12
Apr
10

நம்பிக்கையில்லாத தலைமைகள்

பலத்த எதிர்ப்பின் மத்தியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கு கிழக்கில் 13 ஆசனங்களை பெற்றுள்ளமை பாரிய வெற்றியாக கருதப்படுகின்றது.
வடக்கு கிழக்கில் எனைய தமிழ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருப்பினும் அவர்கள் பேரினவாத கட்சியின் கீழ் போட்டியிட்ட காரணத்தால் தமிழ் கட்சிகள் என்ற வகையில் பார்க்க முடியாது.
9ஆசனங்களை இழந்து நிற்கும் த.தே.கூட்டமைப்பு மேலும் பல போராட்டங்களை முறியடித்து இழந்த ஆசனங்களை மீட்க வேண்டிய கட்டாயத்திலுள்ளது.
721,359 வாக்கு சீட்டுகளில் 23.33 வீதமான 168,277 வாக்கு சீட்டுகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டமை வாக்காளர்களின் தவறாகும். அதாவது 5,53 082 வாக்கு சீட்டுகள் வீணடிக்கப்பட்டுள்ளன.
எப்படிப்பட்ட கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் பொறுப்பான முறையில் மக்கள் நடந்து கொண்டால் தான் சரியான தலைமையை தமிழினம் கொண்டிருக்க முடியும். மக்களின் பொறுப்பற்ற இச் செயற்பாடு தொடர் அழிவுகளை ஏற்படுத்தும்.
இத் தேர்தலின் மூலம் தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டிய முக்கிய விடயம் ஒன்றுண்டு. “தமிழரின் அரசியல் பலம் சிதைக்கப்பட்டுள்ளது” என்பதே அது.
தமிழினத்தின் தேசியபற்று மீதான அதீத நம்பிக்கையை பலவீனமான  காயாக நகர்த்துவதில் சிங்களம் தொடர் வெற்றியை கண்டுவருகின்றது.
அந்த ஒரு செயற்பாடே அதிக வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டதும் த.தே.கூட்டமைப்பில் பிளவுகள் ஏற்பட்தும்.
இக் குழப்ப நிலையை உருவாக்கிய அரசு வெற்றிகரமாக சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான தமிழ் வாக்காளர்களை தந்திரமாக விலகியிருக்க வைத்தது.(நல்லவேளை புலிகள் இருக்கவில்லை அல்லது போனால் புலிகள் மக்களின் ஜனநாயக உரிமையை மறுக்கின்றனர் என்று கூறியிருப்பர்)
தமிழர்களின் அரசியல் சக்தியை நசுக்குவதிலும் வெற்றிகண்டு வரும் சிங்களத்திற்கு பதிலடி கொடுப்பதற்கு தவறுவதுடன் விட்டுக்கொடுப்புடன் நடக்கவும் முடியாத துர்பாக்கிய நிலையில் உள்ளது மிகவும் வேதனை.
நாடு முழுவதும் மகிந்த குடும்பத்திற்கு அடிமைப்பட்டுள்ள நிலையில் தமிழினம் கையேந்து நிலைக்கு தள்ளப்படுகின்றது. அதற்கு ஏற்றாற் போல் ஈ.சரவணபவனின் வருகையும் அமைந்துள்ளது.
த.தே.கூட்டமைப்பில் புதிய முகங்களாக அறியப்படுபவர்களில் ஈ.சரவணபவனின் வெற்றியில் கல்வியறிவுள்ள யாழ் சமூகம் திருப்பியடையாதுள்ளது.
தேர்தல் தினத்தன்று தனது உதயன் பத்திரிகையூடாக திட்டமிட்ட பரப்புரையை செய்த அதன் நிர்வாக இயக்குனர் சரவணபவன் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச் சாட்டுக்கள் நியாயமற்றவை என விளக்கமும் அளித்துள்ளார். என்ன தான் விளக்கம் அளித்தாலும் பாதிக்கப்பட்டவர்களால் எப்போதுமே ஏற்றக முடியாதது. அத்துடன் பல இன்னல்கள் மத்தியில் உதயன் பத்திரிகை வெளிவந்ததும் பத்திரிகையாளர்கள் ஊழியர்களை இழந்ததும் மறக்கவோ மறைக்கவோ முடியாத உண்மை. ஆனால் இவ் இன்னல்கள் எல்லாவற்றையும் தாங்கி பத்திரிகையையும், ஊழியர்களையும் கட்டிக் காத்த நிர்வாகிகள் தான் போற்றப்பட வேண்டியவர்கள். குறிப்பாக ஆசிரியர் கானமயில்நாதன். ஒரு வேளை அவர் இத் தேர்தலில் போட்டியிட்டிருந்தால் யாழ் மக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருந்திருக்கும்.
