Author Archive for JEYAN VINCENT

16
May
12

உங்களுக்குத் தெரியுமா? BBC தவறு செய்துள்ளது.

உலகில் முதன்மை வாய்ந்த ஊடகங்களில் ஒன்றான BBC நாடுகள் தொடர்பான விபரங்கள் தொடர்பான சிறுகுறிப்பு ஒன்றை தனது இணையத் தளத்தில் பதிவு செய்துள்ளது.

ஆபிரிக்கா ஆசியா மத்தியகிழக்கு ஐரோப்பா லத்தீன் அமெரிக்கா மற்றும் அமெரிக்கா கனடா என வகைப்படுத்தலில் அந்தந்த நாடுகள் உள்ளடக்கப்பட்டடிருக்கின்றன. அதில் ஒவ்வொரு நாடுபற்றியும் சிறுகுறிப்புக்களை வரலாற்று குறிப்புக்களுடனும் வெளியிட்டுள்ளது.

இதில் இலங்கையின் வரலாற்றுக் குறிப்பில் கி.மு.ஐந்தாம் நூற்றான்டில் ஆரியர் இலங்கையில் குடியேறியதாகவும் கி.மு மூன்றாம் நூற்றாண்டில் தமிழர் இந்தியாவிலிருந்து குடியேறியதாகவும் குறிப்பிட்டுள்ளது. ( http://www.bbc.co.uk/news/world-south-asia-12004081 )

வரலாற்று குறிப்பில் மகா பெரும் தவறை செய்துள்ளது.

புத்தியுள்ள தமிழர்கள் யாராவது இருந்தால் BBC யை தமிழர்களிடம் மன்னிப்பை கோர வைப்பதுடன் இவ்வாறான வரலாற்று குறிப்பு தவறுகளை கண்டுபிடித்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க முன்வரட்டும்.

21
Apr
12

ஒலிம்பிக் வரவேற்பு விளம்பரத்தில் தமிழுக்கு முன்னுரிமை சிங்களம் புறக்கனிப்பு

லன்டன் மாநகரரில் 2012 நடைபெறவிருக்கும் ஒலிப்பிக் போட்டியை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள வரவேற்பு விளம்பரத்தில் சிங்கள மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மொழியில் வணக்கம் என்று ஆரம்பிக்கும் இவ் விளம்பரத்தில் முதும்பெரும் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதா அல்லது வேறுவிதமான முன்னுரிமைகள் வழங்கப்பட்டதா என்று கேள்வி எழுப்பப்படுகின்றது.

புவியியல் ரீதியான பிராந்தியங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருந்தால் இந்து சமுத்திரத்தின் முத்து என கருதப்படும் இலங்கையின் அரச மொழியான சிங்களம் புறக்கணிக்கப்பட்டமையானது இலங்கையின் சர்வதிகாரப் போக்குக்கு பாரிய நெத்தியடியாகவே கருதப்படுகின்றது.

பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவருவதாக கூறி பல நாடுகளின் ஒத்துழைப்புக்களை பெற்றுக் கொண்ட ஸ்ரீலங்கா அரசானது பாரிய மனித உரிமை மீறலை மேற்கொண்டு இன அழிப்பில் ஈடுபட்டதுடன் தொடர்ந்தும் மனித உரிமைக்கு அச்சுறுத்தல் விடுத்து வருகின்றது. இந்நிலையில் போர்க்குற்றம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஸ்ரீலங்காவிற்கு எதிராக அமரிக்கா உள்ளிட்ட பல முக்கிய நாடுகள் ஜெனிவாவில் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர்

இப்பின்னனிகளில் ஒலிம்பிக் வரவேற்பு விளம்பரத்தில் தமிழில் வணக்கம் என ஆரம்பிக்கப்படும் விளம்பரமானது புதிய கோணத்தில் பார்க்கப்படுகின்றது.

எதிர்காலத்தில் தமிழர்களுக்கு ஒரு நிதந்தர தீர்வு கிடைப்பதற்கும் தனி நாட்டுக்கான தீர்மானங்கள் வெற்றி பெறுவதும் தமிழர்களின் ஒற்றுமையிலும் மக்களை ஏமாற்றாது இதய சுத்தியுடன் தொடர்ந்தும் உரியவேளையில் உரிய நகர்வுகளை ஏகமனதாக முன்னெடுப்பதிலுமே தங்கியுள்ளது.

