31
Jan
10

சிங்களவர்களும் உணர்வார்கள்.

இரும்பு கரத்தை தோற்றுவித்திருக்கும் 6வது ஜனாதிபதி தேர்தலின் முடிவை காலம் செல்லச் செல்ல சிங்களவர்களும் உணர்வார்கள்.

ஸ்ரீலங்காவில் நடக்கும் தேர்தல்களை தமிழ் மக்கள் வழமை போன்று நிம்மதியான வாழ்விற்கான தெரிவாகவே பயன்படுத்தியுள்ளனர்.

இதில் வன்னி மக்களின் பெரும்பான்மையான வாக்குகள் மகிந்தவிற்கு செலுத்தப்பட்டுள்ளது, இதன் அர்த்தம் வன்னி மக்கள் முற்றுமுழுதாக புலிகளை வெறுத்ததாக அர்த்தம் கொள்ள முடியுமா?

இறுதி கால கட்டத்தில் வன்னியில் நடந்த கொடுமைகளினால் மக்கள் புலிகளை வெறுத்திருந்தனர் என்பதற்கு அளவு கோலாக அரசு கட்டாயம் இவ் வாக்குகளை பயன்படுத்தும்.

ஆனால் வன்னி மக்களின் தெரிவிற்கு

  • புலிகளில் ஏற்பட்ட வெறுப்பு
  • மகிந்த மீண்டும் வந்தால் மட்டுமே தமக்கான இழப்புகளை ஈடுசெய்யலாம்(காணாமல் போனது கைது செய்தது உட்பட சொத்து இழப்புகள்) அல்லது ஆட்சி மாறினால் தமக்கும் அதற்கும் தொடர்பில்லை என ஏமாற்றிவிடுவார்கள் என்ற நீண்டகால அனுபவம்.
  • குற்றவாளி மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் ஏனெனில் தண்டிக்கப்படவேண்டியது தனிமனிதன் அல்ல இலங்கை அரசு, ஆட்சி மாறினால் சர்வதேச விசாரனைகளும் கைவிடப்படும் என்ற சந்தேகம்
  • அரசும், ஜனாதிபதியும் மாறினாலும் வடக்கு கிழக்கில் இராணுவ ஆட்சியே நிலவுகின்றது எனவே பாதுகாப்பு வேண்டும் என்ற கருத்தோட்டமும்.

வன்னி வாக்காளர்களிடம் இருந்ததை அவதானிக்க முடிந்தது.

ஏனைய பகுதி தமிழ் மக்கள் மகிந்தவிற்கு எதிராக வாக்களித்தனர். எத்தனை வேலைத் திட்டங்களை செய்த போதும் தமிழ் மக்கள் தம்முடைய கருத்தை ஏற்கவில்லை என அமைச்சர் டக்களஸ் மனச்சோர்வடைந்த கருத்துக்களை வெளியிட்டதாக கூறப்படுகின்றது.

இதிலிருந்து என்ன புரிகின்றது. புலிகள் இல்லாத காலத்திலும் தமிழ் மக்களுகான நிம்மதியான வாழ்வை ஏற்படுத்த தவறுகின்றனர் என்பதை அமைச்சர் டக்களஸ{க்கும் கருணா, பிள்ளையானுக்கும் தமிழ் மக்கள் வெளிப்படுத்தியுள்ளதாக நோக்கலாம்.

இத் தேர்தலில் சரத் பொன்சேகா தரப்பின் கணிப்பு என்னவென்றால்.

2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலி சுமார் 2இலட்சத்து 50 ஆயிரம் வரையான வாக்குகளால் வெற்றி பெற்ற மகிந்தவை வடக்கு கிழக்கு மக்களின் வாக்குகள் மூலம் வெற்றி பெற்றிடலாம் என்பதே.

