03
Feb
17

மீண்டும் ஓர் சிலுவைப்போர்!

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு இது தான் இயேசுவின் போதனை! ஒருவர் அடித்தால் எமது உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக்கொண்டு நாம் சென்ற சீரிய வழியிலேயே செல்ல வேண்டும், என்ற ஆழ்ந்த தத்துவ கருத்துடைய இப்போதனையைப் பெற்றிருக்கும் கிறிஸ்தவர்களாகிய நாம் உணர்ச்சி வசப்பட்டு எடுக்கும் எந்த முடிவுகளும் பாரிய விளைவுகளையே ஏற்படுத்தும் மற்றும் இயேசு கிறிஸ்துவிற்கு அபகீர்த்திiயுயும் ஏற்படுத்துகின்றோம்.

அமெரிக்காவின் 45ஆவது ஜனாதிபதி டெனால்ட் ரம் முஸ்லிம்களுடன் கடும்போக்கு தன்மையில் நடந்துகொள்வது தொடர்பாக, கடந்த 30வருடங்களுக்கு மேலாக இனங்களுக்கிடையிலான போரில் பாதிக்கப்பட்டவன் என்ற முறையிலும் கிறிஸ்தவன் என்ற அடிப்படையிலும்  எனது கருத்தை பதிவிடுகின்றேன்.

%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%af%8a%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%87

Dr.A.P.J Abdul Kalam with The pentecostal Mission workers

முஸ்லிம்கள் எல்லோரும் பயங்கரவாதிகளுமல்ல, எல்லோரும் முஹமதை பின்பற்றுவோருமல்ல, அவர்களுக்குள்ளும் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அமரர் காலாநிதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் போன்றவர்களும் உள்ளனர்.

அவர்களில் எல்லோரும் குர்ஆனை படிப்போருமல்ல, கிறிஸ்துவை ஏற்பதற்காகவும், பயங்கரவாத சூழ்நிலையிலிருந்து தப்பித்து, பிள்ளைகளுடன் நல்ல சமூகத்துடன் இணைந்து வாழவேண்டுமென்றும் அடைக்கலம் தேடுவோரும் உள்ளனர். பரிசுத்த வேதாகமம் கிடையாததினால், இயேசுவின் ஒரு வார்த்தையையும் அறியாதவர்களாக எங்கோ கிடைத்த இயேசுவின் படத்ததை பத்திரப்படுத்தி அதையே தினமும் பார்த்து பார்த்து அன்பைப்பற்றி ஒரு வரிதனும் பேசாத குர்-ஆனை புறக்கனித்துக் கொண்டிருக்கும் முஸ்லிம்களும் இருக்கவே செய்கின்றனர்.

மத ஆதிக்கத்தினால் ஏற்பட்ட போர்களை காரணம் காட்டி இன்று பலர் கடவுள் நம்பிக்கையே இழந்து நிற்கின்றனர், இவ் மதப் போர்களில் கிறிஸ்தவர்களும் ஈடுபட்டமையினால் சுவிசேஷம் அறிவிப்பதற்கு முட்டுக்கட்டையாகிவிட்டார்கள். இயேசுவின் நாமத்தினால் மீண்டும் ஒரு வரலாற்றுத் தவறை இழைப்பதற்கு எந்த ஒரு கிறிஸ்தவனும் அனுமதியளிக்கக் கூடாது.

மதப்போர்கள் தொடர்பாக இங்கு தெளிவுபடுத்துவது நோக்கமல்ல. முஸ்லிம்கள் யார் என்பதை நாம் அறிய வேண்டும் என்பதை மிகவும் சுருக்கமாக கூறவிரும்புகின்றேன்.

முஸ்லிம்கள் அல்லது முஸ்லிம் தீவிரவாதிகள் சண்டையிடுவது மக்களுடன் இல்லை என்பதை முதலில் தெளிவாக புரியவேண்டும், அவர்கள் போர் செய்வது வானத்தையும் பூமியையும் அண்டசராசரங்களையும் படைத்த தேவனுடனும் அவருடைய முதற் பேறாகிய ஏக சுதன் இயேசுக்கிறிஸ்துவுடனுமே என்பதை அறியவேண்டும்.

அதற்குரிய ஆதாரங்களை பரிசுத்த வேதாகமத்திலிருந்து நோக்குவோம்.

யூதா1:9 “பிரதான தூதனாகிய மிகாவேல், மோசேயின் சரீரத்தைக் குறித்துப் பிசாசுடனே தர்க்கித்துப்பேசினபோது, அவனைத் தூஷணமாய்க் குற்றப்படுத்தத் துணியாமல்: கர்த்தர் உன்னைக் கடிந்து கொள்ளுவாராக என்று சொன்னான்“ இங்கு தான் விடயம் இருக்கின்றது ஏனெனில் கர்த்தர் மேசேயின் சரீரத்தை அடக்கம் செய்ததை இதுவரையிலும் எவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை ஆகவே தான் சாத்தானுக்கும் மிகாவேலுக்குமிடையில் தர்க்கமுன்டானது, உபாகமம் 34:6 “அவர் அவனை மோவாப் தேசத்திலுள்ள பெத்பேயோருக்கு எதிரான பள்ளத்தாக்கிலே அடக்கம்பண்ணினார். இந்நாள்வரைக்கும் ஒருவனும் அவன் பிரேதக்குழியை அறியான்.“

பிசாசு மேசேயின் சரீரத்தைக் கைப்பற்றி இஸ்ரவேல் மக்களை பல வழிகளிலும் ஏமாற்றிவிடவே யோசனையாக இருந்தான் ஆனால் இயேசுவின் சிலுவைமரணம் வரைக்கும் அவனால் முடியாமல் போய்விட்டது, ஆகவே தோல்வியடைந்த பிசாசு பல வழிகளிலும் கிறிஸ்தவர்களுக்குள்ளேயே ஊடுருவி கிறிஸ்துவின் சபையை கலைக்க முயற்சி செய்கின்றான், ஆகவே தான் வெளிப்படுத்தின சுவிசேஷத்தில் யோவானுக்கு ஏழு சபைகளின் நிலைமைகளை கர்த்தர் வெளிப்படுத்துகின்றார். வெளி 2:24. “தியத்தீராவிலே இந்தப் போதகத்தைப் பற்றிக்கொள்ளாமலும்இ சாத்தானுடைய ஆழங்கள் என்று அவர்கள் சொல்லுகிறார்களே, அந்த ஆழங்களை அறிந்துகொள்ளாமலுமிருக்கிற மற்றவர்களாகிய உங்களுக்கு நான் சொல்கிறதாவது, உங்கள்மேல் வேறொரு பாரத்தையும் சுமத்தமாட்டேன்.“

முதல் நூற்றாண்டிலேயே கிறிஸ்தவ சபைகளுக்குள் சாத்தான் ஊடுருவியிருந்த நிலையில் கி.பி 381 சபை இரண்டாக உடைக்கப்பட்டதுடன் மரியாள் வழிபாடும் சிலை வழிபாடும் மேலோங்கியிருந்து.

இந்நிலையில் கி.பி 571 – கி.பி 630 முஹமது பிறந்து சுமார் 26 வருடங்களுக்குள் முஸ்லிமை ஸ்தாபிக்கின்றான். சகோதரர்களை குற்றம் சாட்டுகின்றதான சாத்தானின் ஆவியுடைய பிசாசு மேசே அடக்கம் பண்ணப்பட்டதான மேவாப்  தேசத்திலிருந்து சுமார் 1500 கீ.மீற்றர் தொலைவிலுள்ள மெக்காவிலிருக்கும் முஹமதை தனது கருவியாக பாவிக்கின்றான், இதனால் தான் முஹமது தான் மோசேக்கு அடுத்ததாக அனுப்பப்பட்ட மகா இறைவாக்கினன் என்று தன்னைத்தானே உரிமைகோருகின்றான். அத்துடன் கிறிஸ்துவின் சிலுவைமரணத்தையும் பிதா அவருக்களித்திருக்கும் சகல அதிகாரங்களையும் சகிக்க முடியாதவனாகிய இப் பிசாசானவன் முஹமது ஊடாக இயேசு மரியாளின் மகன் என்று மட்டும் ஒப்புக்கொண்டுவிட்டு மற்றைய இடங்களில் தனக்குக் கீழானவாராகவே காண்பிக்கின்றான், ஏனெனில் இந்த லூசிப்பரைப் பற்றி வேதாகமம் என்ன சொல்லுகின்றது. ஏசாயா 14:(12-17)14.“நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே. 15. ஆனாலும் நீ அகாதமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய்.“

ஆகவே தான் முஹமதின் நிலைப்பாடு இப்படியிருந்தது, மேலும் இப்பொல்லாத ஆவி பல கொலைகளை செய்வதற்கும் இன்றுவரையுள்ளதான அக்கிரமங்களை செய்வதற்கும் தைரியம் கொடுத்துள்ளது யோவான் 8:44 “நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்.“

ஆகவே தான் இதன் பிடிக்குள் அகப்பட்டிருக்கும் அப்பாவி முஸ்லிம் மக்களுக்கு அன்பைப்பற்றி எடுத்துக் கூறுவது ஒவ்வொரு கிறிஸ்தவனினதும் கட்டாய கடமை.

