21
May
19

ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு விடுதலைப்புலிகள் பயிற்சியளிப்பு இரகசியம் அம்பலமாகியது

கற்பனைச் செய்திகளின் தொகுப்பு:-

கொழும்புச் செய்தி:-

உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதல்

விடுதலைப் புலிகள் மற்றும் I.Sன்  கூட்டு பயங்கரவாதம் அப்பாவி பொதுமக்கள் பலர் பலி, பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு

கொழும்பு மற்றும் மட்டக்களப்பு பகுதிளில் நேற்று இடம்பெற்ற பெரும் மனித அழிவை ஏற்படுத்திய தாக்குதல்களை ஐ.எஸ் பயங்கரவாதிகளின் ஆதரவுடன் தாக்குதல்களை விடுதலைப்புலிகள் நடாத்தியதாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாக்குதல் நடாத்தி தப்பிச் சென்ற பயங்கரவாதிகள் மீது இலங்கை வான்படையின் தாக்குதலில் முக்கிய நபர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு அமைச்சகம் மேலும் அறிவித்துள்ளது நாட்டில் இல்லாத புதியவகை இரசாயணங்கள் இக் தற்கொலை தாக்குதல்களுக்கு பயன்படுத்தியிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் இவைகள் கடல் மார்க்கம் வழியாக கொண்டுவரப்பட்டிருக்க வாய்ப்புள்ளது என நம்பமுடிகின்றது, இவ் ஊடுருவல் நடைபெறுவதை தடுக்கும் வகையில் கடல் கண்காணிப்புக்கள் வலுப்படுத்தப்பட்டுள்ளது…

மேலும் தாக்குதலாளிகள் பல நாட்கள் கொழும்பில் மறைந்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுளளது, கொட்டேகேன பகுதியில் மேற்கொண்ட சோதனைநடவடிக்கையின் போது பலதடயப்பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கப்றிசோனே எனப்படும் மல்ரிவிட்டமின் கலந்த பாணங்களை அருந்தி உள்ளனர் என தெளிவாகியுள்ளது சுவிஸில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இவ்வகை பாணங்கள் பசியை தணிக்க சக்தி கொண்டவை என அறியப்படுகின்றது. குறிப்பிட்ட பாணங்களின் பைக்கற்றுகள் தடவியல் நிபுணர்களின் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதால் மேலும் பல உண்மைகள் வெளிவரலாம் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

 

அரச தமிழ் ஊடகமான தினகரனின் இரு தலைப்புச் செய்திகள்:-

இஸ்லாமிய பெண்கள் ப்றா(Bra) அணிய தடை

  1. இஸ்லாமியரை அவமதித்ததற்கு எதிராக சர்வதேசளவில் பாரிய போராட்டம், முஸ்லீம் நாடுகள் கடும் கண்டணம்.

இஸ்லாமிய பெண்கள் ப்றா அணிய தடை என யாழ் உள்ளுர் பத்திரிகை ஒன்று தலைப்புச் செய்தியை அச்சுப்பிழையுடன் பிரசுரித்ததைத் தொடர்ந்து கடும் கண்டணங்கள் தெரிவிக்கப்பட்டுவருகின்றன.

மிகசெற்ப உள்ளுர் வாசகர் வட்டத்தை கொண்டுள்ள பத்திரிகை யுத்த போர் மேகங்கள் சூழ்ந்துள்ள பின்னனியில் தற்செயலாக தவறு ஏற்பட்டுவிட்டது என்று தொலைபேசியில் தெரிவித்துள்ளனர், ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் புர்தா(Burka) என்பதற்கு பதிலாக ப்றா(Bra) என்றே அச்சிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

  1. காத்தான்குடியில் பேரீச்சை அறுவடை, வரும்வருடங்களில் ஏற்றுமதிக்கு தயார்!