தனது நிர்வாகத்திற்குட்டபட்ட ஊழியர்களை கடுமையாக கட்டுப்படுத்தும் இந் நிர்வாக இயக்குனர் யாழ் மக்களுக்கு என்னத்தை செய்யப்போகிறார்? இறுதியில் த.தே.கூட்டமைப்பின் தலைமையையும் அவரே கைப்பற்றுவார் என்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
புதிய பாராளுமன்ற உறப்பினராக வருகை தந்திருக்கும் ஈ.. சரவணபவன் தனது நிர்வாக ஊழியர்கள் (பத்திரிகையாளர்கள்) பத்திரிகை அமைப்பில் சுதந்திரமாக இணைவதற்கு அனுமதிவழங்க வேண்டும். அதற்காக ஏற்கனவே செயற்பட்டுக் கொண்டிருக்கும் சங்கத்தை இல்லாதொழித்து தனது முத்திரையின் கீழ் புதிய சங்கத்தை உருவாக்குதல் என்ற குறுக்கு வழியில்லாமல் அனுமதிக்க வேண்டும்.
ஊடகவியலாளரின் உரிமைகளுக்காக எதிர்க்கப்பட வேண்டிய யாழ்ப்பாணத்து மேவின் சில்வாவை உதயன் வாசகர்கள் தமக்கான பாரளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்துள்ளமை, அவர்களின் கிணற்று வாழ்க்கை என்பதை பயமின்றி கூறிக் கொள்கின்றேன்.
ஆகவே பல சூழ்ச்சிகளின் மத்தயில் சிக்கித் தவிக்கும் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையில்லாத தலைமைகள் தற்போதுள்ளது பெரும் குறைபாடு.
தேர்தலுக்காக மாத்திரம் கையேந்தி மக்களிடம் செல்லாமல் என்றுமே மக்களுடன் நெருங்கிப் பழகி அரசியலில் ஈடுபடும் ஞானம் எப்போது தமிழ் அரசியல்வாதிகளுக்கு பிறக்கும்?
ஆகவே மக்களுக்கான உண்மையான சேவையை செய்து மக்களின் உணர்வுகளை மதியுங்கள்.
ஏற்கனவே யாவரும் அறிந்துள்ளபடி தமிழ் மக்களுக்கு தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகள் ஏராளம் உள்ளன. பழமைகள்,பாரம்பரியங்கள் மற்றும் தமிழரின் சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டியவை என்பதுடன், ஊழலுக்கு எதிராகவும், (ஆபத்து மிக்க பயணங்களின்) வெளிநாட்டு புகலிட கோரிக்கை தொடர்பாகவும் கவணம் செலுத்த வேண்டிய புதிய பிரச்சனையாக உள்ளது.
எனவே விமர்சனங்களையும் கருத்தக்களையும் உணர்வுகளையும் புரிந்து கொண்டு மக்களுக்கான நம்பிக்கையூட்டும் சேவைகளை செய்ய முன்வாருங்கள்.
திகாமடு மாவட்டம்

Valid Votes

256,946

94.31%

Rejected Votes

15,516

5.69%

Total Polled

272,462

64.74%

Regis.Electors

420,835


மட்டக்களப்பு மாவட்டம்

Valid Votes

180,618

92.45%

Rejected Votes

14,749

7.55%

Total Polled

195,367

58.56%

Regis.Electors

333,644


வன்னி மாவட்டம்

Valid Votes

106,977

91.29%

Rejected Votes

10,208

8.71%

Total Polled

117,185

43.89%

Regis.Electors

266,975


யாழ் மாவட்டம்

Valid Votes

148,503

88.25%

Rejected Votes

19,774

11.75%

Total Polled

168,277

23.33%

Regis.Electors

721,359



0 Responses to “நம்பிக்கையில்லாத தலைமைகள்”



  1. Leave a Comment

Leave a comment


  • பகிர் – Share

    Rightdiary பகிர் – Share

www.rightdiary.com LAUNCHING PROGRAM

April 2010
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

Flickr My Photos