குர்-ஆனை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் அண்மையில் குர்-ஆனையும் ஹதீஸ்களையும் படித்தேன் அன்பைப்பற்றி ஒருவரியும் இருக்கவில்லை, மேலும் உலக முஸ்லீம் அமைப்பின் முதல் பரிசு பெற்ற “அர்-றஹீக் அல்-மக்தும்“ என்ற புத்தகத்தில் முஹமதின் வரலாற்றையும் முஸ்லிம்களின் உருவாக்கத்தையும் படித்தபோது வாந்திஎடுக்குமளவிற்கு இரத்தவாடையே வீசியது. அல்லாவுக்கும் முஹமதுக்கும் அடிமையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது, ஆனால் பரிசுத்த வேதாகமத்தில் கிறிஸ்தவர்களுக்கு தேவனின் அன்பு எங்களை அவரின் பிள்ளைகளாக்கியுள்ளது என்பததை சொல்லுகின்றது, ஆகவே தான் கிறிஸ்துவின் அன்பை முஸ்லிம் மக்களுக்கு அதிகமாக செலுத்துவது எமது கடமை.

முஸ்லிம்களுக்கு தொழுகைகளும், மத கோட்பாடுகளும் கட்டாய கடமையாக்கப்பட்டுள்ளது, ஆனால் நமக்கோ தந்தை பிள்ளைகள் என்ற உறவின் அடிப்படையில் உரிமையாக்கப்பட்டுள்ளது, பாரிய வேறுபட்ட அன்பை தேவனிடமிருந்து நாம் பெற்றிருக்கின்றோம்.

குர் ஆனையும் முஸ்லிம் போதனைகளையும்  தவிர்ந்த வேறு எதனையுமே அறியாத அவர்கள் எவ்வாறு? எங்கு? அன்பை கற்றுக் கொள்ள முடியும் இருக்கின்ற ஒரே வழியையும் அடைத்துவிட்டால்?

முஸ்லிம் அல்லாத நாடுகளில் வதியும் ஒவ்வொரு முஸ்லிம்களுக்கும் கட்டாய சமயக்கல்வி கற்பிக்கப்பட வேண்டும் விசேஷமாக அமெரிக்கா உள்ளிட்ட கிறிஸ்தவ நாடுகள் குர்-ஆனையும் பரிசுத்த வேதாகமத்தையும் ஒவ்வொரு முஸ்லிம்களுக்கும் கட்டாய கல்வியாக்கினால் தான் பயங்கரவாதத்திலிருந்து அப்பாவி மக்களையும் நாட்டையும் பாதுகாக்க முடியும்.

கிறிஸ்தவர்கள் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கும் நாடுகள் பரிசுத்த வேதாகமத்திற்கு விரோதமாக மனித சமூகத்திற்கு கேடுவிளைவிக்கும் தீமையானவற்றை சுதந்திரம், நவீன தொழிநுட்பம், நாகரீகம் என்ற போர்வையில் ஆதரித்து ஊக்கமளிப்பதை குறிப்பாக ஓரினபாலுறவு போன்றவற்றை கைவிடவேண்டும், விபச்சாரத்தளங்கள் ஆராதனைக் கூடங்களாகவேண்டும்.

எசேக்கியேல்38 :12. “நான் கொள்ளையிடவும் சூறையாடவும், மதில்களில்லாமல் கிடக்கிற கிராமங்களுள்ள தேசத்துக்கு விரோதமாய்ப் போவேன்; நிர்விசாரமாய் சுகத்தோடே குடியிருக்கிறவர்களின்மேல் வருவேன்; அவர்கள் எல்லாரும் மதில்களில்லாமல் குடியிருக்கிறார்கள்; அவர்களுக்குத் தாழ்ப்பாளும் இல்லை, கதவுகளும் இல்லை என்பாய்.“  இத் தீர்க்கதரிசனத்தின் படி ஆபத்து மிக விரைவாக நிகழ இருக்கின்றது இதை யாராலும் தடுக்க முடியது.

நம்முடைய கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்துவும் அதிசீக்கிரமாக வந்துகொண்டிருக்கின்றார். ஆகவே சிலுவைப் போரையல்ல சிலுவையையே நாம் சுமக்க வேண்டும்.

Advertisements
06
Mar
16

டெல்லி சென்ற முன்னாள் புளொட் உறுப்பினரை காணவில்லை

சுவிஸை வதிவிடமாகக்கொண்ட முன்னாள் புளெட் உறுப்பினரான ஐயாத்துரை யோகநாதன் வயது 50 இந்தியா டெல்லியில் காணாமல் போயுள்ளதாக அவரது நண்பர்ரெருவர் சுவிஸ் பொலிஸில் முறையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

IYADURAI (சுவிஸ் ஆள் அடையாள அட்டை)

Swiss Identity card

 

இதுபற்றி மேலும் தெரியவருவதாவது..
குறித்துநபர் கடந்த 2015 டிசம்பர் இலங்கை சென்றுவிட்டு அங்கிருந்து இந்தியாவிற்கு சென்றதாகவும், ஆத்மீக பயணமாக பீகாருக்கு சென்று பின் மீண்டும் அங்கிருந்து சுவிஸ் நாட்டுக்கு திரும்புவதற்காக, பெப்ரவரி மாதம் பீகாரிலிருந்து டெல்லி விமான நிலையத்திற்கு ரயிலில் பயணித்துள்ளார், இதனால் சுமார் இரண்டு மணித்தியாளங்கள் தாமதமாக விமான நிலையத்தை சென்றடைந்ததாகவும், பெப்ரவரி மாதம் 8 திகதிய விமானத்தை தவறவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மறுநாள் காலை (பெப் 9) மீண்டும் புதிய விமான பயணச் சீட்டை பெறுவதற்கு பணம் தேவைப்படுவதாக சுவிஸிலுள்ள அவரது நண்பருடன் தொடர்பு கொண்டுள்ளார், புதிய IYADURAI (போலி விமான பயணச் சீட்டு)விமான பயண சீட்டுடன் விமான நிலையத்திற்கு சென்ற போது தனக்கு வழங்கப்பட்டுள்ளது போலி பயணச்சீட்டு என்பதை தெரிந்துகொண்டார், இது தொடர்பாக குறித்த பயணமுகவர் நிலையத்திற்கு எதிராக முறைப்பாடு செய்வதற்காக அருகிலுள்ள பொலிஸ் நிலையம் ஒன்றுக்கு சென்று அங்கிருந்து மீண்டும் நண்பருடன் தொடர்பு கொண்டு நிலைமையை தெளிவுபடுத்தியதுடன், தனக்கு இந்தி மொழி தெரியாததினால் மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் வருகைக்காக பொலிஸ் நிலையத்தில் காத்திருப்பதாக தெரிவித்திருந்தார், 9,10 மற்றும் 11ஆம் திகதி மாலைவரையும் (சுவிஸ் நேரம்) தம்முடன் குறித்த நபர் தொடர்பில் (+91 1787 139 53 96) இருந்ததாகவும் மறுநாள் 12ஆம் திகதி முதல் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டதையடுத்து குறித்த நபரது தகவல் எதுவும் இல்லை என்று அவரது நண்பர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.IYADURAI (இலங்கை கடவுச் சீட்டு)
சுமார் மாதம் ஒன்றை எட்டவுள்ள நிலையில் குறித்த நபர் தொடர்பான எவ்வித துப்புக்களும் கிடைக்காத நிலையில் தாம் கலங்குவதாக நண்பர் தெரிவித்துள்ளார்.
சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொண்ட இவர் சுவிஸின் வதிவிட உரிமையையும், இலங்கை பிரஜாவுரிமையையும் கொண்டவராவார். ஸ்ரீலங்கா இராணுவத்தின் கடுமையான சித்திரைவதையினால் பாதிக்கப்பட்ட இவர் சுவிஸில் புகழிடம் அடைந்துள்ளதுடன் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவிகளையும் பொற்றுவந்தார். என்பது குறிப்பிடத்தக்கது.

 

29
Feb
16

என்று தொலையும் இலங்கையின் அசமந்தபோக்கு? தூதுவராலயத்தின் செயற்பாட்டால் புலம்பெயர் மக்களும் அவதி!

சுவிற்ஸிலாந்திலிருக்கும் இலங்கை தூதரகம் அசமந்தப்போக்காக செயற்படுவதாக சுவிஸிலிருக்கும் இலங்கை மக்களினால் விசனம் தெரிவிக்கப்படுகின்றது.

தூதரகத்திற்கு மக்களினால் அனுப்பிவைக்கப்படும் ஆவணங்களை முறையான விதத்தில் கோவைப்படுத்துப்படவில்லை என்றும், மீண்டும் மீண்டும் ஆவணங்களின் பிரதிகளை கேட்டுவருவதாகவும், இலங்கயிலுள்ள தலைமைகத்திலிருந்து அனுப்பிவைக்கப்படும் மறுமொழிகளை வழங்குவதற்கு தாமதிப்பதாகவும் கூறப்படுகின்றது. மேலும் அலுவலகர்களின் இத் தாமதத்திற்கு பல சாட்டுப்போக்குகளை மக்களுக்கு கூறிவருவதாகவும், வேறுவழியை கையாளவேண்டியிருப்பதாக ஆலோசனை கூறிவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து மக்கள் இலங்கையில் தாமாகவே நேரடியாக அலுவலகங்களுடன் தொடர்பு கொள்ளுவதாகவும் அங்குள்ளவர்கள் சிங்கள மொழிமட்டுமே பேசுவதால் தொடர்பாடலில் சிக்கல்கள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றுது, இதையடுத்து தமக்கு ஆகவேண்டிய அலுவல்களுக்காக இடைத்தரகர்களுக்கு சுமார் 500 முதல் 1500 சுவிஸ் பிராங்குகளை மேலதிகமாக செலுத்தி ஆவணங்களை பெற்றுக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.