இராணுவ மயமாக்கலில் சிக்கியிருக்கும் கிராமப்புற சிங்களவர்கள் மத்தியில் ‘மகிந்த நாட்டைக் காத்த தேவன்” என்ற மனநிலையே தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அபிவிருத்தித்திட்டங்கள், உள்ளிட்ட அத்தனை வளங்களையும் குறிப்பாக அரச ஊடகங்களை தமக்கென மட்டுமே மகிந்த பயன்படுத்தியதாக சர்வதேச அமைப்புக்களும் ஊடகங்களும் தெரிவித்திருந்தன.

தவிர தேர்தல் நெருங்கி வந்த வேளையில் ‘ராம்” தொடர்பான வதந்திகளும், விடுதலைப் புலிகளின் உத்தியோக பூர்வ தலைமையகம் என பரவிய கதைகளையும் சிங்கள மக்கள் மத்தியில் புலிப்பீதியை ஏற்படுத்தி மீண்டும் புலிகள் தலைதூக்குகிறார்கள் அதற்கு சரத் நாட்டைக்(இராணுவத்தை) காட்டிக்கொடுத்து த.தே.கூட்டமைப்புடன் கைகோத்துள்ளார் என சிங்கள் மக்கள் மத்தியில் செய்த பிரசாரங்களின் பயன் தான் இத்தனை இலட்சம் வித்தியாச வாக்குகள். இவ் வேறுபட்ட வாக்கு எண்ணிக்கைக்கு தக்க தமிழ் மக்களின் சனத்தொகை இல்லை என்பதையும் கணக்கில் கொள்க.

விடுதலைப் புலிகளை தோற்கடிக்க அடியாளாக பயன்படுத்திய சரத்தை மகிந்தவின் கூட்டுக் குடும்பம் காலில் போட்டு மிதித்துவிட்டது.

சரத்தின் நிலைமை என்னவோ என கலங்கி தவித்த மகள் உடனடியாக நாடு பூராகவும் கைத் தொலைபேசிகளுக்கு குறுந்தகவல் அனுப்பியிருந்தார். இதே நிலைமை ஒவ்வொரு தமிழ் தகப்பன்மாருக்கும் சரத், மற்றும் பேரினவாத சக்திகளால் ஏற்பட்டது என்பதை அவர் அந்நேரத்தில் மாத்திரமல்ல காலம் முழுக்க உணர வேண்டும்.