18
Nov
11

மாவீரர் தியாகங்கள் செல்லாக் காசா?

உண்மையாகவே தமிழீழ உணர்வுடன் இருப்பவர்களுக்கு மாவீரர் தினத்தை யார் , எங்கு அனுசரித்தாலும் அதில் பங்கு கொண்டு மாவீரர்களின் தியாகத்தை நினைவுகூறுவார்கள்.

போராட்டத்தையும் மக்களின் உணர்வுகளையும் பணமாக்க தெரிந்தவர்களுக்கிடையில் தான் தற்போது கடும் பிரச்சனை உருவெடுத்துள்ளது.

இவர்கள் தான் அவர் விலைபோயிட்டார் அவர் இலங்கை அரசின் கூலி, முகவர் என ஆளுக்கு ஆள் பட்டம் சூட்டி மாவீரர்களின் தியாகங்களை செல்லாக் காசாக்குகின்றார்கள்.

வெளிநாடுகளில் போடும் கூத்துக்காக களமாடி மரணித்தவர்கள் அல்ல மாவீரர்கள். சொந்த மண்ணில் நிம்மதியாக தமிழினம் வாழவேண்டும் என்ற உணர்வினால் இறுதிவரை பட்டினியுடன் சவப்பெட்டியையும் சுமந்து சென்றவர்கள், அவர்கள் செய்த தியாகத்தை சற்று நினைத்துப்பார்த்தால் தலைவிறைத்துவிடும்.

8மணிநேரத்துக்கு ஒரு தடைவையோ 12மணி நேரத்துக்கு ஒரு தடைவையோ எதிரி ஆள்மாறி ஆள்மாறி களத்துக்கு நுளைந்து கொண்டிருக்கையில் எச்சிலைத்தனும் விழுங்க நேரமில்லாது களத்தில் தனதுயிரை தமிழுக்காய் தியாகம் செய்த மாவீரர்களை கொச்சசைப்படுத்தாதீர்கள்.

உண்மையில் ஒருவரும் ஒருவருக்கும் விலைபோகவில்லை, அப்படி சொல்லுபவர்களின் பைகளில் காசுவிழவில்லை என்பதற்காகவே அவர்கள் அப்படி சொல்லுகிறார்கள்.

இறுதிவரை மக்களுடன் மக்களாக களத்தில் நின்று தமது உயிர்களை தமிழினத்திற்காக தியாகம் செய்த தமிழீழ தேசியத் தலைவர் உள்ளிட்ட முக்கிய பொறுப்பாளர்கள் பாதுகாப்பாக தப்பி ஓடிவிட்டார்கள் என்று கதைகட்டி அவர்களின் தியாகங்கள் கொச்சசைப்படுத்தப்பட்டுள்ளமை மகா வேதனைக்குரியது.

புத்தியுள் செயற்பாட்டாளர்களாக இருந்திருந்தால் அரச ஊடகத்தில் அன்று உடனடியாக வெளியிடப்பட்டடிருந்த படத்தை மேற்கோள் காட்டடி போர் குற்ற மீறலுக்கு எதிராக அன்றே மக்கள் உணர்வை பயன்படுத்தியிருக்க வேண்டும். உணர்வு முழவதும் வெளிநாடுகளில் இருத்த சொத்துக்கள் மீது இருந்ததால், தாய்நாட்டு உணர்வு செத்துவிட்டன.

அந்த நிமிடத்தில் விடுதலையின் தூரநோக்கு உணர்வுடன் எடுக்கப்படாத முடிவினால் தான் இன்றைய குழப்பங்கள். இது மாவீரர்களின் தியாகங்களை செல்லாக் காசாக்குகின்றதை நினைக்கும் போது வெறுப்பாக இருக்கின்றது.

ஏற்கனவே முன்னர் ஒரு தடவை குறிப்பிட்டதை மீண்டும் கூற விரும்புகின்றேன். உங்களுக்குள் இருக்கும் குத்துவெட்டுக்களை இலங்கை அரசாங்கம் சாதகமாக பயன்படுத்தி தமிழர்களை சர்வதேசத்தில் நிதந்தர பயங்கரவாதிகளாக முத்திரை குத்துவார்கள் என்பதை மறந்திடாதீர்கள்.