அன்மையில் நபர் ஒருவர் தாய்நாட்டுக்கு செல்வதற்காக சுவிஸ் அரசாங்கத்திடமிருந்து சுமார் 20வருடங்களின் பின்னர் தனது இலங்கை கடவுச்சீட்டை மீளபெற்றுக்கொண்டு அதனை இலங்கை தூதுவராலயத்திற்கு 2015 நடுப்பகுதியில்  கையளித்து அதற்கான பற்றுச்சீட்டுக்களையும் பெற்றுக் கொண்டுள்ளார், 2016 மாசிவரையும் குறித்த நபருக்கு எந்தப்பதிலும் இதுவரையளிக்காததுடன், மீண்டும் கடவுச்சீட்டுக்களை கையளிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர், இதையடுத்து குறித்த நபர் இலங்கையில் தொடர்புகொண்டபோது குறிக்கப்பட்ட நபருக்கான மறுமொழிகள் 2015 மார்கழி மாதமளவில் சுவிஸிக்கு அனுப்பிவைக்கப்படுள்ளதாகவும் ஆனால் அதற்குரிய மிகுதி நடவடிக்கைகளை சுவிஸிலுள்ள அலுவலகம் மேற்கொள்ள வில்லை என்றும் பதிலளிக்கப்ட்டுள்ளது.

சுவிஸின் அரச இயந்திரத்தின் கட்டுக்கோப்பையும்இ சுவிஸிலுள்ள நிறுவனங்களினதும் மக்களினதும் சிறந்த கட்டுக்கோப்பான வாழ்க்கை முறைச் சூழலிலும், இயங்கிவரும் இலங்கைத் தூதுவராலய அதிகாரிகள்லு சிறந்த நிர்வாக முறையை இதுவரை கற்றுக்ககொள்ளாமல் இருப்பது விசனத்தை ஏற்படுத்துகின்றதுஇ மேலும் போர் முடிந்த சூழலில் மக்களுக்கான சிறந்த வாழ்கையை எப்படி ஏற்படுத்திக் கொடுப்பார்கள்? இவ்வாறான அசமந்தப் போக்கான அரசாங்கத்தை நம்பி எவ்வாறு வெளிநாடுகள் அபிவிருத்திக்கு பங்களிக்கின்றன? என்று குறிப்பிட்ட  கேள்விகளை எழுப்பியுள்ளார்.

மேலும் எந்தவித பிரச்சனைகளுமின்றி நாடுதிரும்பி வரவேண்டுமே என்ற காரணத்திற்காக இடைத்தரகர்கள் மூலமாகவே தங்களுக்கான ஆவணங்களை தயார்ப்படுத்த வேண்டியுள்ளதாக வெளிநாட்டில் வாழும் பல இலங்கையர்களும் கருத்து தெரிவிக்கின்றனர்.

அச்சம் காரணமாக பலர் இலங்கை திரும்புவதற்கு தயக்கம் காட்டிவருகின்ற சூந்நிலையில் இது போன்ற சம்பவங்கள் மேலும் மக்கள் மத்தியில் தயக்கத்தையும் அரசு மீது அவநம்பிக்கையுயும் ஏற்படுத்தும்.

17
Dec
15

புவி வெப்பமடைதல் எதற்காக? யுத்தங்கள் எதற்காக?

1″வானமும் பூமியும் அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டுள்ளது…” 2″தீவுகள் யாவும் அகன்று போயின…” 3″ இது எல்லாம் யாக்கோபினுடைய மீறுதலின் நிமித்தமும், இஸ்ரவேல் வம்சத்தாருடைய பாவத்தின் நிமித்தமும் சம்பவிக்கும்…

இன்று உலகில் பேசப்படும் அரசியலும், பருவநிலைமாற்றமும், உலகவெப்பமடைததும் ஏற்கனவே பரிசுத்த வேதாகமத்தில் குறிக்கப்பட்டுள்ளதை அறியாமல் பேசுவதில் அர்த்தமில்லை, அக்கிரமம் மிகுதியாக காணப்படும் என்றும் இவைகள் எல்லாம் சம்பவிக்க வேண்டியவைகளே என்ற இயேசுவின் வார்த்தைகளும் முழு நிச்சயமாய் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ள காரணத்தினால் எதற்காகவும் கவலைப்படுவதில் அர்த்தமில்லை, மாறாக நாம் விழிப்புள்ளவர்களாய் இருப்பதன் மூலம் மட்டுமே எம்மை நாம் திருப்திப்படுத்த முடியம்.

இங்கு தரப்பட்டுள்ள வேதாகம வாக்கியங்களை கூர்ந்து கவணியுங்கள், புவி வெப்பமடைதல் எதற்காக? யுத்தங்கள் எதற்காக?

அண்மையில் தமிழகம் சென்னை மற்றும் கடலூர் பகுதிகளில் கொட்டிதீர்த்த கனமழை அந்நகரங்களை பாழாக்கியது, இது தொடர்பான செய்திகளை வெளிநாட்டு ஊடகங்கள் செயற்கை அழிவு என்று வர்ணித்திருந்ததுடன் பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் லாரண்ட் பேபியஸ் பருவநிலை மாற்றத்தின் எச்சரிக்கை என்றும் தெரிவித்திருந்தார்.

ஆசியர்களை அதாவது இந்திய இலங்கையர்களை ஏழையின் சின்னங்களாகவே சித்தரிக்கும் மேற்குலகத்தினர் வெளியிட்ட இக் கருத்துக்களின் தாக்கம் என்ன?

யப்பானில் நிகழ்த பூகப்பத்தினால் ஏற்பட்ட அணுவுலை கசிவைத்த தொடர்ந்து இந்தியாவிலும் அணுவுலை நிர்மாணிப்பதற்கு எதிராக மிகப் பெரிய போராட்டம் நிகழ்த்தப்பட்டதையும் இங்கு நினைவுகூர வேண்டும்.

இந்திய அரசியலில் குழப்பத்தை தோற்றுவிப்பதற்கும், தொழில்நூட்ப வளர்ச்சியை கட்டுப்படுத்துவதற்கும் அதாவது வானியல் ஆராய்ச்சிகளை கட்டுப்படுத்துவதற்கு மக்களை கிளப்பிவிடும் சர்வதேசிய அரசியல் காய்நகர்த்தலுக்குட்ட கருத்துக்களே இவைகள். இந்திய வல்லரசுக்கு எதிராக போரை உள்நாட்டிலேயே தூண்டிவிடும் தந்திரம் இது.

பிரான்ஸ் வெளிட்ட கருத்துக்கு The Hinduமறுப்புத் தெரிவித்து இந்திய மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இது இயற்கை அழிவு என்பதை தெளிவுபடுத்தியிருந்ததுடன் கட்டுமான சீர்குலைவுகளையும் சுட்டிக்காட்டியிருந்தார். எனினும் அப்போதிருந்த சூழ்நிலையில் இந்திய தரப்பு கூறியிருந்த கருத்துக்கு அளிக்கப்ட்ட முக்கியத்துவத்தை விட பிரான்ஸின் கருத்தையே மக்கள் அதிகமாக ஏற்றிருந்தனர் என்பதை “த இந்து” நிகழ்த்திய வாக்குப்பதிவு வெளிப்படுத்தியிருந்தது.

வெள்ளப்பாதிப்பின் போதும் அதற்குப் பின்னாலும் தமிழக அரசு நடந்துகொள்ளும் விதமும், மக்கள் மனநிலையில் மாற்றமில்லை என்பதையும் அவ்வப்போது வெளிவரும் செய்திகளும் உறுதி செய்கின்றன.

ஆகவே பரிசுத்த வேதாகமமின்றி தற்போதைய அரசியல் இல்லை என்பதை மட்டும் மக்கள் புரிந்துகொள்வது அவசியம். தற்போதைய உலகில் நிகழும் அத்தனை மாற்றங்களும் சம்பவிக்க வேண்டியவைகளே ஆகவே நிலைமையை அவதானியுங்கள் பரிசுத்த வேதாகமத்தை படிங்கள்.

21
Jul
15

தேவையில்லாத தேர்தலும்! நெளிவுகளின் தெளிவும்!

பருவமழை பொழியுதோ இல்லையோ? இலங்கையில் தேர்தல் நிச்சயம்.

காலனித்துவ ஆட்சி முடிவுக்கு வந்ததையடுத்து இலங்கையில் நடைமுறையில் இருப்பதாக கூறப்படும் ஜனநாயக முறையிலான தேர்தல் மக்களுக்காகவா? அல்லது அரசியல் வாதிகளுக்காகவா? இலங்கையில் ஜனநாயகம் என்பது இருந்தால் பாராளுமன்றம் கலைக்கப்படும் அவசியம் ஏற்படாது? தற்போது நிகழவிருக்கும் பாராளுமன்ற பொதுத் தேர்தல் ராஜபக்சக்களுக்கு மீண்டும் நாட்டில் நன்மதிப்பளிப்பதற்காகவே என்பது உண்மையான உண்மை. அடிக்கடி நிகழ்த்தப்படும் தேர்தல்களினால் நாட்டின் பொருளாதாரம் எங்கு செல்லும், தேர்தல்களை முன்னிட்டு பல செயற்திட்டங்களும், மற்றும் அரச உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான வளங்களும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படும் அல்லது தேர்லுக்காக பயன்படுத்தப்படும் என்பதை யாவரும் அறிந்ததே. அதனால் சாதாரன ஒரு மனிதனின் வாழ்வு பலவருடங்களை பின்நோக்கி நகர்கின்றதை அனுபவித்து நிற்பவர்களே இலங்கை மக்கள். இப்படியான அவசியமில்லாத தேர்தல்; நடைபெறுவதையோ அல்லது குறித்த காலத்திற்கு முன் பாராளுமன்றம் கலைக்கப்படுவதையோ மக்கள் முற்றுமுழுதாக நிராகரிக்க வேண்டும் அதற்காக குரல் எழுப்பவேண்டும்.