காத்தான்குடி பிரதேசத்தில் பேரீச்சை செய்கை வெற்றியளித்துள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் தெரிவித்தள்ளார், பிறநாட்டின் பயிர் ஒன்றை எவ்வளவேனும் பெருத்தமற்ற காலநிலை நிலவும் சூழலில் பயிரிட்டு இன்று அதில் தன்னிறைவடைந்து ஏற்றுமதி செய்யுமளவிற்கு வெற்றிகண்டுள்ளமை பாராட்டத்தக்கது, இத் திட்டத்தை தாமாகவே முன்னெடுத் தௌஜீத் அமைப்புக்களுக்கு நன்றியை ஜனாதிபதி தெரிவிதுள்ளார். ஜனாதிபதி பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கிழக்கஸ்தான் பல்கலைக்கழக அடிக்கல் நாட்டும்விழாவில் பங்கேற்றபோது இனிமைமிக்க பேரீச்சம் பழங்களும் பரிமாறப்பட்டன, அவற்றை சுவைத்ததன் பின்னரே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். பேரீச்சம்பழம் கொட்டையிலிருந்து பனங்கிழங்கை தயாரிக்க முடியுமா என ஆராய்ந்து வருவதாக தௌஜீத் அமைப்புக்கள் தெரிவித்துள்ளனர். இந்நிகழ்ச்சிக்கு தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு அழைப்புவிடுக்காமலே ஒருசில கூட்டமைப்பு உறுப்பினர்கள் பின்வரிசையில் அமர்ந்திருந்ததையும் அவதானிக்க முடிந்தது.

சிங்கள ஊடகங்களின் செய்திகளின் தொகுப்பு:-

கப்றிசோனெ கைப்பற்றப்பட்டள்ளது தமிழ் வர்த்தகர் கைது

புலிகள் பயன்படுத்திய பசிதீர்க்கும் பாணம் கப்றிசோனே வெள்ளவத்தை பகுதியில் தமிழ் வர்த்தக நிலையம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து வர்த்தக நிலைய உரிமையாளர் கைது செய்யப்பட்டு கல்கிசை நீதவான் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாக்கிஸ்தான் ஆப்பானிஸ்தான் அகதிகளை வடக்கின் கரையோரப் பகுதிளில் குடியேற்றுவது நாட்டுக்கு பாதுகாப்பை ஏற்பத்தம் என பொளத்த தேரர்கள் அறிவுரை, ஏற்கனவே பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்டுள்ள இப்பகுதிகளில் எமது படையினரை தனிமையில் நிறுத்தவது நல்லதல்ல அவர்களின் மனநிலைகள் உச்சாகப்படுத்தப்பட வேண்டும், அவ்வாறு கரையோரப்பகுதிகளில் குடியேற்றுவதினால் தமிழ்நாட்டிலிருந்து மேற்கொள்ளும் ஊடுருவல்களை தவிர்க்க முடியும் எனவும் இந்தியா மறுமுனைக்கு இன்னொரு பாக்கிஸ்தான் ஆப்கானிஸ்தானை உருவாக்குகினால் எமது போரியல் செலவீனங்களை குறைத்தக் கொள்ளமுடியும் எனவும் அரச கஜானா வெறுமையாவதை தடுக்க முடியும் எனவும் கடும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அகதித்தஞ்சம் நிகாரிக்கப்பட்ட தமிழர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் உயிர்த்த தினத் தாக்குதலையடுத்து தற்காலிகமாக அகதி தஞ்சம் நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையிலேயே இவ்வாறு திருப்பி அனுப்பியதாக அந்தந்த நாடுகள் தெரிவித்துள்ளன, இவ்வாறு நாட்டுக்கு திரும்பிய பயங்கரவாதிகளை கட்டுநாயக்க பொலிஸார் விளக்கமறியலில் வைத்துள்ளனர்.

தனிப்பட்ட காரணங்களுக்காக தெற்கு பகுதிக்கு வரும் தமிழர்கள் மூன்று நாட்கள் மட்டுமே தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும் என பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது, நாட்டின் அவசரகால நிலை தொடர்பாக பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான விவாதத்தின் போது தெரிவக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நடைமுறையிலுள்ள தங்குமிட அனுமதி மேலும் இறுக்கமாக்கப்பட வேண்டும் எனவும் வழியுறுத்தப்பட்டுள்ளது.

 

வன்னிச் செய்தி:-

முப்படையினரின் தாக்குதலால் பல பொதுமக்கள் பலி! மீட்புப் பணி தாமதம், மருந்துகளும் தட்டுப்பாடு!

வன்னி உட்பட கிழக்கின் தமிழீழ பகுதியெங்கும் பொதுமக்களின் குடியிருப்பு பகுதிகளில் முப்படையினரின் அகோர தாக்குதல் பல பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்… பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் அரச உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பயணம் செய்த பேரூந்து வான் தாக்குதலுக்குள்ளானதில் பல பேர் இறந்துள்ளனர்…

முன்னரங்க பகுதிகளில் பலத்த துப்பாக்கி பிரயோகங்கள் பரஸ்பரம் இடம்பெற்றுள்ளன சேதவிபரங்கள் அறியமுடியவில்லை…

யாழ் செய்தி:-

சுற்றிவளைப்பில் சந்தேகத்தின் பேரில் பலர்கைது,

ஊரடங்கு மீண்டும் அமல், புதிய சேதனைச் சாவடிகள் முளைப்பு!

