31
Dec
10

கதிரைக்காக இராமல் உரிமைக்காக போராடுங்கள்

சுவிஸின் தேசிய தின கொண்டாடங்கள் முடிவடைந்ததும் வீதிகளை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டவர்கள், வீதியையும் நடைபாதையையும் இணைத்து அமைத்திருந்த தார் அணைப்புகளை நீக்கிக் கொண்டிருந்தார்கள்.
ஒரு நாள் கூத்துக்கு இவ்வளவு செலவு செய்து வீதிகளையும் மெழுகிறார்களே என்று மனதுக்குள் நினைத்துவிட்டு நகர்ந்து கொண்டே நடைபாதையை சமப்படுத்தாதிருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும் என ஆழமாக யோசித்தேன்.
ஒருவர் இருட்டில் இடறுப்பட்டால் அவரின் காலில் காயம் வரும் காயம், வந்தால் சப்பாத்து அணியமுடியாது, இதனால் வேலைக்கு போக மாட்டார், தவிரவும் சுகவீன விடுமுறை என சம்பளம் கொடுக்க வேண்டும், வைத்திய செலவு ஒருபுறம், காப்புறுதி செலவு மறுபுறம், உற்பத்தியில் பாதிப்பு என நாட்டின் அபிவிருத்தியிலே ஒரு பாரிய பின்னடைவை நோக்கி செல்லுகின்றதல்லவா என பின்னர் உணர்ந்தேன்.

அதனாலே தான் வீதியை மொழுகிவிடுவதால் ஒரு நபரினால் ஏற்படும் பொருளாதார பின்னடைவை தவிர்ப்பதுடன் வேலைவாய்ப்பையும் ஏற்படுத்துகின்றது என உணர்ந்தேன்.
இவ் விடயத்தை எமது நாட்டுடன் ஒப்பிட்டுபார்த்த போது வெக்கம் தான் மிஞ்சியது.
யுத்தம், பயங்கரவாதம் என்ற போர்வையில் எத்தனை உயிர்கள் பலிகொள்ளப்பட்டது.
நாம் இழந்தது மனிதர்களை மட்டுமல்ல நாட்டின் அபிவிருத்தியில் பங்குகொண்டிருந்த ஒவ்வொருவரையுமே.
யுத்தம் நிறைவடைந்தும் இந்த கொலைகள் நின்றபாடில்லை.
ஏற்கனவே பல தடைவைகள் சொன்னது போன்று எந்த ஒரு அரசியல் தேவைக்கும் தமிழர்கள்+முஸ்லிம் மீது கைவைக்க வேண்டிய அவசியம் ஒவ்வொரு அரசியல் வாதிகளுக்கும் உண்டு.
தமது அரசியல் நோக்கங்களுக்காக கொலைகளை செய்யுமளவிற்கு அதிகாரங்களையும் வளங்களையும் பாவிக்கும் இவர்கள் நாட்டின் அமைதிக்கும் அபிவிருத்திக்கும் ஏன் அதை பயன்படுத்தவில்லை.
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனாக இருந்தாலும் அவர் கொல்லப்பட்டதும் தவறு.

ஏனெனில் அவரால் கொல்லப்பட்ட அல்லது பாதிக்கப்பட்டவர்களை விடவும் பயனடைந்தவர்களே அதிகம்
அற்ப விடயங்களான தேசிய கீதமும் , பெயர் மாற்றமும் தேவை தானா? இதற்கு பிரபாகரன் இல்லாமற் போனதே காரணம்.
இதன் பேரின் இன்னும் கொலைகள் இடம் பெற வேண்டுமா?
இந்தக் கேள்விகள் ஒருபுறமிருக்க.

