13
Jun
10

இவன் மேதகு பிரபாகரன் தம்பிகள்

விழுப்புரத்தில் சுமார் ஆயிரம் பயணிகளின் உயிர் சில அடி துரத்தில் பாதுகாக்கப்பட்ட மெய்சிலிர்க்கும் சம்பவம் அணைவரின் கவணத்தையும் ஈர்த்துள்ளது.
சனிக்கிழமை அதிகாலை இரண்டு மணிக்கு நடந்த இச் சம்பவம் தொடர்பாக குறிப்பிட்ட அதிகாரியின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பாரட்டப்பட வேண்டியது.இச் சம்பவத்திற்கும் நக்ஸலைட்டுகளுக்கும் தொடர்பில்லை என தமிழக காவல் துறையினர் அறிவித்திருந்த அதே வேளை இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள் தமிழ் தேசிய விடுதலைப் படைக்கு இச் சம்பவத்தில் தொடர்பிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
திருச்சியிலிருந்து சென்னை வந்த மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளே ஆபத்தின்றி தப்பினார்கள்.
பாரிய தமிழின அழிவிக்கு எதிராக உணர்ச்ச மிக்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஒரு ஆபத்து கடந்தது என்று நிம்மதி பெருமூச்சு விடுவார்களா? அல்லது இனிமேல் தான் விழிப்பார்களா?
சம்பவ இடத்தில் விடப்பட்டிருந்த தடயம் நேரடியாக தமிழ் உணர்வாளர்களை சுட்டிக்காட்டுவது என்பது இந்தியாவுடன் முடிந்து விடும் நிகழ்வு அல்ல.
டன் தொலைக்கட்சியின் அரசியல் களம் நேரலை நிகழ்ச்சியில் அமைச்சர் டக்லஸ்தேவானந்தா நேயர்களின் கேள்விகளுக்கு பதிலலிக்கையில் இச் சம்பவத்தை உதாரணம் காட்டியிருந்தார்.
இந்தியாவில் காட்டியிருந்த எதிர்ப்பிற்கு ஏதாவது பிரதிபலிப்பு இருக்குமா? என கேட்கப்பட்ட போது. பதிலளிக்கையில் இச் சம்பவத்தை தெரிவித்த அமைச்சர் இது போன்ற மக்களை ரத்தம் சிந்த வைக்கும் செயலில் ஈடுபடமாட்டேன் வியர்வை சிந்தும்படி மக்களை அழைப்பேன் என்ற அவர் புலம் பெயர் புலிகள் தமிழகத்துக்கு பணம் அனுப்பி அவர்களை தூண்டிவிடுகின்றனர் என்றும் கூறினார்.
அண்மையில் நடந்த நிகழ்வுகளையும் இலங்கை, இந்திய அரசுகளின் கருத்து பரிமாற்றங்களையும் உண்னிப்பாக அவதானிக்கும் போது இந்தியாவில் மறைந்திருக்கும் புலிச் சந்தேக நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர்களுடன் தொடர்புவைத்திருக்கும் ஏனையவர்களும் சட்டத்தின் முன் நிறுத்துப்படுவார்கள் என்ற பொருளையே உணர்த்தி நிற்கின்றது.
அதாவது இலங்கையில் நிகழ்ந்த திரைப்டவிழாவிற்கு பிரபல நடிகர்கள் பங்குபற்றாமை, பின்னர் ஜனாதிபி மகிந்த தலைமையிலான குழுவினரின் இந்திய விஜயத்திற்கு எதிர்ப்பு போராட்டம் நிகழ்தியமை, தமிழத்தில் கைது செய்யப்படும் இலங்கையர்கள் இலங்கையில் கையளிக்கப்படலாம் என்ற கருத்து, மற்றும் அமைச்சர் பீரிஸின் கருத்துக்கள் உட்பட, தமிழகத்தில் நடைபெறவுள்ள உலகச் செம்மொழி மாநாடு போன்ற அரசியல் பின்னனிகளையும் உள்வாங்கி சிந்திக்க வேண்டியள்ளது.
பீறுட்டுக்கொண்டிருக்கும் மக்கள் உணர்ச்சியை மக்கள் உணர்ச்சி வழியில் சென்று உணர்ச்சிமிக்க உணர்வாளர்களை ஊக்குவிக்க ஒருசாராரை கைதட்ட வைத்து , மறு சாராருக்கு அச்சத்தை எற்படுத்தி மக்கள் உணர்வுகளை போராட்டக்காரர்களுக்கு எதிராக ஏவிடுதல் இலகுவான வழியாக உளவுத்துறையினர் கருதுகின்றனர்.
இச் செயல்களுக்கு என உணர்ச்சிமிக்க உணர்வாளர்களை தெரிந்தெடுத்து அவர்களை உளவுத்துறையினர் பயன்படுத்துகின்றனர். உணர்ச்சியின் உச்சியில் இருக்கும் உணர்வாளரும் தன்னை வழிநடத்துபவர் இன்னார் என்பதை அறியாமல் காரியத்தை கச்சிதமாக நடத்தி முடித்திடுவார்.
இந்த சூட்சமங்களை புரியாத மக்களும் முன்னனி ஊடகங்களும் முதனிலை தகவல்களை மட்டும் எண்ணத்தில் கொண்டு தமது கருத்துக்களை பரப்பிவிடுகின்றனர்.
இதே பாணிகளை கையாண்ட ஸ்ரீலங்கா இராணுவ புலனாய்வு துறையினர் தொன்பகுதியில் பல குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர்.
பாடசாலை சிறுவர்களையும் குழந்தைகளையும் பெண்களையும் பறிகொண்ட ஹெப்பிட கொலாவ பேரூந்து மீதான கிளைமோர் தாக்குதல் உள்ளிட்ட பிலியந்தலை வரையான அத்தனை தாக்குதல்களையும் ஸ்ரீலங்கா அரசு வெற்றிகரமாக நடத்தியிருந்தது. ஆனால் இத்தாக்குதல்களில் அகப்பட்ட அத்தனை தடயங்களும் புலிகளுக்கு சொந்தமானவை.
இத்தாக்குதல்களின் மூலம் போரின் அவசியத்தை சிங்கள மக்களுக்கு நியாயப்படுத்தியிருந்த ஸ்ரீலங்கா அரசு மக்களை போரில் ஈடுபடுத்தியது.
ரூபா 22 விற்பனையாகிய பாண் மீண்டும் விலையேற்றத்திற்குள்ளான போது “ரூபா 100 விற்றாலும் கவலையில்லை முதலில் புலிகள் அழியட்டும்”. என்ற மனநிலை வளர்க்கப்பட்டதுடன் வன்னியில் மக்கள் பொறிவெடியிலும், கிளைமோரிலும், வேறு சம்பவங்களிலும் கொல்லப்பட்டுக் கொண்டிருந்த போது அரசாங்கத்திற்கு “உரிமையிருக்கின்றது” என்று கூறுமளவிற்கு மன நிலை வளர்க்கப்பட்டிருந்தது.
இதே வேளை ரணில் அரசாங்கம் ஆட்சியில் இருந்த போது பாண் வெறும் 60.சதத்தினால் விலை அதிகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தொரிவித்து கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது
யாழ் குடா நாட்டிலே ஒரு சிறிய இலக்கை கூட நெருங்கமுடியாத வகையில் பாதுகாப்பு இலங்கையில் பலப்பட்டிருந்ததை அந்தந்த பகுதி மக்களே அறிந்திருந்தனரே தவிர புலம் பெயர் மக்கள் அறியந்திருக்கவில்லை.
இவ்வாறான சூழ் நிலையில் தேவையில்லாத இலக்கை தாக்கி மக்களின் எதிர்ப்பை புலிகள் சம்பாதிக்க விரும்பவில்லை. ஆனால் இராணுவ இலக்குகளை தேடிஅலைந்து கொண்டிருந்தனர்.
தாக்குதலுக்கு பொறுப்பானவர்களையே இத்தாக்குதல்கள் குழப்பத்தை ஏற்படுத்தியிந்தன. இந் நிலையில் அரசினால் கூறப்பட்ட முதனிலைத்தகவல்கள் மாத்திரம் தீவிரமாக பரப்பப்பட்டிருந்தன, புலிகளும் ஊடகங்களுக்கு அவ்வப்போது ஒத்துழைக்காமையினால் முழுக்குற்றச் சாட்டையும் இலகுவாக புலிகள் மீது சுமத்த வசதியாக இருந்தது.
உணர்ச்சிமிக்க உணர்வாளர்களின் பிரதிபலிப்புகள் சில விடயங்களை மறுத்து பேசமுடியாத சூழ்நிலைக்கு விடுதலைப் புலிகளை தள்ளியும் இருந்தது.
இந்த நிலை இன்று வரைக்கும் நீண்டு கொண்டிருக்கும் பலவீனமாக உள்ளதை அவர்கள் புரியாமல் இருப்பது அவர்களுக்கு தாமே வைக்கும் ஆப்பு.
இந்த வகையில் தான் விழுப்பரம் தண்டவாள தகர்ப்பை பார்க்க வேண்டியள்ளது. அங்கு காணப்பட்ட வாசகங்கள் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், தமிழர்களின் போரட்ட வீச்சுக்களை குறைக்கும்.
ஆகவே ஒரு அடி எடுத்துவைக்கும் முன்னர் பல தடைவ சிந்திக்க வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்து வேண்டும்.
“இது பேன்ற வன்முறைகள் இந்தியாவின் பாதுகப்பிற்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்” என்ற பதத்தின் மூலம் நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ளுமானால் இத் தாக்குதலின் உண்மையான கசப்பு தெரியும்.
புலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் தமக்குள் தாமே மேதிக்கொள்வதும் இன்னெருவரின் கருத்துக்களுக்கு இடமளிக்காது ஒருவர் மீதொருவர் மக்களின் பெயராளும் மரணித்தவர்களின் பெயராலும் திட்டுவதும் மற்றவர்களின் நடவடிக்கையை இலகுபடுத்திவிடும்.
“நமது தலைவிதியை நாமே தீர்மானிப்போம்” என பொங்கு தமிழ் மேடைகளில் முழங்கியது இதற்காகவா? மீண்டும் ஒரு கண்ணீர் நம்கெதற்கு?
ஆகவே தேவையற்ற காரணங்களால் பிரிந்திருக்கும் தமிழர்களே ஒன்று சேரக்கூடிய தருணங்களை தவறவிடாதீர்கள்.

0 Responses to “இவன் மேதகு பிரபாகரன் தம்பிகள்”



  1. Leave a Comment

Leave a comment


  • பகிர் – Share

    Rightdiary பகிர் – Share

www.rightdiary.com LAUNCHING PROGRAM

June 2010
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

Flickr My Photos