கொழுப்பு தாக்குதலின் எதிரொளியாக குடாநாட்டில் பரவலான சுற்றிவளைப்பு தேடுதல்கள் இடம்பெற்ற போது பலர்கைது செய்யப்பட்டுள்ளனர்… நேற்றைய தினத்தில் மட்டும் அதிகமானோர் காணமால் போயுள்ளதாக மனித உரிமை அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது… புதிய புதிய சோதனைச்சாவடிகள் அங்காகங்கே முளைத்தெழும்பியிருக்கிறதை அவதானிக்க முடிந்தது… சர்வமதபிராத்தனைக்கும் ஏற்பாடு…. கடலில் மீன்பிடிக்க தடை… இலங்கை கடல் எல்லையை கடக்கமுற்பட்ட இந்திய மீனவர்கள் மீது தாக்குதல்கள் ஒருசில உடலங்கள் கரையொதிகின…

இஸ்லாமியரை புண்படுத்திய பத்திரிகையாளர் கைது, பத்திரிகை நிறுவனத்திற்கு சீல்வைப்பு

இஸ்லாமிய பெண்கள் ப்றா அணிய தடை என தவறுதலாக செய்தியை வெளியிட்ட பத்திரிகை நிறுவனத்தை நேற்று காலை திடீரென சுற்றிவளைத்த இராணுகத்தினரும்  பொலிஸாரும் குறிப்பிட்ட பத்திரிகை நிறுவனத்தை நீதிமன்ற உத்தரவிற்கு அமைய மூடி சீல்வைத்தள்ளதுடன் நிறுவனத்திற்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது மேலும் குறித்த செய்தியை வெளியிட்ட பத்திரிகை ஆசிரியர் கைதுசெய்யப்பட்டுள்ளார். காசி என அறியப்படும் ஏ.எச்.எம்.காசிம் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பத்திரிகைத்துறையில் சுமார் ஐம்பது வருட அனுபவமுள்ளவர் என்றும் கேட்டு எழுதுவதில் தலைசிறந்தவர் என பல விருதுகளைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தனது பத்திரிகை அனுபவத்திலும், வாழ்க்கை அனுபவத்திலும் இதற்கு முன்ர் புர்கா என்ற சொற்பதத்தை தான் அறிந்திருக்கவில்லை என்றும் தனது மனைவியும் இது தொடர்பாக அறியவில்லை என்றும் சாரியின் தொங்கல்கலை முக்காட்டிட்டு கொண்டுள்ள முஸ்லிம் சமூகத்தையே தாங்கள் இலங்கையில் அறிந்திருந்தாகவும் தெரிவித்தார். இவ்வாறா உடைகளை எமது பரம்பரையினர் எமக்கு கற்றுத்தரவில்லை என்றும் மேலும் தெரிவித்த அவர் சம்பவ தினத்தன்று தொலைபோசிகள் முற்றாக செயலிந்திருந்தினால் தொலை நகல்களை பெறும்வாய்ப்பு இருக்கவில்லை, கடுமையான குண்டுத் தாக்குதல்களினால் அதிர்ந்த வண்ணமிருந்த வடக்கு பகுதியில் சம்பவதினம் வானொலிகளின் அலைவரிசைகளும் தெளிவாக இல்லாத காரணத்தால் குறிக்கப்பட்ட உடையை ப்றா என தான் ஊகித்ததாகவும், ஏற்கனவே தமிழ் பெண்களை அம்மணமாக்கி சோதனையிடுவதை கேள்விப்பட்டிருந்த காரணத்தினால் இது சாத்தியமான ஒன்று எனவும் நினைத்தே இவ்வாறு எழுதியதாகவும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 சர்வதேச செய்திகள்:-

பாதுகாப்புகள் நவீன மயப்படுத்தப்பட வேண்டும். இரு தரப்பும் மனிதபிமானத்தை காப்பது அவசியம்.