இந்த தேவையில்லாத தேர்தலினால் முழப்பொய்யர்கள் தாமே மேடையேறுவதினால் அரசியல் நெளிவுகளை மக்கள் கண்டுபிடிக்க உதவுகின்றார்கள்.

ஆங்கில, சிங்கள ஊடகங்களின் நம்பகத் தன்மையை சரிவர உறுதிப்படுத்த முடியாதுவிட்டாலும் கருணா தொடர்பாக வெளியாகியிக்கும் விடயம் கவணிக்கத்தக்கது. அழுகின்ற பிள்ளைக்கு சூப்பியைக் கொடுக்கின்றது போலத்தான் கருணாவிற்கும் பதவிவழங்கப்பட்டது என்பதை கருணா தேசிப்பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டதன் பின்னரே உணர்ந்துள்ளார். மேலும் கருணாவை நீக்கியதற்கு ஆயிரம் பின்னனிகள் இருக்கலாம், போர்க் குற்றத்தில் சிக்கியுள்ள ராசபக்சக்கள் தாமே தப்ப வழியில்லாமல் இருக்கும் போது தப்புவதற்கு உரிய காயை கழட்டிவைக்கவும் வேண்டிய அவசியமும் உண்டு. மேலும் முதல் நடவடிக்கையாக கருணாவை விலக்கிவைப்பதன் மூலம் ஏனைய முன்னாள் ஆயுதப் போராட்டத் தலைவர்களை அதே க(ச)ட்டத்துக்குள் விழுத்துவதன் மூலம் தற்போதைய தமிழ் அரசியல் தலைவர்களாகிய அவர்களையும் ஓரம்கட்டலாம் என்பது நீண்ட கால திட்டம்.

மேலும் தெளிவாக கருணாவின் விடயத்தைப்பார்த்தால்… புண்பட்டுள்ள கருணா மீண்டும் வன்முறைக்கு திரும்பும் சர்ந்தப்பத்தில் கருணாவிற்கு ஆதரவளிக்கவும் ஒரு கூட்டம் நிச்சயம் கிடைக்கும், அழிக்கவும் அவரின் முன்னாள் நண்பர்களும் தயங்க மாட்டார்கள்.

இந்த தேர்தலில் மகிந்த மற்றும் ஹெலஉறுமய போன்ற பௌத்த பேரின தீவிரவாத கட்சிகள் வெற்றிபெற வேண்டும் என்று பெரும்பான்மையான புலம் பெயர் தமிழர் அதாவது ஐ.நாவிடம் நீதிகோரி முன்நிற்போர் விரும்புகின்றனர், ஐ.நா இலங்கையை தண்டிக்காது ஆட்சியாளர்களையே தண்டிக்க வேண்டும் என்பது அவர்களின் அவா, அதற்காக எத்தனை தமிழர்கள் மீண்டும் செத்தாலும் அவர்களுக்கு அதுபரவாயில்லை போலும் ?

மேலும் மூன்று தசாப்த யுத்த காலத்தில் பணிபுரித்த பத்திரிகையாகிய உதயன் கயவர்களின் பிள்ளை என்பது தான் மிக மிக வேதனைக்கும் வெட்கத்துக்கும் உரியவிடயம்.

தமிழே தனக்கு சரிவர தெரியாது போல காட்டிக்கொள்ளும் சரவணபவனும் வரலாற்றின் உத்தம புத்திரனாக தன்னை காண்பிக்கும் வித்தியும் தமிழினத்திற்கு சாபக்கேடானவர்கள்

இறந்த ஊடகவியலாளரை வைத்துக்கொண்டு பிழைப்பு நடாத்திய வித்தியாதரன் தற்போது தான் சுயேட்சையாக போட்டியிடும் கட்சியாகிய “ஜனநாயகப் போராளிகள் கட்சி“ தொடர்பாக பெரும் கட்டுக்கதை அவிட்டுள்ளார்.

ஊடகவியலாளர் அமரர் நிமலராஜனின் படுகொலையில் வித்தியாதரனுக்கு தொடர்பிருப்பதாக அப்போது கிசுகிசுத்ததை தற்போது உண்மை தான் என்பது போலவே அவரின் கூற்று பொருந்துகின்றது.

நிமலராஜனின் கொலையில் இன்பம் கண்ட வித்தியாதரன்  பத்திரிகைவாயிலாக நிதிதிரட்டி அதன்மூலம் அப்போது போட்டிபத்திரிகையாக வெளிவந்துகொண்டிருந்த வலம்புரியின் சந்தையை உடைக்க பயன்படுத்திக் கொண்டார், தொடர்ந்தும் நிறுவன ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதை வைத்து தாமே பிழைப்பு நடத்தியவர்களளே வித்தியாதரனும் சரவணபனுமாவார்கள், இதற்கிடையே சுவிசில் நடந்த நிகழ்வொன்றில் பத்திரிகையாளர்களை பாதுகாக்கவும் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லவும் தாம் உதவியதாகவும், பெரும் பொய்யை கூறியுள்ளார் சரவணபவன், உதயனின் ஊடகவியலாளரான அமரர் ரவிவர்மனை தமக்குத் தெரியாது என்றும் கூறியது இவர்களே.

ஏற்கனவே வெளிவந்துள்ள விமர்சனங்கள் வித்தியாதரனின் பித்தலாட்டத்தை வெளிப்படுத்தியுள்ளன, நாளாந்தம் அப்பாவிகளை சாகக் கொடுத்து தமது கட்சி நாட்டுக்காக பல தியாகங்களை செய்துள்ளது என கூறுவது அவருக்கு இயல்பான ஒன்றே.

இறந்தவர்கள் திரும்பிவரமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் அரசியல் ஆலோசகர் அன்னர்பாலசிங்கம் தனக்கு பலவிடயங்களை அவிழ்த்துவிடார் என்கின்றார் இவர், மகிந்தவிற்கும் புலிக்கும் தான் தான் தூதுவர் என்று அம்மனமாக்கிவிட்டார் தன்னையே! இறந்தவர்கள் திரும்பிவரமாட்டார்கள் என்பது தான் அவரின் உறுதியான நம்பிக்கை எனினும் இறந்தவர்களின் ஆவிகளுடன் உரையாடலாம் என்ற விடயம் அவருக்கு தெரியாது போலும், இலங்கையிலும் இந்தியாவிலும் இறந்த நபர்களின் ஆவிகளுடன் போசக்கூடிய மாந்திரவாதிகள் இருக்கின்றார்கள் என்பதை அறிந்திருக்கட்டும் இந்தக் கயவர்கள்.

இதற்கிடையில் புத்தக விற்பனையில் கொடிகட்டி பறக்கவிரும்புகின்றார், வெளிநாட்டில் தஞ்சம் புகுந்திருக்கும் முன்னாள் உதயன் பணியாளர்களை கொண்டு இங்கும் அங்கும் சவாரி செய்கின்றார்.

சுமார் 3 தாசாப்த யுத்த காலத்தில் பெற்றுக்கொண்ட ஊடகத்துறை அனுபவங்கள் எவ்வளவு மகத்தானவை, இவ் மகத்தான அனுபத்தை சந்தேகத்திற்கிடமான அல்லது வாத பிரதிவாதத்திற்குரியதாக முன்வைக்காது அல்லது ஆவணப்படுத்தாது இருக்க வேண்டிய கடமை அவர்களுக்கு நிச்சயம் உண்டு தம் முன்னால் உள்ள கடமையை மறந்து அற்ப ஆசைக்காக அவர்கள் செயற்படும் விதம் பலரையும் எரிச்சலடைய வைத்துள்ளது.

எமது நாட்டில் தேவையானது ஒன்றோ ஒன்று அது “புரிந்துணர்வே” கட்டடத்தை கட்டுவதும் வீதியை போடுவதும், தொழில்வாய்ப்பை அதிகரிப்பதும் அபிவிருத்தியில்ல “நல்ல மனிதபிமானத்தை கட்டியெழுப்புதலே அபிவிருத்தி!“ அன்று தொடங்கி இன்று வரை மகப்பேற்று நிலையங்களில் பிரசவத்திற்கக வந்திருக்கும் கர்ப்பிணிகளை திட்டுவதை நிறுத்துவதிலிருந்து தொடங்கட்டும் இலங்கையின் ஜனநாயகம்.

29
May
15

நல்லாட்சி,பத்தோடு பதினொன்று…

அன்ரூ சான், மயூரன் சுகுகுமார் மற்றும் சகாக்களின் மரணதண்டணை சம்பவம் எந்தளவிற்கு உலகத்தின் கவணத்தை ஈர்த்ததோ அதே வலுவில் வித்தியாவின் சம்பவமும் முக்கிய கவணத்தை பொற்றுவிட்டது.

தமிழர்களினால் நடாத்தப்பட்ட மக்கள் போராட்டம் ஒன்றிற்கு தென்பகுதியிலிருந்தும் ஆதரவுக் குரல் கிடைத்துள்ளமையானது மிகவும் வரவேற்கத்தக்கவிடயமே.

வித்தியாவின் சம்பவம் அடிப்படையில் அரசியல் நோக்கமற்றது, முக்கியமாக லங்சம் பெறும் ஸ்ரீ லங்கா காவல்துறையினரை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டம் தூங்கிப் போயுள்ள நீதித்துறையை உலுப்பிவிட்டதாகவே அமைந்தது. இதில் பெண்கள்,சிறுவர் உரிமைகள் மற்றும் அவர்களுக்கான பாதுகாப்பையும், மற்றும் இலங்கையில் அதிகரித்துவரும் போதை பாவனைகளுக்கு எதிரானதாகவும் என பல சமூக பார்வையைக் கொண்டதாக அமைந்திருந்ததே இப் போராட்டத்தின் உண்மைத்தன்மையாகும்.