மக்களுக்கும் உண்மைகள் புரிந்துவிட்டது.

28
Aug
11

மௌனமாக இருந்து விட்டு!

ஏற்கனவே பல தடைவைகள் சுட்டிக்காட்டிய விடயங்களை முன்னெடுக்க முன்வரமுடியாதவர்களே ஏன் இப்போழுது முக்குகிறீர்கள்.

மூன்று அப்பாவிகளின் மன ஆறுதலுக்காகவும் நம்பிக்கைகாகவும் இறைவனை பிரார்த்திப்பதே தற்போது உங்களின் கடைமையாகும்.

எதுவித ஆராய்வுகளும் அலசல்களும் இல்லாது உங்களின் நன்மைகளுக்காக மக்கள் உணர்வுகளை உங்களின் அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்த முடியுமே தவிர உண்மையாக விடுதலையை எப்போதும் உங்களால் பெற்றுவிடவோ பேராடவோ முடியாது.

அத்தனை வளங்களையும் உங்கள் வசம் வைத்திருக்கும் முட்டாள்களே சற்று சிந்தியுங்கள்.

இறுதிக் கட்ட போரின் பின்னர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு சந்தேக நபர்களுக்கு நிறைவேற்றபட இருக்கும் தண்டணையை குறித்து முன்கூட்டியே உணர்ந்து பல தடைவைகள் சுட்டிக் காட்டிய போதும் மௌனமாக இருந்து விட்டு, மரண தண்டனை நிறைவேற்ற இன்னும் ஒரு சில நாட்களே இருக்கையில் தற்போது கதறியழுது என்ன பயன்.

சுமார் கடந்த மூன்று வருடங்களாக ஒருவர் ஒருவருக்கு தேசத்துரோகிகள் காட்டிக் கொடுப்பவர்கள், உளவாளிகள் என்று பட்டத்தை சூட்டியதை தவிர முட்டாள்கள் சாதித்தது என்ன?

அரசியல் சதியில் பலியாக இருக்கும் தமிழினம்

அத்துடன் ராஜீவ் காந்தி கொலையுடன் தொடர்புபட்ட மரண தண்டனைக் கைதியின் விடுதலை பற்றி எப்போது சிந்திப்பது?

வன்முறை தேர்தல்கள் வேண்டாம். வளமான வார்த்தைகள் போதும்.

இதற்காக இந்திய அரசு நளினி பிரியங்காவின் சந்திப்பை ஏற்பாடு செய்தது. தமிழ் மக்கள் நன்றாகவே ஏமாந்து கூண்டுக்குள் அடைபட்டுள்ளனர்.

எதற்காக மீண்டும் ஒரு நாடகம். இராஜதந்திர வலையில் நாம்

நளினி-பிரியங்கா சந்திப்பின் மூலம் தமிழ் மக்களை திசைதிருப்பிய இந்திய இறுதியில் இராணுவ உதவிகளை வழங்கியது.

கதிரைக்காக இராமல் உரிமைக்காக போராடுங்கள்

ஏற்கனவே ராஜீவ் கொலை சந்தேக நபரான நளினியை பிரியங்கா சந்தித்து மாய உணர்வலைகளை தமிழரிடத்தில் உசுப்பேத்தி ஒரு கட்டம் முடிந்துவிட்டது

16
Mar
11

Centre for Tamileela History (CTH)

தமிழில் வாசிக்க அழுத்துக

தமிழில் வாசிக்க அழுத்துக

Even though the war has ended (?) in Sri Lanka, the people living there are still in a state of fear to express freely their views or political comments. Particularly, in the case of the Tamils living in Jaffna confronted with increasing crimes and in search of some form of security for their life and property. Hence, some people out of ignorance express that the lifting of curfews and emergency laws has caused them these concerns and so welcome such military atmosphere. Continue reading ‘Centre for Tamileela History (CTH)’

19
Feb
11

தொப்புள் கொடி உறவுக்கு ஆப்படிக்கும் அரசியல் ஆரம்பம்!