வடக்கு கிழக்கில் இடம் பெறும் சிறிய பெரிய திருட்டுகளுக்கும் வழிப்பறிகளுக்கும் (சமூக சீர்கேட்டுக்கும்) அரசியல் காரணங்களும் இல்லாமல் இல்லை.
ஆள் வந்தவனினதும் குழப்ப துடிப்பவனினதும் அரசியலே இவை.
இதற்கு முன்னாள் விடுதலைப் புலிகள் மீது பழியை போடுவது ஏற்க முடியாதது.
முன்னாள் விடுதலைப் புலிகள் பலபேரிடம் முன்னைய அனுபவங்களை பகிரும் போது “வாழ்க்கையில் அமைதியாக இருக்க வேண்டும்„  என்றும், இறுதி போர் கட்டத்தை கடந்து வந்த மக்களில் பலரும் “ஐயோ இனி அப்படி ஒரு வாழ்க்கை வேண்டாம் „ என்று கூறுவதுடன் வடக்கு கிழக்கில் வாழ்வோர் அரசியலைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேட்டால் “அந்தக் கதையை விடு„ எனவும் வெறுத்த நிலையில் உள்ளனர்.
மேலும் மீளக்குடியமர்தோர்களில் சந்தேகத்திற்கு இடமானவர்ள் வாராந்தம் இராணுவ முகாமிற்கு சமூகமளித்து கையொப்பமிட வேண்டும். அத்துடன் குறிப்பிட்ட நபர்களின் நடமாட்டங்கள் தினமும் அவதானிக்கப்படுகின்றன, தொலைபயணம் செல்லும் அவர்களுக்கு தொலைபேசிமூலம் தொடர்ப கொண்டு “எங்கு செல்லுகின்றாய்„ என்று விசாரனைகளும் நடக்கின்றன.
தவிரவும் தொடர் அச்சுறுத்தல் காரணமாக சிலர் இராணுவத்துடன் இணைந்து செயற்பட நிர்ப்பந்திக்கப்பட்டுமுள்ளனர்.
இந்த இறுக்கமான நிலையில் எவ்வாறு முன்னாள் போராளிகளால் தனித்து செயற்பட முடியும்.
குட்டக்குட்ட குனிகிறவன் மடையன் என்றது போல் பேரினவாதத்திற்கு சதா தலைவணங்கி நிற்கும் தமிழ் தலைமைகளே இன்றைய அடக்கு மறைக்கு துணை நிற்கின்றார்கள்.
லண்டனில் மகிந்தவிற்கு (ஸ்ரீலங்கா) எதிராக இடம் பெற்ற போராட்டத்தினால் தாயகத்தில் வாழ்வோருக்கு நிம்மதியில்லை என தமிழர்விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி கண்டணக் கடிதங்கள் எழுதுகின்றார். “மான்புமிகு ஐனாதிபதியே… வயதில் மூத்தவன் எழுதுகின்றேன்… உங்கள் அப்பாவையும் எனக்குத் தொரியும்… நீங்கள் அம்மாவின் வயிற்றில் கருகொண்டது தெரிந்திருந்தவன் என்ற வகையில் எழுதுகின்றேன்.. என ஆயிரத்தெட்டு வேண்டுதல் கடிதங்கள் எழுதப்பட்டதற்கு என்ன பதில் கிடைத்தது என்பதை சிந்திக்க வேண்டும்.
நீங்கள் யாவரும் உண்மையாகவே தமிழ் மக்களுக்காக புறப்பட்டவர்களாக இருந்தால் தமிழர்களுக்கு இந்த நிலை வந்திருக்காது.
இதனைவெளிநாடுகளில் தாயக உணர்வை பிரயேசனமற்ற முறையில் பயன்படுத்துவொரும் உணரவேண்டும்.
தமிழருக்கு இருக்கம் ஆதங்கத்தை புரிந்து கொண்டு சில நாடுகள் தமிழரை சர்வதேச பயங்கரவாதிகளாக மாற்றுவதற்கு தூபமிடுகின்றார்கள்.
ஏற்கனவே ராஜீவ் கொலை சந்தேக நபரான நளினியை பிரியங்கா சந்தித்து மாய உணர்வலைகளை தமிழரிடத்தில் உசுப்பேத்தி ஒரு கட்டம் முடிந்துவிட்டது அடுத்ததாக ராகுல் காந்தி கிளம்பிவிட்டார். ஆக மொத்தத்தில் பிரபாகரனின் வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழ் தலைமைகள் கதிரைக்காக இராமல் உரிமைக்காக இருந்தால் தமிழரும் தலைநிமிர்ந்து வாழலாம்.

Advertisement

0 Responses to “கதிரைக்காக இராமல் உரிமைக்காக போராடுங்கள்”



  1. Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s


  • பகிர் – Share

    Rightdiary பகிர் – Share

www.rightdiary.com LAUNCHING PROGRAM

Tamil 10 top sites [www.tamil10 .com ]

 

December 2010
M T W T F S S
« Nov   Jan »
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Flickr My Photos

daydreams

_DSF0260.jpg

Nature's Spectrum

Swing in Pink

Monarch Proyect

Golden oldie Explore #8

Geometría

百櫻舞春風 Bloom, Taichung

speeding.

Extented Sunrise - Reynisdrangar near Vík, Iceland

More Photos

Follow

Get every new post delivered to your Inbox.