இதற்கிடையே சரத்திற்கு சர்வதேசமும் மறைமுக ஆதரவை வழங்கியது, சித்ரவதை மற்றும் சட்ட விரோத கொலைகள் குறித்த ஐ நா மன்ற சிறப்பு அதிகாரி பிலிப் ஆல்ஸ்டன் சனல்-4 இல் வெளியாகிய காட்சிகள் உண்மையானது தான் என அறிவித்திருந்ததுடன், பிரித்தானியவின் வேறொரு ஆய்வும் அதனை உறுதிப்படுத்தி கூறியிருந்தது. இதன் மூலம் சர்வதேசத்தின் கவணத்தை மக்களுக்கு தெரிவித்து மகிந்தவை நிரகரிக்க செய்ய தூண்டுவதாக அமைந்தது.
எது எப்படியிருந்தும் இரும்புத் திரைக்குள் இருக்கும் சிங்கள மக்களுக்கு எதையும் கூற முடியாமல் போய்விட்டது.
தமிழனின் கடற்கரைகளிலும் காணிகளிலும் சுற்றுலா செய்து கூத்தாடி கூம்மாளம் அடிக்கும் சிங்களவருக்கு தெரியுமா தமிழன் குடியிருக்க இடமில்லாமல் அலைகிறான் என்று?
யுத்தம் முடிந்துவிட்டது நாம் வடக்கு கிழக்கிற்கு போகின்றோம் அனுபவிக்கின்றோம் இதுவல்லவா சுதந்திரம் என்று தான் அவர்கள் நினைக்கிறார்கள், அவர்கள் அனுபவிக்கும் சொத்து தமிழனின் வாழ்வு என்பதை சிங்களவர்கள் இதுவரையும் புரியவில்லை.
மேலும்
2005 ஆம் ஆண்டு தேர்தலை புறக்கணித்தது புலிகளின் மகா தவறு என 2005 ஆண்டு முதல் கூறிவருபவர்களுக்கும் சிங்களவர்களே பாடம் கற்பித்துள்ளார்கள்.எப்போதும் வாழ்வை மடடும் சிந்திக்கும் தமிழர்களிடமிருந்து சிங்களவர்கள் வேறுபட்டுள்ளார்கள் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்கள்.இதனைக் கூறுவதற்கே தேர்தல் புறக்கணிக்கப்ட வேண்டும் என புலிகள் கூறினார்கள். ஆனால் யுத்தத்திற்கும் தேர்தலிற்கும் தொடர்பில்லை, ஒரு வேளை ரணில் ஜனாதிபதியாக வந்திருந்தாலும் இதே தான் நடந்திருக்கும்.
எனவே தமிழர்களின் விடுதலை உணர்வையும், தீராத தாகத்தையும் தமது சூழ்ச்சிகளுக்கு எவர்கள் பயன்படுத்துகிறார்களோ, அதே பாணியை தமிழரும் அவர்களிடத்தில் கையாள வேண்டும்.(இராஜதந்திரம்)
ஆகவே தற்போது சர்வதேசத்தின் கவலைப் பட்டியலில் இருக்கும் ‘சரத்”தை ஈழத்தமிழ் செயற்பாட்டாளர்கள் எவ்வாறு கையாளப் போகின்றார்கள்?
சிங்கள தலைமைகளை விமர்சித்து மனநிறைவடையாமல் தொடர் இராஜதந்திர நகர்வுகளை தமிழர் தரப்பு செய்ய வேண்டியுள்ளதை முதலில் புரிய வேண்டும்.
சிங்களத்தில் நடந்து முடிந்த தேர்தலுக்கும் எமக்கும் என்ன தொடர்பு என்ற விதன்டாவாத்தை முதலில் நிறுத்தி…
இத் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்களிப்பும், சிங்கள மக்களின் பொரும்பான்மைத் தெரிவும், மகிந்தரின் மீள்வருகையும் என பல கோணத்தில் கோடிட்டு காட்டும் இத் தேர்தல் முடிவின் அடிப்படையில் தமிழர்களின் போராட்டம் அமைய வேண்டும்.
இதற்காக அங்கொன்றும் இங்கொன்றுமாக செயற்படும் புலம் பெயர் தமிழ் செயற்பாட்டாளர்கள் யார் யார் எதை செய்வதாக தமிழ் மக்களுக்கும் உலகத்திற்கும் தெளிவுபடுத்துவதுடன், அடுத்தவரின் கருத்தை ஏற்காவிட்டாலும் செவிமடுத்தாவது ஒரே ஒரு பொது அமைப்பின் கீழ் பல பிரிவுகளாக செயற்பட எத்தனிப்பது சிறந்தது.
பல சம்பவங்களை சந்தித்த பின்னரும் அதாவது அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் இழப்பை ஈடுசெய்வதற்கு தகுந்த வேறுபலர் அறியப்படாமல் இருந்தது என நீண்டு செல்லும் அனுபவங்களை கொண்டிருந்தும், இன்று சில்லறை வியாபாரிகள் போல் ஆளுக்கு ஒரு கொள்கை உருவாக்கி அமைப்பக்களை நடாத்தி மக்களை குழப்பி வரும் செய்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இலங்கை அரசியலுடன், தாயக மக்களின் கருத்துக்களுடன் ஒத்துப் போக வேண்டிய செயற்பாட்டை விடுத்து, புலம் பெயர் தமிழர் செயற்பாடுகள் நம்பிக்கையற்ற வீணாண செயற்பாட்டில் ஈடுபடுவதாக தோன்றுகின்றது.


0 Responses to “சிங்களவர்களும் உணர்வார்கள்.”



  1. Leave a Comment

Leave a comment


  • பகிர் – Share

    Rightdiary பகிர் – Share

www.rightdiary.com LAUNCHING PROGRAM

January 2010
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Flickr My Photos