மேலும் இப்போராட்டத்தை தொடர்ந்து ஜனாதிபதி திடீர் பயணத்தை யாழிற்கு மேற்கொண்டமையானது மேலும் பல நல்லெண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளது.
பல நல்ல விளைவுகளை இப்போராட்டம் ஏற்படுத்தினாலும், இதுவும் பத்தோடு பதினெற்றாகுமா?

விடுதலைப் புலிகள் அழித்தொழிக்கப்பட்டதன் பின்னர் ஏற்படுத்தும் பாதகமான விளைவுகளே இவைகள் என்பது தற்போது வெளிப்படையாக கருதப்படுகின்றது. மேலும் சிறுபான்மையினரின் பாதுகாப்பை மலினப்படுத்துமுகமாக பொதுபலசேனக்கள் போன்ற பொளத்த தீவிரவாத அமைப்புக்கள் தொடர்ந்தும் கருத்துக்களை முன்வைப்பது மீண்டும் ஆயுதப் போராட்ட உணர்வை தூண்டுவதாக அமைகின்றது.

வித்தியாவின் சம்பவம் அப்படியான ஒரு சூழலுக்குத்தான் நகர்த்தப்பட்டுக் கொண்டிருந்தது எனினும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் ஆளுமையும் தற்போதைய ஆட்சியாளர்களின் விவேகமும் அதை தடுத்து நிறுத்தியதை யாவரும் அறிந்ததே.

கிருசாந்தி பாடுகொலை சம்பவத்திற்கு முற்பட்ட சம்பவங்களும் இதே ஸ்ரீ லங்காவின் அரசியல் மற்றும் பௌத்த தீவிரவாதத்தால் தான் நிகழ்த்தப்பட்டன, ஆனால் அன்று நீதி கேட்டதற்கு கிடைத்த தீர்ப்பு மரணம், இன்று அதற்கான வாய்ப்பு மிகக் குறைவு, ஏனெனில் இன்றைய அல்லது இனிவரப்போகும் அரசுகள் சர்வதேசத்தின் முன் சுய கைதிகளாகிவிட்டார்கள், இதற்கு மகிந்த தலைமையிலான ஆட்சியல் நிகழ்த்தப்பட்ட போர்க் குற்றங்களும், மற்றும் அரச துஸ்பிரயோகங்களும் காரணங்களாயின. நாட்டை யாருக்கும் எப்போதும் காட்டிக் கொடுக்க மாட்டோம் என வீராப்பு பேசிப்பேசி பௌத்த தீவிரவாதிகளை திருப்தியாக்குவதாக நினைத்து தங்களையே அவர்கள் கட்டிப்போட்டது தான் விந்தை.

This slideshow requires JavaScript.

அடுத்து வரும் வாரங்களில் போராட்டம் …

தமிழர் பகுதிகளில் இராணுவத்தினால் அல்லது அவர்களின் ஆதரவாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட பாலியல் துன்புறுத்தல்கள், வாகனவிபத்து சம்பவங்கள் மற்றும் செயல்களுக்கு எதிராகவே அடிப்படையில் ஆர்பாட்டங்கள் பேரணிகள் என போராட்டங்கள் விரிவடைந்தன. இது கடந்த கால அனுபவம்.

இவ் அனுபவத்தை நினைவுபடுத்தும் வகையிலேயே வித்தியாவின் போராட்டம் பரிணமிக்க ஆரம்பித்தது, ஆயினும் முற்றுமுழுதான அரசியல் நோக்கற்றதான புரட்சியாக அமைந்ததினால் அது சமூகம் சார்ந்ததாக பரிணமித்துவிட்டது.

இதே போராட்டம் மகிந்த நாட்களில் நிகழ்ந்திருந்தால் பல உயிரிழப்புக்களை சந்தித்திருந்திருக்க வாய்ப்புண்டு. இதை நினைவுபடுத்துவதற்காக 2007 மற்றும் அதற்கு முற்பட்ட சில படங்களை பதிவிடுகின்றேன். மாணவர்கள் தங்கள் முகங்களை மறைத்துக் கொண்டு போராட்டங்களில் ஈடுபடுபதை தாங்கள் அவதானிக்கும் போது அன்றைய கொடூரத்தை உணரமுடியம்.

2015 இல் இளவாலையில் நடத்தப்பட்ட போராட்டம் ஒன்றில் கஜேந்திரன் கூறிய கருத்தை இங்கு நாமும் கவணிக்கத்தக்கது. “எமது போராட்டத்தில் எப்போதும் நியாயமுண்டு, ஆனால் நாம் நியாயத்திற்காக நியாயமான வழியில் காலமறிந்து போராட வேண்டும்“ என்பதே என்னுடைய கருத்து. கடந்த காலத்தில் மாணவர் போராட்டங்களின் பின்னர் நிகழ்ந்த துயரசம்பவங்களை மறந்துவிட்டு அரசியல் செய்வது கஜேந்திரன்களை-யே எதிர்காலத்தில் பாதிக்கும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இங்கு கஜேந்திரனின் கூற்றை நினைவுப்பூட்டுவதன் மூலம் ஏனையவர்கள் குற்றமற்றவர்கள் என்று கூறவில்லை.

விடுதலைப் புலிகளின் நீதி

2001 நல்லிணக்க சூழலில் புலிகள் யாழ் வருகை தந்திருந்த போது அவர்களின் குடிசார் பணிகளையும் முன்னெடுத்திருந்தார்கள், இந் நிலையில் யாழ் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவுகளின் வீதங்கள் திடீரென வீழ்சியடைய ஆரம்பித்தது, இது தொடர்பாக நீதமன்ற பதிவாளரிடம் வினவிய போது பொற்பதிக்கு போனால் உண்மைபுரியும் என்றார்.

புலிகளின் அப்போதைய யாழ் அரசியல் அலுவலமாகிய பொற்பதிக்கு சென்ற வேளை பெருமளவான மக்கள் தமது பிரச்சனைகள் தொடர்பாக பொறுப்பானவர்களை சந்திப்பதற்கு காத்திருந்தார்கள். வாரம் தேறும் சுமார் 300 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் தங்களுக்கு கிடைப்பதாகவும், உடனடியாக தீர்க்க முடியாத பிரச்சனைகளை கிளிநொச்சி தமிழீழ நீதிமற்றத்தில் முற்படுத்துவதாகவும் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது, இதனை மக்களும் உறுதிப்படுத்தினர், புலிகளின் நீதித்துறையை நாடிய யாவரிடமும் வெளிப்படையாக கிடைத்த பதில் “சரியோ பிழையோ கெதியா விசயம் முடிஞ்சுது“ என்பதே. கசிப்பிலிருந்து, ஏஜென்சி பிரச்சனைகளை தீர்த்துவைத்தார்கள்.

இதே காலப்பகுதியில் ஸ்ரீ லங்கா காவல் துறையிடம் சிக்கிக் கொண்ட வழக்குள் காலம் தாழ்த்தப்பட்டதுடன் அப்பாவிகளையும் பாதித்திருந்தது. மேலும் முறைப்பாட்டிற்கு சென்ற மக்களை மலினமாக நோக்கியதுடன் பிலேன்டீ முதல் பெரும் தொகை வரை லஞ்சம் கேட்டுவந்தனர், விசேடமாக பெண்கள் பெண் காவல் அதிகாரிகளை சந்திக்க முடிந்தாலும் சுதந்திரமின்மையும், ஏளனப்பார்வையுமே மிகைந்திருந்தது.

குற்றச் செயல்களை கவணத்திற்கு எடுத்துச் சென்ற போதும் அவர்கள் அதை பொருட்படுத்தவில்லை. மாதாந்த செயற்பாட்டுக்காக மட்டும் சில குற்றங்களை நீதிமன்றத்திற்கு முற்படுத்தினார்களே தவிர உண்மையான சமூகப் பாதுகாப்பை அவர்கள் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. அதாவது சமூகச் சீரளிவு செயற்பாட்டாளர்களுக்கு ஸ்ரீலங்கா காவல் துறை சிறந்த சரணாலயங்களாக திகழ்ந்தன.

எனவே தான் ஸ்ரீ லங்கா காவல்துறையின் 25 வருட கால அசமந்தபோக்கை உடைத்தெறிந்தாக வித்தியாவின் போராட்டம் அமைந்தது. இது இலங்கையின் ஏனைய பகுதிகளுக்கும் பொருந்தியதினால் தான் இப்போராட்டம் தேசிய கவணத்தை பெற்றுள்ளது. இதன் மூலம் தமிழர்களின் உணர்வுகளை பௌத்த தீவிரவாதிகளும் உணர்ந்துவிடுவார்கள் என்ற அச்சம் பொதுபலசேன போன்ற கீழ்த்தரமான பேரினவாதிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

போராட்டத்தில் நுழைந்த அரசியல்

ஊரவர்களாலேயே நிகழ்த்தப்பட்ட இக் கொடுமை பேரதிர்ச்சியை கொடுத்தற்குமேலாக ஸ்ரீ லங்கா காவல் துறையின் அசட்டுத்தனமும், குறிப்பிட்ட மாணவி கொல்லப்பட்ட கொடூரக் காட்சியும் மக்களை கொதிப்படையவைத்ததில் நியாயம் உண்டு. இங்கு இயேசு கூறியது போன்று உங்களில் குற்றமில்லாதவன் இவள் மீது முதலாவது கல்லெறியட்டும் என்ற வார்தையை நினைவு கூருவதற்கு யாருக்கும் நேரமிருக்கவில்லை.

