Archive for February, 2010

27
Feb
10

தமிழர்களின் பலத்தைக் சிதைக்கும் தேர்தல்

தமிழ் மக்கள் என்றுமே அரசியலில் வெறுப்புற்றவர்களாக காணப்படும் இன்றைய சூழ்நிலையில் மீண்டும் ஒரு தேர்தல் தமிழர்களின் பலத்தைக் சிதைக்கும் செயலாகவே உள்ளது. ஸ்ரீலங்காவின் இவ் அரசியல் திணிப்பானது தெரிந்தோ தெரியாமலோ தமிழ் மக்களை வெறுப்பேற்றத்தை அதிகரிக்கும். அதாவது தமிழ் தலைமை மீதுள்ள நம்பிக்கையை சிதைக்கும். Continue reading ‘தமிழர்களின் பலத்தைக் சிதைக்கும் தேர்தல்’

22
Feb
10

வளம் சுரண்டும் பிச்சைக்காரரும், அரசியல்வாதிகளும் -துணைக்கு புலம்பெயர் தமிழர்களும்

ஐ.தே.கவின் யாழ் மாவட்ட அமைப்பாளர். எஸ்.சத்தியேந்திரா பண உதவி கோரும் கடிதம்

ஐ.தே.கவின் யாழ் மாவட்ட அமைப்பாளர். எஸ்.சத்தியேந்திரா பண உதவி கோரும் கடிதம்

 

 மே 18ம் திகதி 2009 பின் தமிழர்களின் தலைவிதி இது தான் என்றாகிவிட்டது.      

குடாநாட்டுக்கு நேரடி போக்குவரத்துகள் வேண்டும் குடாநாட்டு மக்களுக்கு வெளியிடத் தொடர்புகள் வேண்டும் என்ற நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்பட்டது.      

குடா நாட்டில் வாழ்பவர்கள் தமிழர்களாக இருந்தாலும் அங்கு வந்து போவதற்கு மொழியோ, இனமோ, நாடோ என்றிருப்பது அவசியம் இல்லை ஆனால் வந்து போகிறவர்கள் அந்த பகுதி மண்ணில் வாழ்வோரை வாழவிட வேண்டும்.      

‘சிறுபான்மையினர் என்று எம் நாட்டில் எவருமில்லை நாம் எல்லோரும் ஒரு நாட்டின் மக்கள்” என்ற மகிந்தவின் கூற்று பாதகமான எதிர்காலத்தை இலங்கையில் வேறுவிதமாக ஏற்படுத்துகின்றது.      

குடாநாடு உட்பட வடக்கு கிழக்கு பகுதிகளில் சிங்களவர்களின் வியாபாரம் பெருகியுள்ளமையானது வேறு விதமான எதிர்காலத்தை தோற்றுவிக்கின்றது. Continue reading ‘வளம் சுரண்டும் பிச்சைக்காரரும், அரசியல்வாதிகளும் -துணைக்கு புலம்பெயர் தமிழர்களும்’

21
Feb
10

மகிந்தவின் சிந்தனைக்கு ஆப்பு வைப்பது யார்?

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தீர்மானம் ஸ்ரீலங்காவில் தற்போது நிலவும் அராஜக அரசியலுக்கு அவசியமான ஒரு தீர்மானமாக இருந்தாலும் தமிழர்களால் ஏற்க முடியாத ஒன்றே. Continue reading ‘மகிந்தவின் சிந்தனைக்கு ஆப்பு வைப்பது யார்?’
17
Feb
10

எமக்கில்லாத இராஜதந்திர நகர்வுகள்….

புளியங்குளம் இராணுவத்தின் பிடிக்குள் வந்ததையடுத்து முருகண்டி நோக்கிய நகர்வுகள் ஆரப்பித்த வேளையில் முல்லைத்தீவும் இராணுவத்தின் பிடிக்குள் வரும் குறுகிய நிலத்தில்  புலிகள் அடைக்கப்பட்டதன் பின்னர் ஸ்ரீலங்காவில் அதிபர் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்கள் நிகழும் இது தான் அரசின் அடுத்த திட்டம் என பலருடனும் பகிர்ந்து கொண்டேன். Continue reading ‘எமக்கில்லாத இராஜதந்திர நகர்வுகள்….’




  • பகிர் – Share

    Rightdiary பகிர் – Share

www.rightdiary.com LAUNCHING PROGRAM

February 2010
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728

Flickr My Photos