2011 Feb 172011 Feb 182011 Feb 19

அண்மையில் வெளியாகிய செய்திகள் படத்தை அழுத்துங்கள்- 2011 Feb 16

அண்மையில் வெளியாகிய செய்திகள் படத்தை அழுத்துங்கள்- 2011 Feb 16

அண்மை நாட்களாக இந்திய மீனவர்கள் விவகாரம் சூடு பிடித்துள்ளதை யாவரும் அறிந்ததே. Continue reading ‘தொப்புள் கொடி உறவுக்கு ஆப்படிக்கும் அரசியல் ஆரம்பம்!’

29
Jan
11

மக்கள் நலன் பேசிப்பேசி தனிப்பாட்ட பழிகளை தீர்க்கும் அரசியல் இது

சுனாமி பொது கட்டமைப்பு மற்றும் இராணுவ அடக்கு முறைகளுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் யாழில் நடந்த போது எதிலுமே பங்கு பற்றாத சுரேஸ் பிரேமச் சந்திரன் மக்கள் நலன் என கூறுவது எதனை?

விடுதலைப் புலிகள் இருக்கும் வரையும் த.தே.கூட்டமைப்பு உண்மையிலேயே மக்களுக்கான ஒரு அரசியல் சக்கதியாக தான் இருந்தது ஆனால் இன்று அப்படியல்ல. மக்களே விழிப்பாயிருங்கள்.

மக்கள் நலன் பேசிப்பேசி தனிப்பாட்ட பழிகளை தீர்க்கும் அரசியல் இது

சுனாமி பொது கட்டமைப்பு மற்றும் இராணுவ அடக்கு முறைகளுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் யாழில் நடந்த போது எதிலுமே பங்கு பற்றாத சுரேஸ் பிரேமச் சந்திரன் மக்கள் நலன் என கூறுவது எதனை

11
Jan
11

எமது கைகளில் ஆயுதங்களை தந்து எங்களை பயங்கரவாதிகளாக்கியவர்கள் இவர்களே

அதிகமாக பேசுவதற்கு ஒன்றுமில்லை காரணம் வரலாற்றை யாவரும் அறிந்துள்ளீர்கள் அல்லது நாங்கள் வாழ்ந்து கொண்டிருப்பது வரலாற்று காலகட்டமாகும்.

எமது உணர்வுகளை வல்லரசுகள் அல்லது வசதிபடைத்த நாடுகள் தமது சுயநலங்களுக்காக எதையெல்லாம் செய்தார்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பதும் தெரிந்தவையே.
இந்த படங்களும் சொல்லும் செய்தி என்ன?
விடுதலைப் புலிகள் சிறுவர்களுக்கு அருகாமையில் எப்போது வருவார்கள் சிறுவர்களின் கைகளில் எப்போது ஆயுதத்தை கொடுப்பார்கள் என கொட்டாவி விட்டுக்கொண்டே காவல் கிடந்து படங்களை தத்ரூபமாக எடுத்து சிறுவர் போராளிகளை புலிகள் சேர்க்கிறார்கள் என யாவரும் பிரசாரம் செய்தார்கள்.

இந்த பழைய கதை ஏன் இன்னும் உலகத்தின் காதுகளல் எட்டவில்லை?

புலிகள் கொடுத்தால் பயங்கரவாதம் சிறுவர் போராளிகள் அமெரிக்காவும் ஸ்ரீலங்காவும் கொடுத்தால் கல்வியூட்டலாகுமா?

புலிகள் கொடுத்தால் பயங்கரவாதம் சிறுவர் போராளிகள் அமெரிக்காவும் ஸ்ரீலங்காவும் கொடுத்தால் கல்வியூட்டலாகுமா?

இதுவும் சிறுவர் போராளிகளை ஊக்குவிக்கும் செயல் தானே?அமெரிக்காவினதும் ஸ்ரீலங்காவினதும் பாடசாலை மாணவர்களின் கல்வியில் மண்ணள்ளிப்போடும் கூட்டு முயற்சி

இதுவும் சிறுவர் போராளிகளை ஊக்குவிக்கும் செயல் தானே?அமெரிக்காவினதும் ஸ்ரீலங்காவினதும் பாடசாலை மாணவர்களின் கல்வியில் மண்ணள்ளிப்போடும் கூட்டு முயற்சி

கூட்டு பயிற்சி நடவடிக்கை யாருக்கு மாணவர்களுக்கா ?

கூட்டு பயிற்சி நடவடிக்கை யாருக்கு மாணவர்களுக்கா ?

பயங்கரவாதக் கல்வியா அல்லது நாட்டை பாதுகாக்கும் கல்வியா?

பயங்கரவாதக் கல்வியா அல்லது நாட்டை பாதுகாக்கும் கல்வியா?

இதுவும் சிறுவர் போராளிகளை ஊக்குவிக்கும் செயல் தானே?அமெரிக்காவினதும் ஸ்ரீலங்காவினதும் பாடசாலை மாணவர்களின் கல்வியில் மண்ணள்ளிப்போடும் கூட்டு முயற்சி

இதுவும் சிறுவர் போராளிகளை ஊக்குவிக்கும் செயல் தானே?அமெரிக்காவினதும் ஸ்ரீலங்காவினதும் பாடசாலை மாணவர்களின் கல்வியில் மண்ணள்ளிப்போடும் கூட்டு முயற்சி

ஸ்ரீலங்காவினதும் அமெரிக்காவினதும் கூட்டு நடவடிக்கையின் போது Pearl Harbor LSD52

ஸ்ரீலங்காவினதும் அமெரிக்காவினதும் கூட்டு நடவடிக்கையின் போது Pearl Harbor LSD52

ஸ்ரீலங்காவினதும் அமெரிக்காவினதும் கூட்டு நடவடிக்கையின் போது Pearl Harbor LSD52

ஸ்ரீலங்காவினதும் அமெரிக்காவினதும் கூட்டு நடவடிக்கையின் போது Pearl Harbor LSD52

ஸ்ரீலங்காவினதும் அமெரிக்காவினதும் கூட்டு நடவடிக்கையின் போது Pearl Harbor LSD52

ஸ்ரீலங்காவினதும் அமெரிக்காவினதும் கூட்டு நடவடிக்கையின் போது Pearl Harbor LSD52

31
Dec
10

கதிரைக்காக இராமல் உரிமைக்காக போராடுங்கள்

சுவிஸின் தேசிய தின கொண்டாடங்கள் முடிவடைந்ததும் வீதிகளை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டவர்கள், வீதியையும் நடைபாதையையும் இணைத்து அமைத்திருந்த தார் அணைப்புகளை நீக்கிக் கொண்டிருந்தார்கள்.
ஒரு நாள் கூத்துக்கு இவ்வளவு செலவு செய்து வீதிகளையும் மெழுகிறார்களே என்று மனதுக்குள் நினைத்துவிட்டு நகர்ந்து கொண்டே நடைபாதையை சமப்படுத்தாதிருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும் என ஆழமாக யோசித்தேன். Continue reading ‘கதிரைக்காக இராமல் உரிமைக்காக போராடுங்கள்’

25
Nov
10

தமிழர்களின் பலவீனமே ஜே.வி.பியின் நாடகம். முட்டாள்கள் சிங்களவர்களா? தமிழர்களா?

போர் நிறைவடைந்து சுமார் இரண்டு வருடங்களை எட்டுவதற்கிடையில் தமிழர்கள் படும் அவஸ்தை சொல்லிலடங்காது.

சிங்களவர்களின் ஆதிக்கம் குடாநாட்டில் அதிகரித்திருப்பதுடன், நிலவளம், கடல்வளம் என்பவற்றை அபகரித்தும் செல்கின்றனர், அத்துடன் வெளிநாட்டு பணத்தையும் வறுகுவதற்கு என பல தமிழ் ஏமாற்று பேர்வழிகள் அரசியல் பின்னனியில் செயற்பட்டுவருகின்றனர். இதற்கு சிங்கள கூட்டும் ஒருபுறம். Continue reading ‘தமிழர்களின் பலவீனமே ஜே.வி.பியின் நாடகம். முட்டாள்கள் சிங்களவர்களா? தமிழர்களா?’




  • பகிர் – Share

    Rightdiary பகிர் – Share

www.rightdiary.com LAUNCHING PROGRAM

Tamil 10 top sites [www.tamil10 .com ]

 

May 2012
M T W T F S S
« Apr    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Flickr My Photos

The guardian

Untitled

1/4 daguerreotype plate in hand

Disfrutando!!!

Pan Twardowski

Lazy Lass [eXPLoReD]

I Snuck into My Neighbor's Yard to Take this Photo and My Neighbor Caught Me

before the great collapse(explore)

Waiting in line

Chi

More Photos

Follow

Get every new post delivered to your Inbox.