மக்கள் உச்சக்கட்ட கொந்தளிப்பில் இருப்பதை சாதகமாக பயன்படுத்த அரசியல் அடிவருடிகள் தமது காய்நகர்த்தல்களை ஆரம்பித்தார்கள், இதன் பின்னனியிலேயே பொதுச் சொத்துக்களுக்கும், நீதிமன்றத்திற்கும் கல்வீச்சு இடம் பெற்றது.

சகவாழ்வை விரும்பாத பௌத்த தீவிரவாதிகளுக்கும், மக்களின் அவலமே தமது உயிர்ப்பு என இருக்கும் உள்நாட்டு + புலம் பெயர்வாழ் அரசியல் ஈடுபாட்டாளர்களுக்கும் மற்றும் மகிந்தவின் கூட்டாளிகளுக்கும் ஏதுவான சூழலுக்கு இடமளிக்கக் கூடாது. கடந்த காலத்தில் எமது உரிமைக் குரலை நசுக்க பல புலனாய்வாளர்களும் புல்லுருவிகளும் எங்கள் மக்தியில் இருந்ததை நாம் மறந்துவிடலாகாது.

வித்தியாவிற்கான போராட்டம் ஜனநாயகத்திற்காக குரல் கொடுக்கக் கூடிய சூழலை நாட்டில் உருவாகியுள்ளது என்பதை ஜனநாயகவாதிகள் வரவேற்றுள்ளனர். பௌத்த தீவிரவாத பேரின மடைமைக்குள் சிக்குண்டுள்ளவர்களுக்கு தமிழர்களின் உரிமைகள் தொடர்பான புரிந்துணவுகளை ஏற்படுத்தக் கூடிய வழிகளை இது திறந்துவிட்டுள்ளது.

இயேசு கூறியவார்த்தை

“குற்றமில்லாதவன் முதலாவது கல்லெறியட்டும்“
குறிப்பிட்ட சம்பவத்தின் போது சுவிஸை வதிவிடமாக் கொண்ட குற்றவாளி தப்பமுற்பட்டதுவே நிலைமையை மேலும் மோசமாக்கிவிட்டது. குற்றச் செயளில் ஈடுபட்ட ஒருவர் தப்புவதற்கு கையூட்டு கொடுக்கக் கூடிய சூழலை உருவாக்கியது யார்? பதில்: தமிழன்!

கடந்த யுத்த சூழலில் இலங்கையின் நடந்த பல்வேறு கைது நடவடிக்கைளின் போது புலனாய்வு பிரிவினர் உள்ளிட்ட பல குழுக்களுக்கு பொரும் தொகை கையூட்டை பெற்று சிலரை விடுவித்தனர், வழியற்றவர்கள் புலிகள் என குற்றம் சாட்டப்பட்டு பயங்கரவாத தடைச் சட்டதின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர். அதற்காக தப்பியவர்கள் எல்லாரும் புலிகள் அல்ல அவர்களும் அப்பாவி பொது மக்களே, ஆனால் அவர்கள் கொடுத்த கையூட்டு மற்றவர்களை குற்றவாளிகளாக்கியது பல குடும்பங்களில் கண்ணீரே வாழ்க்கையாகியது. மேலும் சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கும் கையூட்டு வழங்கவேண்டிய நிலை இதனால் தான் இன்று விபத்துக்கள் மலிந்து போயுள்ளது. ஆகவே தமிழ் சமூகம் கையூட்டு தலைமுறையை கைவிடவேண்டும். நீதியை நிலைநாட்ட நாமே முன்வரவேண்டும்.

மேலும் போதப்பொருள் பாவனைகள் இலங்கையில் அதிகரித்துவருகின்றது உண்மை தான் எம் சமூகத்திற்குள் அது நுழைந்ததற்கு ஆக்கிரமிப்பாளர்கள் மட்டுமே காரணமாயிருக்க முடியாது. உதாரணத்திற்கு 2006 ஆண்டு யாழ் குடாநாட்டிற்கான போக்குவரத்துக்கள் தடைப்பட்ட நிலையில் 2 மணிநேர ஊரடங்கு தளர்வு மட்டுமே அமுலில் இருந்து, விடுமுறைக்கு என யாழ் வந்திருந்த வெளிநாட்டுவாழ் தமிழர்கள் வெளிநாடு திரும்ப முடியாத துயரத்திற்குள்ளாகியதை மறக்கமாட்டார்கள். இந்த வேளையில் உணவிற்கு பலத்த தட்டுப்பாடு சிகரட்டை யாரும் நினைத்துப் பார்க்கவில்லை ஏனெனில் அது கிடைக்கவில்லை, இந் நிலையில் திடீரென யாழ் நகரத்தக்குள் சிகரட் கிடைப்பதாக தகவல் அறிந்து அது பற்றி ஆராய்ந்த போது விசேட விமானத்தில் யாழ் வருகைதந்திருந்த புலம்பெயர்வாழ் தமிழர்கள் மற்றும் கொழும்பு வாழ் யாழ்பாணிகள் தமது பயண செலவை ஈடுசெய்வதற்காக சிகரட் கட்டுக்களை தமது பயணப் பொதியாக எடுத்துவந்துள்ளார்கள் என்பதை அறிய முடிந்தது. இதுபோன்ற குறுக்குவழியில் இலாபமீட்ட முயலும் தமிழர்களும் இன்றைய போதை பரம்பலுக்கு காரணம்.

மேற்கு நாடுகளில் மக்களுக்குரிய சேவைகள் மக்களை சென்றடைய உரிய வழிகளை கையாள்கின்றார்கள், உரிமைகளை பாதுகாக்கின்றார்கள், துறைரீதியான தொழில்களை செய்கின்றார்கள், தனிநபர் பாதுகாப்புக்களை உறுதி செய்கின்றார்கள், மேலும் மக்கள் மீதான (வேலை,தனிமை போன்ற) அழுத்தங்களை குறைப்பதற்கான பொழுதுபோக்கு அம்சங்களுக்கு உரிய அனுமதிகளை வழங்குகின்றார்கள். இவ் உண்மைகளை அறியாது “வெளிநாட்டில் எல்லாம் சகஜம்“ என்று சமூகத்திற்கு தீங்கானவற்றை எடுத்துவருகின்றார்கள்.

எனவே கண்மூடித்தனமான ஆடம்பர வாழ்கைக்குள் இளைஞர்களை குருடர்களாக்கும் இவர்களை மக்கள் இனம் கண்டு ஒதுக்க வேண்டும், எதிர்க்க வேண்டும்.

பொறுப்பற்ற ஊடகங்கள்(இணையங்கள்)

ஒவ்வொரு ஊடகத்திற்குமென சிறப்பம்சங்கள் கொள்கைகள் இருக்கும் ஆனால் தமிழ் ஊடகங்கள் எதை பின்பற்றுகின்றன என்பது கேள்விக் குறியே? குறிப்பாக இணையத் தளங்கள்.

மக்கள் மத்தியில் பிரசித்தி பெற்றதாக கூறப்படும் இணையம் ஒன்று பொதுவாகவே ஊடகவிதிமுறைகளை மீறி செயற்படுகின்றது மேலும் ஒரு இணையம் யாழின் நிலவரங்களை மிகவும் கேவலமான முறையில் வெளியிடுகின்றது, மற்றும் தமிழ் இணையங்களை தமது தளங்களை பிரபல்யப்படுத்தவதற்காக பாலியல் இச்சைகளை தூண்டும்விதமான நடிகைகளின் படங்களையும் வேறு பல தகவல்களையும் பிரசுரம் செய்கின்றன, உண்மைக்காக போராடுவதாக நினைத்து மக்களை முட்டாள்களாக்குவதுடன், பாதிக்கப்பட்டவர்களை மேலும் அச்சுறுத்துகின்றனர், பொறுப்புடன் நடக்கவில்லை.

சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் சுவிஸில் நிகழ்ந்த ஒரு சம்பவத்திற்கு “இலங்கைத் தமிழன்“ என இனத்தை சுட்டிக்காட்டி செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தனர் இதனால் வேலைத்தளங்கள் மற்றும் பிற இடங்களிலும் தமிழர்கள் கேலிக்குள்ளாக்கப்பட்டார்கள் இதையடுத்து இனத்தை அடையாளப்படுத்தும் செய்திகளை வெளிடுவதில் ஒழுக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இருந்தும் வித்தியாவின் கொலையில் “சுவிஸ் தமிழன்“ என்ற செய்தி பிரபல பத்திரிகை செய்திவெளிட்டிருந்தது. இச் செய்தியை பிரசுரிப்பதற்காக அவர்கள் பயன்டுத்தியிருந்த படம் ஒன்றிற்கு இணையத்தின் பெயரை குறிப்பிட்டிருந்ததற்கு குறிப்பிட்ட தமிழ் இணையத்தளம் அதையும் பெரும் புகழ் என நினைத்து தமது இணையத்தில் பிரசுரித்திருந்தார்கள். இது தவிர வேறு ஒரு இணையம் குற்றம் சாட்டப்பட்டவர் ஒருவரின் ஆவணங்கள் சிலவற்றை வெளியிட்டு இச் செய்தியை பிரதி செய்யும் சில இணையத்தளங்களை விமர்சித்திருந்தார். அதாவது எப்போது அவலம் நிகழும் எப்போது தாங்கள் விளம்பங்களை செய்யலாம் என்பதே இவர்களின் கனவு.

தொழில்முறை ரீதியான செயற்பாடற்ற ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் வகைப்படுத்தி அவர்களை சீரான செயற்பாட்டுக்குள் உட்படுத்த வேண்டும்.