தற்போதுள்ள அவசரமான சூழ்நிலையில் பேச்சுக்களை பின்பேட வேண்டாம் என சர்வதேசம் வலியுறுத்தல் வந்தள்ள நிலையில் பேச்சுவார்த்தைகளை பிற்போடாமல் தொடர்ந்து முன்னெடுக்கும்படியாக நோர்வே நாட்டு நடுநிலையாளர்களுக்கு மனிதஉரிமைகள் அமைப்புகள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அவசர நிலையில் கவணம் செலுத்த வேண்டும் என உலக நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன. இந்தியா ராடர் கருவிகளையும் பயிற்சிகளையும் இலவசமாக வழங்க உறுதி செய்துள்ளது, பாக்கிஸ்தான் பல்குழல் பீரங்கிகளை அனுப்பிவைத்துள்ளது. சீனா விமான ஓடுதளங்களை பார்வையிட்டுள்ள நிலையில் விமான தளங்களை நவீனமயப்படுத் வாய்ப்புள்ளதாக நம்பப்படுகின்றது.

இதே வேளை அமெரிக்க பசுபிக்பிராந்திய உயர்ஸ்தானிகர் இலங்கைக்கான பிரதிநிதியின் மேல்சட்டையில்(கோட்) நாயின் ரோமங்கள் இருப்பதை ஊடகங்கள் கண்டறிந்துள்ளது தொடர்பாக கேட்கப்பட்ட போது 10 நாய்கள் அன்பளிப்பு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பிரித்தானியா தனது பங்கிற்கு பிஸ்கட் தருவதாகவும் வாக்களித்துள்ளது, ஆனால் வரும் பிஸ்கட்டு நாய்க்கா மக்களுக்கா என்று கூறமறுத்துவிட்டது.

தமிழ் அரசியல் தலைவர்கள் கண்டணம்:-

பாசிச புலிகள் தொடர்ச்சியாக சகோதர படுகொலைகளை செய்துவந்த வரிசையில் எமது இஸ்லாமிய சகோதரங்களில் வெறுப்பு ஏற்படுத்துவதற்காக இச் செயலை செய்திருக்கிறார்கள், எமது நாட்டுக்கு சம்பந்தமே இல்லாத சர்வதேச பயங்கரவாதிகளுடன் இவர்கள் பேரம் பேசி எமது நாட்டை அழிவின் விழிப்பிற்கு கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார்கள். இதன் மூலம் அன்பை போதிக்கும் மதத்தின் நற்பண்புகளுக்கு இழுக்கை ஏற்படுத்துகிறார்கள். புலிகளின் பாசிம் ஒழிக்க வேண்டும். அப்பாவி இஸ்லாமியர்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என நாம் கேட்டுக் கொள்கிறோம் என ஜனநாயக வழிக்கு திரும்பிய தமிழ் ஆயுதக் குழுக்கள் தொரிவித்துள்ளன.

முஸ்லிம் தலைவர்கள்:-

இஸ்லாத்துக்கு முரணாக செயற்படும் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ள ஐ.எஸ் அமைப்புடன் எந்தவிதமான தொடர்பாடல்களையும் எமது சமூகம் வைத்திருக்கவும் இல்லை அதை விருப்பவுமில்லை, இப்படிப்பட்ட அமைப்புக்களை விடுதலைப்புலிகள் எமது சமூகத்திற்கு அறிமுகப்படுத்தவது எமக்கு வேதனையாக உள்ளது. இதற்காக எமது சமூகத்தின் அப்பாவி இளைஞர் யுவதிகளை தமது இயக்கத்திற்கு வலுக்கட்டாயமாக பிடித்தவைத்திருக்கிறார்கள், ஏற்கனவே பல பெற்றோர்களிடமிருந்து கிடைக்கப்பபெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் போர்நிறுத்த கண்காணிப்பு குழுவிற்கும் மனித உரிமைகள் ஆணையத்திற்கும் முறைப்பாடு செய்துள்ளதுடன் ஒருபடி மேலாக அரபு ஐக்கிய இராட்சியம் மற்றும் முஸ்லிம் நாடுகளின் தூதுவராலயங்களுக்கும் அறிவித்தள்ளோம். இவ்வாறு அறித்துள்ளதன் மூலம் ஐ.எஸ் போன்ற பயங்கரவாத அமைப்புக்களுடன் எமது சமூகம் இணைந்தவிடாமல் தடுக்கும் முயற்சிகளை முழு முனைப்புடன் எடுத்துவருகின்றோம்.

