கூட்டமைப்பு, புலம்பெயர் புலிகள் ஆகியோரை பொரும்பான்மையான தமிழ் மக்கள் ஆதரிக்கிறார்கள் என்று கூறலாம்.

யதார்த்தமான மரணத்தை தலைவர் அடைந்தார் என்பதனை ஏற்கமுடியாததன் அடிப்படையில் புலம் பெயர் புலிகள் இன்று பாரிய பிளவை சந்தித்து, நாடுகடந்த தமிழீழ அரசு, வட்டுக்கோட்டை தீர்மானம் என்று பிளவடைந்துள்ளனர்.

இதனால் மக்கள் மத்தியில் அதிக குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளனர், ஒருவரை ஒருவர் துரோகி எனகூறும் இவர்கள் தலைவனின் வழி, தமிழர்களின் தாயகம் தமிழீழம், தமிழீழம் தான் ஒரே தீர்வு, போர்குற்றவாளி ஸ்ரீலங்கா தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோஷங்களில் ஒத்து போகின்றனர்.

கோஷங்களில் ஒன்றுபடும் போது குத்துப்படுவதற்கு காரணம் தான் என்ன? அவர்களை அச்சுறுத்துவது யார்? அவர்களுக்கு உள்ள தடை என்ன? என்ற கேள்விகள் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் மத்தியில் எழாமலில்லை, பணம், பதவி இவையே அடிப்படையான பதில் என்பதும் தெரியும்.

புலிகள் என்ற பெயரை உச்சரிப்பதற்குரிய நிலையில் தாயகத்து தமிழர்களின் நிலை இல்லை என்பதை இருசாராரும் அறியாமலுமில்லை.

தமிழீழம், மாவீரர்கள், தமிழ்தேசியம், துரோகி என்ற சொல்லாயுதங்கள் மூலம் மோதிக் கொள்கின்ற அதே வேளை தத்தமது அமைப்புக்களை வளர்த்தெடுக்க கடும்முயற்சிகளை மேற்கொண்ட வண்ணமுள்ளனர்.

தாயகத்தில் மக்கள்படும் துன்பங்களை கூறி, தமிழ் தேசியத்தின் பெயரால் தம்மை வளர்த்துக்கொள்ள துடிக்கும் இவர்கள், இதுவரை தாயகத்தில் வாழும் மக்களுக்கு கைகொடுக்கவில்லை.

மேலும் இலங்கையில் என்ன நடக்கின்றது? என்ன தேவை? தமது அரசியல் பணி என்ன? என்பதை அறிந்துகொள்ள முயற்சிக்காது மக்கள் சக்தியை திரட்டுவதில் என்ன பயன்?

அகதி தஞ்சம் கோரியுள்ள தத்தம் நாடுகளில் வெற்றிகரமாக தேர்தல்களை நடத்தியதன் மூலம் பரபரப்படைந்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசு அமைப்பினரை தாண்டிவிடுவதற்கு வசதியாக சிவந்தனின் நடைப்பயணம் மறுசாரருக்கு புதிய வழியை அமைத்துக் கொடுத்தது.

தூய எண்ணத்தடன் தனி மனிதனால் சில நாட்களில் நிறைவேற்றப்பட இருந்த நடைப்பயணத்தில் தலையிட்டுக் கொண்டவர்கள் அதனை ஏறத்தாள ஒரு மாதத்திற்கு நீடித்தனர். இதைத் தொடர்ந்து மூன்று ஈழ ஆதரவாளர்கள் நடைப்பயணத்தை தொடர்ந்தார்கள், தற்போது துவிச்சக்கரவண்டி பயணம் ஆரம்பித்துள்ளது.

இச் சம்பவங்கள் அகதியாக குடியேறிய நாடுகளில் நடந்து கொண்டிருக்கையில், ஸ்ரீலங்காவில் நிறைவேற்றப்பட தயாராக இருந்த 18வது திருத்த சட்டத்தில் என்ன என்ன மாற்றங்கள் கொண்டுவரப்பட இருந்தன என்பதை இந்த தமிழ் தேசியவாளர்கள் அறியவும் அது பற்றி ஆவலாகவும் இருக்கவில்லை என்பதை அவர்களுடனான உரையாடலிலிருந்து அறியமுடிந்துது.

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கப் பெற்ற சிறிய அதிகாரங்களும் இதன் மூலம் பறிபோய்விட்டதை, அதாவது தமிழீழ விடுதைப் புலிகளின் அழிவின் பின்னர் தமிழர்களின் உரிமைகள் முற்றிலும் பறிக்கப்படுகின்றது என்பதை உலகிற்கு வெளிப்படுத்தியிருக்க வேண்டிய கடமையிலிருந்து இத் தேசியவாதிகள் ஒதுங்கி நின்றார்கள்.

தமிழீழத்துக்காக உண்மையாகவே குரல் கொடுப்பது என்றால் அங்கு என்ன நடக்கின்றது என்பதை உன்னிப்பாக அவதானிக்க வேண்டும். அதற்கேற்ப நகரவேண்டும்.

கடந்த காலங்களில் புலிக் கொடியின் கீழ் மக்கள்; போராட்டங்கள் இருந்த போது அங்கிருந்த தமிழ் மக்களுக்கு பாதுகாப்பான பிரதேசம் இருந்தது, ஆனால் இன்று வடக்கு கிழக்கு முழுவதும் பேரினவாதத்தின் பிடிக்குள் சிக்கியிருக்கின்றது, அங்குள்ள மக்கள் வெளிவேடத்திற்கு சந்தோஷமாக வாழ்கின்ற போதும் அவர்களின் மனங்களில் நிம்மதியில்லை.

இந்த பின்னனியை உணராது அங்குள்ள மக்களுக்கு மேலும் சிறையிருப்பை அதிகரிக்கச் செய்யும் கருத்துக்களையும், செயற்பாடுகளையும் செய்வதுமல்லாமல் அல்லலுறும் மக்களை காரணம் காட்டி புலம் பெயர் மக்கள் மத்தியில் மோசடிகளை செய்தும் வருகின்றனர்.

இதற்கிடையே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைமை வேறு.

1995 இல் யாழ் குடாநாட்டை ஜனாதிபதி சந்திரிக்கா தலைமையில் இராணுவ கட்டப்பாட்டக்குள் கொண்டுவந்தது. 1997 இல் கணிசமான மக்கள் மீளக்குடியமர்ந்திருந்தனர். 1990 முதல் இராணுவத்தின் பிடியிலிருந்த தீவகப்பகுதிகளில் குடாநாட்டுக்கான அரச நிர்வாகம் இயங்குவதாக அறிவித்திருந்த நிலையில் குடாநாடடுக்கான 9 பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஈ.பி.டி.பி தம்மகத்தே கொண்டிருந்தது. இந்நிலை 2000 வரை நீடித்திருந்தது.

ஈ.பி.டி.பி யின் பிடியிலிருக்கும் 9 கதிரைகளையும் கைப்பற்றுவது மிக எளிதான காரியமாக ஏனைய தமிழ் கட்சிகளுக்கு இருக்கவில்லை. ஏனெனில் போட்டியிட இருந்தவர்களும் தேசத்துரேகிகளே.

இந்த சூழலில் ஈ.பி.டி.பியை எதிர்த்து போட்டியிடுவதற்கு புலிகளின் வாலை பிடிப்பதை தவிர வேறுவழியில்லை என்ற நிலையில் தமிழ் தேசியம், தமிழீழம் என்ன கோஷங்களுடன் தேர்தல் களத்தில் இறங்கியது தமிழர்விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, இலங்கை தமிழரசு கட்சி.

தேர்தல் பிரசாரத்திற்காக தீவுப்பகுதிக்கு சென்றபோது ஈ.பி.டி.பியின் தாக்குதலுக்கு உள்ளானதில் இரு ஆதரவாளர்கள் கொல்லப்பட்டார்கள் இன்று ஈ.பி.டி.பியுடன் உறவுகளை வைத்துக் கொள்ளும் சிவாஜிலிங்கம் காலில் படுகாயமடைந்திருந்தார்.

புலிகள் ஏனைய போரளி இயக்கங்களை தடை செய்வதாக அறிவித்த போது, பாலகுமார் (ஈரோஸ்) ஆரம்பத்திலே இயக்கத்தை கலைத்து புலிகளுடன் இணைவதாக அறிவித்ததன் காரணமாக பல ஈரோஸ் போராளிகள் காப்பாற்றப்பட்டார்கள், ஆனால் அன்று புலிகளுடன் இணைய மறுத்து அவர்களுடன் முரண்பட்டதினால் இன்று வரையான பிரிவினைகளுக்கும், சகோதர படுகொலைகளுக்கும், பல உயிர் பலிகளுக்கும் வழியமைத்தவர்கள் நீண்ட கால இடைவெளியின் பின்னர் கதிரைகளுக்காக புலிகளின் கீழ்செயற்பட முடிவெடுத்தனர்.

மனிதர்கள் பலவீனமானவர்கள் என்ற வகையில் காலம் தாழ்த்தியாவது ஒரு இணைவிற்கு மனம் திறந்தார்கள் என்று திருப்தி கொள்ளமுடியம்.

எனினும் தமிழ் மக்கள் மீதான போருக்கு போரினவாதமே முக்கிய காரணம் என்பதை தெரிந்திருந்தும், கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோர அழிவுகளுக்கு திட்டம் வகுத்த இராணுவ தளபதி சாத் பொன்சேகாவை ஆதரித்து, சர்ந்தப்பவாதிகள் என்பதை மீண்டும் வெளிப்படுத்தினர்.

சமபல மிக்க இன்னொருவரை ஐ.தே.க நிறுத்த வேண்டிய சூழ்நிலையை எவராலும் தடுக்க முடியாது, இக்கட்சிகளில் தமிழர்களின் பிரச்சனைகளுக்கு எவருடன் பேசமுடியுமோ அவரை ஆதரிப்பதும் தவறு இல்லை. ஆனால் இறுதிக் கட்ட போரில் மனித அவலத்திற்கு ஸ்ரீலங்கா அரசம் பொறுப்பு கூறவேண்டியவர்கள்.

சில வேளைகளில் சரத் பொன்சேக ஜனாதிபதியாகிருந்தால் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் எழுந்திருக்க வாய்ப்பே இல்லை என்று நிச்சயமாக கூறலாம்.

இந்த நிலைமைகளை உணர்ந்து சிவாஜிலிங்கம் எடுத்திருந்த முடிவவை ஒரு வேளை மாவை சேனாதிராஜா எடுத்திருந்தால் த.தே.கூட்டமைப்பு அவரை கட்சியிலிருந்து வெளியேற்றியிருக்குமா? அதாவது தமிழரசுக்கட்சி உறுப்பினரை வெளியேற்றியிருக்குமா?

த.தே.கூட்டமைப்பிலிருக்கும் முன்னாள் போராளிகளை ஓரம்கட்ட வேண்டும் என்ற துடிப்பிலிருக்கும் தமிழரசு கட்சியின் வெளிப்பாடாக ஏன் சிவாஜிலிங்கத்தின் வெளியேற்றத்தை கருதக்கூடாது?

தேர்தல் நெருங்கும் காலங்களில் மட்டும் தெருத்தெருவாய் அலைந்து வாக்கு பிச்சை கேட்கும் மேல்வர்க்கவாத இவ் அரசியல்வாதிகளுக்கு வழங்கப்படும் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் தமது வாழ்நாளில் தத்தமது மாவட்டங்களில் எதுவித அபிவிருத்திட்டங்களையும் செய்யவுமில்லை, தமது சுய நலனுக்காக செயற்படுத்தாது விட்டவைகளை “அரசியல் காரணம்” என்ற ஒரு சொல்லால் மடக்கிடுவார்கள்.

ஆக மொத்தத்தில் தமிழருக்கு ஒருபோதும் விடிவை தரமுடியாதவர்களின் கைகளிலேயே பேரினவாதத்திற்கு எதிரான அதிகாரங்கள் இருக்கின்றன.

பச்சோந்திதனமான இவ் தமிழ் கட்சிகளால் தாம் இழந்தது தான் அதிகம் என்ற நிலையில் அரசியலில் தமிழர்கள் வெறுப்படைந்துள்ளனர்.

தீவிர பேரினபரம்பல் செய்யப்படும் இன்றைய வடக்கு-கிழக்கு சூழ்நிலைகளை புரிந்து மக்களுக்கு அரசியலில் ஏற்பட்டுள்ள வெறுப்பை நீக்க முன்வரவேண்டும்.

இந்நிலை தொடருமானால் நிச்சயமாக இருக்கும் கதிரைகளும் பறிபோகும். மேலும் மாகாண சபைக்க வழங்கியிருந்த அதிகாரங்கள் நீக்கப்பட்டிருக்கும் 18வது திருத்த சட்டத்தின் பின்னனியிலும், ஒவ்வொருவரையும் விலைபேசதக்கதாக சொத்துக்களை சுருட்டியிருப்பதினாலும் வடக்கு-கிழக்கில் மாநகர, நகர, பிரதேச சபைகளையும் தக்கவைப்பதில் சிக்கல் ஏற்படும்.

மக்களை ஏமாற்றி, தமிழர் தமக்குள் தாமே மோதிக்கொள்வது, அது பேரினவாதிகளின் மூலதனம்.

Advertisement

0 Responses to “தமது இனத்தையே ஏமாற்றும் தமிழ் அரசியல்வாதிகள்”



  1. Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s


  • பகிர் – Share

    Rightdiary பகிர் – Share

www.rightdiary.com LAUNCHING PROGRAM

Tamil 10 top sites [www.tamil10 .com ]

 

October 2010
M T W T F S S
« Sep   Nov »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Flickr My Photos

float

Ice and a Slice

Night Dance

two

Raper Creek Falls

Eiffel Tower in our house :P +1

Troy, NY. 2011

Tower Bridge.

6:50 AM Light Show

fire!

More Photos

Follow

Get every new post delivered to your Inbox.