தண்டணை

தண்டனை என்பது மீண்டும் தவறு செய்யாது இருப்பதை தடுப்பதற்கு, அரசாங்கத்தின் சமூக திட்டங்களையும், சட்டங்களையும் நடைமுறைப்படுத்த வேண்டிய அதிகாரிகளே அவற்றை கடைப்பிடிக்காது இருக்கும் போது தண்டணைகள் எதற்கு உதவும் மனிதர்களை கொல்லுவதற்கா? மனிதபிமானம் சகல துறைகளிலும் சகல வழிகளிலும் கட்டியெழுப்பப்பட வேண்டும். சமூக சிந்தனை மிக்க சிறந்த மேடை நாடகங்களை உருவாக்கி இயக்குவதற்கு இளைஞர்களுக்கு ஊக்கமளிப்பதன் மூலம் சமூகப்பொறுப்பை உருவாக்க முடியும். சமூகம் சர்ந்த சிந்தனை சகலமட்டத்திலும் குறைந்து காணப்படுவதே இன்றைய குற்றங்களுக்கும் வளஒழிப்புக்கும் காரணங்களாய் உள்ளன.

குற்றவாளிகளுக்கு குறைந்தபட்ச தண்டணையாக மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பது பலரது வாதம், அன்ரூ சான், மயூரன் சுகுகுமாரன் மற்றும் சகாக்களின் உறவினர்களை கேட்டால் நிச்சயம் மறுப்பார்கள். மனிதன் திருந்துவதற்கு சர்ந்தப்பம் உண்டு மனிதனை திருத்தவதற்கு நல்ல சமூகத்தை எம்மத்தியில் உருவாக்க வேண்டும்.

நீதியை நிலைநாட்ட நாமும் கையூட்டுக்களை விட்டுவிட்டு சட்டத்தை கடைப்பிடிக்க முன்வரவேண்டும். அதற்கான அழுத்தத்தையும் தொடர்ந்து அரசுக்கு கொடுக்க வேண்டும்.

22
Feb
15

புத்தன் ஒரு சாத்தான்

நாங்கள் உங்களிடம் கேட்பது என்ன? உங்கள் வீட்டுக்குள் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் எங்களுடைய பந்தை தாருங்கள் என்பதே. பல மணி நேரங்கள் மாதங்களாகியும் ஆண்டுகளாகியும் ஏன் தலைமுறையாகியும் நீங்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை ஆகவே எமக்கான பந்து இனி வெளிநாட்டிலிருந்து கிடைக்கும் என எங்கள் பந்தை ஒளித்துவைத்த “அங்கிள்ஸ்”மாரையே நம்பியிருக்கின்றோம்.

இலங்கை இனப்பிரச்சனையின் சுருக்கம் இது தான்.

புதிய ஜனாதிபதி தேர்வையடுத்து வழமைபோன்றே இம்முறையும் எதிர்பார்ப்பு தமிழ் மக்களுக்கு இருந்துள்ளது, சிங்களமக்களின் மீதும் நீட்டப்பட்டிருந்த இரும்புக்கரம் அகற்றப்பட்டிருந்தமையினால் முன்னரிலும் பார்க்க இம்முறை சற்று ஆறுதலாக இருந்ததாக தமிழ் மக்களும் உணர்கின்றனர், ஆகிலும் தமிழ் மக்களின் மீது நீட்டப்பட்டிருக்கும் இரும்புக்கரம் அப்படியேயே இன்னுமுள்ளது.

ஆண்டாண்டு காலமாக தமிழ் மக்கள் மீது இறுக்கப்பட்ட இரும்புக் கரத்தை அகற்றுவதற்கு பல செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது அவசியமானதொன்று என்பதை தமிழ் மக்களுக்கு புரியாததுமில்லை.

எனினும் அண்மையில் வடமாகான சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு எதிர்பார்த்தது போலவே எதிர்ப்புகள் அரச தரப்பிலும் மற்றும் கடும்போக்கு சிங்கள அரசியல் கட்சிகளினாலும், சிங்கள் அரசியலாளர்களினாலும் முன்வைக்கப்பட்டிருந்தன, இதிலும் பொதுபலசேன அமைப்பின் செயலாளரின் கருத்து தமிழ் மக்களை மீண்டும் கடுப்பேற்ற வைக்கின்றது, மகிந்தவின் ஆட்சியில் முறையாக அடக்கப்பட்டிருந்த தமிழர்கள் மீண்டும் வாய் திறக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்பதே அவரின் கூற்று, மகிந்தவின் ஆட்சியில் தமிழர்கள் மட்டுமல்ல சிங்களவர்களும் தான் வாய் மூடிநின்றனர் பொதுபலசேனவைத் தவிர.

நாம் கேட்டது என்ன? எங்களுடைய பந்து உங்களுடைய வீட்டுக்குள் ஒளித்துவைக்கப்பட்டுள்ளது அதை தாருங்கள் என்பதே!

ஒரேகாணிக்குள் இருந்த இருவீடுகள் தான் தமிழ் சிங்களவர்கள் இந்த காணிக்குள் அந்நிய ஊரானாகிய அந்நியநாட்டின் படையெடுப்புக்கு எதிராக தமிழ் மன்னர்களின் பெரும்பங்களிப்பு வழங்கப்பட்டிருந்ததுடன் சிங்கள இராச்சியங்களையும் தமிழ் மன்னர்கள் பாதுகாத்தனர் என்பதுதான் வரலாறு. எனினும் எமது காணியிலிருந்து அந்நிய ஊரான் விலகிச் சென்ற போது எங்களுக்கான(தமிழ்,சிங்கள) உரிமைப்பந்துகளை ஒளித்துவைத்துவிட்டான், முதலில் அந்நியனை வழியனுப்பிவிட்டு அதன் பிறகு அதை தேடியெடுப்போம் என்றதுதான் அன்றைய நிலைப்பாடு. அதைத்தானே நாம் தேடினோம் கேட்டோம். இனால் ஏற்பட்ட மன விரிசல் தானே காணியை பிரித்து எழுதுவோமென எண்ணம் ஏற்பட்டது, சரி அதையும் சமரசமாக எழுதிவிடலாம் என்றே எண்ணிணோம், முடியவில்லையே அதனால் தானே வேலியை நாட்டினோம்; (வட்டுக்கோட்டை தீர்மானம்), பக்கத்து வீட்டுக்காரனாகிய இந்தியன் வந்தான் என்ன வேண்டும், என்ன வேண்டும் என்றே எம்மிருவரையும் கொள்ளையடித்து சென்றான்னவன், போட்ட வேலியின் கட்டைகளாகிய புலிகளை அந்நிய ஊராரின் உதவியுடன் தறித்துவிழுத்திவிட்டு இப்போது வீட்டுக்குள் நின்று சூறையாடுகின்றீர்கள்.

பேரினவாத்தின் சூட்டில் குளிர்காயும் இவர்களைப் போன்றவர்கள் இத்தீயை அணைக்க முன்வரமாட்டார்கள்.

அடிப்படையாகவே சகலமனிதருக்கும் உரிமையுண்டு அது வழங்கப்பட வேண்டும் என்பதே நியதி, இந்த நியதி தெரியாதவர்கள் மறைப்போதகர்களாக இருப்பது பெரும்தவறு, கௌதமன் தான் கண்ட கொடும் காட்சிகளிலிருந்து மக்களுக்கு விடுதலையில்லையா? என்ற ஏக்கத்தினால் தான் அவர் ஒரு துறவியாகி ஞானம்பெற்றார். பேரினவாதப்போக்குள்ள இலங்கையின் பௌத்த துறவிகள் தங்கள் கருத்துக்கள், மற்றும் போராட்டங்கள் மூலமாக கௌதம புத்தனை சாத்தானா உலகிற்கு உருவகப்படுத்துகின்றனர், தமிழ் பௌத்த துறவிகளே முதலில் இலங்கையில் பௌத்த போதனைகளை மேற்கொண்டனர் என்ற உண்மையை தமிழ் மக்கள் மிகவும் வேதனையுடன் எற்பதுடன் தமிழருக்கு எதிரான சாத்தானாக புத்தரை கருதுகின்றனர். இதற்கு இலங்கையின் பௌத்த துறவிகளே காரணம்.

இலங்கையின் பூர்வீக குடிகள் நாகர்களாகிய தமிழர்கள் என்பதை மறைக்க முற்படுகின்றார்கள், இலங்கையின் ஆரம்ப சரித்திரத்தை படிக்கும் போது தமிழ்பெயர்களை கட்டாயம் உச்சாரித்தே ஆகவேண்டும் என்பது வரலாற்றை மாற்றுபவர்கள் அறிந்துள்ளனர்.

அன்றுதொடக்கம் இன்றுவரை எந்தத் தமிழ் மன்னனும் அந்நிய சக்கதிகளுக்கு நாட்டைவிற்கவுமில்லை, சூறையாடவுமில்லை அடிபணியவுமில்லை என்பதே வரலாற்று உண்மை. தமிழர்களின் இறுதி மன்னனாகிய பிரபாகரனும் அப்படியே!

தமிழர்கள் உரிமைகளை கேட்கும் போதெல்லாம் நாடுபிளவுபடப்போவதாக அபாயக் குரலெழுப்பும் பௌத்த மகாசங்கத்தினரின் கூச்சலினாலேயே நாடு பிளவுபட்டுபோயுள்ளதுடன், சீரழிந்துமுள்ளது. அவர்களிடம் ஆசிபெறும் கலாச்சாரம் இலங்கையில் ஒழியவேண்டும்.