முஸ்லிம்களின் பள்ளிவாசல்களை தாக்கியமை வடக்கிலிருந்து முஸ்லிம்கள் விரட்டியடிக்ப்பட்டமை போன்ற வேதனைகளிலிருந்து இன்னும் இருந்துவரும் நிலையில் மீண்டும் ஒரு வேதனையை புலிகள் முஸ்லீம் சமூகம் மீது திணித்துள்ளது. அமைதியை விரும்புவதான் எமது மார்க்கம், கல்வியறிவில்லாத எமது இறைத்தூதரின் வழிகளை பின்பற்றி வருபவர்கள் நாம் சுவனத்தில் இருக்கும் மனைவிமார்களின் இன்பத்தை தீர்க்கும் நினைவுகளுடன் வாழ்ந்து வருபவர்கள், எமது கனவை குழப்பாதீர்கள்.

த.தே.கூ:-

நாங்கள் அவசரப்பட்டு எந்த ஒருமுடிவுக்கும் வரமுடியாது, அவர்களுடன் பேசும் போது இவைகளைப் பற்றி நாம் தெரிவிப்போம். எப்படியென்றாலும் பாதிக்கப்படுவது அப்பாவி பொதுமக்கள் என்பது உண்மை தான். என்றாலும் அவர்களுடன் பேசிய பின்தான் எதையும் கூறமுடியும்.

பேரினவாத கட்சிகள்:-

புலிப்பயங்கரவாதம் நாட்டைவிட்டு ஒழிக்க வேண்டும், இது பௌத்த சிங்கள நாடு இங்கு அமைதிகாக்கப்பட வேண்டும் எமது மதம் அமைதியானது அமைதியைக்காக்க எத்தனை உயிர்களை வேண்டுமானாலும் நாங்கள் கொடுக்க தயார், கிறிஸ்தவ பொது அமைப்புக்கள் மனிதபிமாக பணி என்ற போர்வையில் எமது நாட்டுக்குள் ஊடுருவி வெள்ளைப்புலி சிங்களப்புலிகளையும் உருவாக்கியுள்ளது. நாட்டுக்காக தியாகம் செய்யவுள்ளதை திட்டமிட்டு தடுத்து நாட்டை பிரிப்பதில் லாபம் காண்கிறார்கள், அதற்கு எமது அரசியல் தலைவர்களும் நாட்டை காட்டிக் கொடுக்கிறார்கள்.

சிங்களப்புலி வெள்ளைப்புலி கட்சிகள்:-

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு கிறிஸ்தவ தேவாலயங்களை குறிவைப்பது சர்வசாதாரணம்  அவர்களின் முகமது நபி மரணவேளையில் கிறிஸ்தவர்கள் மீதும் யூதர்கள் மீதும் சாபமிட்டு சொத்ததுதானவரலாறு, இத்தாக்குதலை ஸ்ரீதலதாமாளிகை தாக்குதலுடன் ஒப்பிட முடியாது, யுத்த காலத்தில் பல வணக்க ஸ்தலங்கள் தாக்கப்பட்டது உண்மைதான், 1995 நாவலி புனித.போதுரு ஆலயத்தில் அரசு நாடத்திய தாக்குதலில் 120 தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள், நாகர் கோவில் பாடசாலை தாக்குதலில் 80க்கும் மேற்பட்ட சிறுவர்களை கொன்றுவிட்டு பயங்கரவாதிகளை கொன்றோம் என்றார்கள். ஏன் இத்தாக்குதலுக்கு பதிலடிதாக்குதலாக பல பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படகின்றது உறுதிப்படுத்தப்பட்டுள்து, பொதுமக்கள் பயணம் செய்த பேரூந்து மீது தாக்குள் நடைபெற்றுள்ளது. தவறான கருத்தக்களை மக்களை நம்பவைத்து நாட்டு மக்களை பிரிப்பதை நிறுத்த வேண்டும். பல அப்பாவி மக்கள் காணாமலாக்கப்படுகின்றார்கள் கொல்லப்படுகின்றார்கள், துரத்தப்படுகின்றர்கள் சந்தேகிக்கப்படுகின்றர்கள். இப்படியே நிலைமை நீண்டு செல்வதை அனுமதிக்க முடியாது. ஆதாரமற்ற குற்றச் சாட்டுக்களின் அடிப்படையில் மக்கள் பாதிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும், பிழைகளை வளர்க்காமல் பழை வரலாறுகளை பின்னர் சரிபார்க்கலாம். இதுவே இன்றைய தேவை.

Advertisements

0 Responses to “ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு விடுதலைப்புலிகள் பயிற்சியளிப்பு இரகசியம் அம்பலமாகியது”  1. Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


  • பகிர் – Share

    Rightdiary பகிர் – Share

www.rightdiary.com LAUNCHING PROGRAM

May 2019
M T W T F S S
« Apr    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Flickr My Photos

Advertisements

%d bloggers like this: