18
Nov
11

மாவீரர் தியாகங்கள் செல்லாக் காசா?

உண்மையாகவே தமிழீழ உணர்வுடன் இருப்பவர்களுக்கு மாவீரர் தினத்தை யார் , எங்கு அனுசரித்தாலும் அதில் பங்கு கொண்டு மாவீரர்களின் தியாகத்தை நினைவுகூறுவார்கள்.

போராட்டத்தையும் மக்களின் உணர்வுகளையும் பணமாக்க தெரிந்தவர்களுக்கிடையில் தான் தற்போது கடும் பிரச்சனை உருவெடுத்துள்ளது.

இவர்கள் தான் அவர் விலைபோயிட்டார் அவர் இலங்கை அரசின் கூலி, முகவர் என ஆளுக்கு ஆள் பட்டம் சூட்டி மாவீரர்களின் தியாகங்களை செல்லாக் காசாக்குகின்றார்கள்.

வெளிநாடுகளில் போடும் கூத்துக்காக களமாடி மரணித்தவர்கள் அல்ல மாவீரர்கள். சொந்த மண்ணில் நிம்மதியாக தமிழினம் வாழவேண்டும் என்ற உணர்வினால் இறுதிவரை பட்டினியுடன் சவப்பெட்டியையும் சுமந்து சென்றவர்கள், அவர்கள் செய்த தியாகத்தை சற்று நினைத்துப்பார்த்தால் தலைவிறைத்துவிடும்.

8மணிநேரத்துக்கு ஒரு தடைவையோ 12மணி நேரத்துக்கு ஒரு தடைவையோ எதிரி ஆள்மாறி ஆள்மாறி களத்துக்கு நுளைந்து கொண்டிருக்கையில் எச்சிலைத்தனும் விழுங்க நேரமில்லாது களத்தில் தனதுயிரை தமிழுக்காய் தியாகம் செய்த மாவீரர்களை கொச்சசைப்படுத்தாதீர்கள்.

உண்மையில் ஒருவரும் ஒருவருக்கும் விலைபோகவில்லை, அப்படி சொல்லுபவர்களின் பைகளில் காசுவிழவில்லை என்பதற்காகவே அவர்கள் அப்படி சொல்லுகிறார்கள்.

இறுதிவரை மக்களுடன் மக்களாக களத்தில் நின்று தமது உயிர்களை தமிழினத்திற்காக தியாகம் செய்த தமிழீழ தேசியத் தலைவர் உள்ளிட்ட முக்கிய பொறுப்பாளர்கள் பாதுகாப்பாக தப்பி ஓடிவிட்டார்கள் என்று கதைகட்டி அவர்களின் தியாகங்கள் கொச்சசைப்படுத்தப்பட்டுள்ளமை மகா வேதனைக்குரியது.

புத்தியுள் செயற்பாட்டாளர்களாக இருந்திருந்தால் அரச ஊடகத்தில் அன்று உடனடியாக வெளியிடப்பட்டடிருந்த படத்தை மேற்கோள் காட்டடி போர் குற்ற மீறலுக்கு எதிராக அன்றே மக்கள் உணர்வை பயன்படுத்தியிருக்க வேண்டும். உணர்வு முழவதும் வெளிநாடுகளில் இருத்த சொத்துக்கள் மீது இருந்ததால், தாய்நாட்டு உணர்வு செத்துவிட்டன.

அந்த நிமிடத்தில் விடுதலையின் தூரநோக்கு உணர்வுடன் எடுக்கப்படாத முடிவினால் தான் இன்றைய குழப்பங்கள். இது மாவீரர்களின் தியாகங்களை செல்லாக் காசாக்குகின்றதை நினைக்கும் போது வெறுப்பாக இருக்கின்றது.

ஏற்கனவே முன்னர் ஒரு தடவை குறிப்பிட்டதை மீண்டும் கூற விரும்புகின்றேன். உங்களுக்குள் இருக்கும் குத்துவெட்டுக்களை இலங்கை அரசாங்கம் சாதகமாக பயன்படுத்தி தமிழர்களை சர்வதேசத்தில் நிதந்தர பயங்கரவாதிகளாக முத்திரை குத்துவார்கள் என்பதை மறந்திடாதீர்கள்.

மக்களுக்கும் உண்மைகள் புரிந்துவிட்டது.


0 Responses to “மாவீரர் தியாகங்கள் செல்லாக் காசா?”



  1. Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s


  • பகிர் – Share

    Rightdiary பகிர் – Share

www.rightdiary.com LAUNCHING PROGRAM

Tamil 10 top sites [www.tamil10 .com ]

 

November 2011
M T W T F S S
« Aug   Apr »
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

Flickr My Photos

The guardian

Untitled

1/4 daguerreotype plate in hand

Disfrutando!!!

Pan Twardowski

Lazy Lass [eXPLoReD]

I Snuck into My Neighbor's Yard to Take this Photo and My Neighbor Caught Me

before the great collapse(explore)

Waiting in line

Chi

More Photos

Follow

Get every new post delivered to your Inbox.