அந்நிய சக்திகளுடன் சேர்ந்து புலிகள் நாட்டை கூறுபோடாமையும், தமது கட்டுப்பாட்டு பகுதிகளை சூறையாடாமலும் இருந்தமையே புலிகளின் தோல்விக்கு மற்றுமொருகாரணமாகும். அதாவது பொருளாதாரவல்லுணர்களின் ஆலோசனைப்படி சீனாவிற்கோ, யப்பானுக்கோ அல்லது வேறேதாவது நாடுகளுக்கோ இரகசியமாகவேனும் வளங்களை சுரண்டுவதற்கு அனுமதித்திருந்திருந்தால் புலிகளின் பலம் இன்னும் அதிகரித்திருக்கும் ஆனால் புலிகள் அதுபோன்ற ஆலோசனைகளை முற்றாக மறுத்ததன் மூலம் நாட்டை பாதுகாத்தனர், புலிகள் அழிந்தனர்.

மகிந்த அரசு கிழக்கு பகுதியின் சம்பூரை மீட்டவுடன் இந்தியாவிற்கு அதனை தாரைவார்த்து தமிழர்களை ஏதிலிகளாக்கி தனது இரும்புக்கரத்தை பலப்படுத்த ஆரம்பித்ததை நினைவுபடுத்திக் கொண்டால் இதனர்த்தம் புரியும்.

தொடர்ந்தும் தமிழர்கள் பலமிக்கவர்களாய் உள்ளார்கள் என்பதை தமிழர்களும் புரிந்துகொள்ளாது கூலிக்கு மாரடிப்பவர்களாய் அங்குமிங்கும் கொடும்பாவி எரிப்பதும், உருவப்படங்களை கிழிப்பதும் போராட்டம் என மக்களை ஏமாற்றுவதும், சாதகமான கருத்துக்களை கூறும் நயவஞசகர்களை ஆதரிப்பதும் என்பன வேதனைமிக்கவிடயம்.

மணிக்கூட்டுக்கு பல சக்கரங்கள் இருப்பது போன்றே தமிழ் மக்கள் மத்தியிலும் பல கருத்துடையவர்கள் சிந்தனையாளர்கள் இருக்கின்றார்கள் என்பதை தமிழர்கள் ஏற்கக்கூடிய மனநிலை நலிவடைந்துள்ளது, மணிக்கூட்டுச் சக்கரங்கள் எல்லாம் ஒரே திசையில் சுற்றுவதல்ல எதிர்திசையிலும் சுற்றினால் தான் அது முறையாக இயங்கும், அதுபோலவே சகல கருத்துக்களையும் உள்வாங்கிசெயற்படுவதன் ஊடாக தேசிய அரசிலில் ஈடுப்பட்டுள்ள கட்சியை சிறியமுள்ளாகவும், மாகாணசபைகளின் அதிகாரங்களை பெரியமுள்ளாகவும், ஆரேக்கியமான செயற்பாடுகளை நொடி முள்ளாகவும் இயக்குவதன் மூலம் தமிழனின் நேரத்தை காட்டமுடியும். ஆராக்கியமான ஊடகங்கள்,கருத்துக்கள் மற்றும், முன்னெடுப்புக்கள் மணிக்கூட்டை முறுக்கிவிடுபவையாகவும் அமைய வேண்டும்.

தமிழர் இன்று உலகளாவிய ரீதியில் பரந்துவாழும் ஒரு சக்கி மிக்க இனம் எந்த இனத்துக்கும் இல்லாத மொழிஆற்றல் தமிழினத்திற்கு உண்டு, உலகிலுள்ள சகல மொழியையும் பேசக் கூடிய ஒரேயொரு சக்திமிக்க இனமாக இருப்பது தமிழினம் மட்டுமே, திறைமைமிக்க மொழி வல்லமையினால் பல்வேறு மக்களின் விருப்புவெறுப்புக்களையும் குணாதிசயங்களையும், அரசியல் நகர்வுகளையும் அறிந்துள்ளார்கள், என்பதுடன் பலதுறை நிபுணர்களாகவும், பொருளாதார வல்லுணர்களாகவும் உள்ளனர் என்பதை முதலில் தமிழர்களாகிய நாங்கள் உணர்ந்து தமிழ் இனம் என்று சொல்வதில் தலைநிமிந்து நிற்கவேண்டும்.

முப்பது ஆண்டு கால யுத்தத்தின் போதும் இதுவரை ஒரு பட்டினிச் சாவை ஏனும் தமிழ் மகன் ஒருவனும் சந்திக்கவில்லை என்பதன் மறுகருத்து ஒவ்வொரு தமிழனும் ஒவ்வோரு தமிழனையும் ஆற்றிதேற்றியமையே, அதற்கு முதலாவதாக ஸ்ரீலங்கா அரசு தமிழர்களுக்கு நன்றி கூறவேண்டும்.
சிறந்த விருந்தோம்பல் கலாச்சாரத்தை உடைய இனமாக இருக்கின்றமையே தமிழினத்தின் அழிவிற்கும், நிமிர்விற்கும் காரணம். பௌத்தம் இந்தியாவிலிருந்து இலங்கையின் வடக்கு பகுதியாகிய மாதகலில் வந்திறங்கிய காலத்தில் சிறந்த விருந்தோம்பல் செய்தோம் இன்று அழிந்து நிற்கின்றோம், எம்மினத்திற்கே நாமே விருந்தோம்பினோம் இன்னும் தளைத்து நிற்கின்றோம்.

சக்திமிக்க மொழியாற்றல் மிக்க இனம், சக்திமிக்க உதவிக்கரம் நீட்டும் இனம் என்ற இரு பலங்களையும் பிரயோகிக்க தொரிந்திருக்க வேண்டும்.

எமக்குள் இருந்த சாதியக் குறைபாட்டை அடிப்படையாகக் கொண்டு போராட்டத்தின் முக்கிய தளபதியை நரிகள் காவிச்செல்ல இடம் கொடுத்தது எமது அண்மைய வரலாறு. இந்திய (தமிழக) மீனவர்களுக்கு எதிராக நடவடிக்கையெடுக்க வேண்டுமென வடக்கிலிருந்து குரல் கொடுக்கின்றனர், இந்திய அரசியல் வாதிகளும் தமது சுயலாபத்திற்காக இப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் அக்கறையின்றி இருப்பதாகவே இந்திய மீனவர்கள் கருதுகின்றனர், ஈழத் தமிழர்களுக்காக குரல்கொடுக்கும் தமிழக தமிழர்களை திசை திருப்புவதற்கு நாளை இந்திய இலங்கை கடல் எல்லை பிரச்சனை கூட எமக்கு ஆப்பாக அமைந்துவிட்டால் ஆதரவுக்குரலும் அடங்கிடும். இதுபோன்ற பிரச்சனைகளுக்கு நாமே தீர்வுகளை முன்வைப்பதன் மூலம் இன்னுமொரு பிளவை தவிர்க்க முடியும்.

தமிழர்களின் போராட்டம் நியாயமிக்கது என சர்வதேசம் அன்றுதொட்டு ஏற்றிருந்த காரணத்தால் தான் இது தொடர்பான அழுத்தங்களை அவ்வப்போது ஸ்ரீலங்காவிற்கும் புலிகளுக்கும் வழங்கியிருந்தது, தற்போது அப்போரட்டம் ஆயுதமின்றி சர்வதேச அழுத்தத்தின் வழியாக அடையக்கூடிய நிலையை எடுத்துள்ளது. புலிகளினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று தமிழ் தேசிய கூட்மைப்பை ஏற்படுத்த பிரிந்து சென்ற கட்சிகள் மீண்டும் ஒன்று சேர்ந்தமையும், இக் கட்சிகள் ஸ்ரீலங்கா பாராளுமன்றத்திலும் அங்கம்வகித்திருந்தமையும் இக் கட்சியின் ஊடாக சர்வதேச ராஜதந்திர உறவுகள் இருந்ததை இருந்துவருகின்றமை என்பன புலிகள் ஆபத்துமிக்கவர்கள் அல்ல என்பதை சர்வதேசம் உணர்ந்திருந்தது என நோக்கலாம், மேலும் தமிழ் மக்களும் புலிகளின் காட்டுமிராண்டித்தனமான சம்பவங்களால் பாதிக்கப்பட்டபோதும் தமிழ் மக்கள் அத் துன்பியல் நிகழ்வுகளை இலகுவில் மறந்து புலிகளை ஏற்கும் மனப்பான்மையுடன் தொடர்ந்தும் இருப்பது புரியாத புதிராகவே அரசிற்கும் சர்வதேசத்திற்கும் இருந்துவருகின்றது.

எனவே எம்மை வைத்து மற்றவர்கள் நடத்தும் தமது பிழைப்புக்கு முடிவுகட்டிவிட்டு, கூக்குரலிடுவதையும், கொடும்பாவிகள் எரிப்பதையும் கூலிக்கு மாரடிக்கும் அண்மைய கலாச்சாரத்தையும் தூக்கியெறிந்துவிட்டு, அதாவது மீண்டும் ஒரு ராஜீவ் காந்தி வழக்கில் சிக்கிவிடாது, இருக்கும் சர்ந்தப்பத்தில் எமக்கு என்ன அரசியல் லாபம் கிடைக்கும் என சிந்திக்கும் ஆற்றல்மிக்க ஜதார்த்த அரசியல் தெளிவு வேண்டும்.

தெளிந்த செயற்பாட்டின் மூலமே “அங்கில்ஸ்”மார் (சர்வதேசத்தின்) மூலமாக எமது உரிமைப்பந்தை மீட்டுக்கொள்ள முடியும்.
  • பகிர் – Share

    Rightdiary பகிர் – Share

www.rightdiary.com LAUNCHING PROGRAM

January 2019
M T W T F S S
« Feb    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Flickr My Photos

Advertisements

%d bloggers like this: