03
Mar
10

Somebody save me , Somebody try to kill me

This aricle for Press Freedom Day

This is picture taken secretively inside Jaffna fort. Me and my colleague went to an area inside the High Security Zone with the district judge to report on a violent incident and were startled seeing scattered human bones. A motorbike too was burning on one side. But we did not report this incident after the judge warned us to take care of our own safety.

My whole thoughts are visiting to my home town to my affected people and the children by the war in Vanni, when i hug my children and pet with them.

Death by violence seemed certain during my journalistic life in Jaffna peninsula. Sometimes I wonder where I would have been lying dead – in a shrub jungle or inside an abandoned well.

My professional life started disastrously in 1999, I was sacked within 14 days by my first employer and this experience only made be stubborn to succeed as a journalist.

An important lession I learnt from peninsula journalism is that news must reach the outside world somehow. I used to find out incidents taking place within the High Security Zone but instead of taking the hazardous step of writing to a local newspaper I made contact with a Colombo media outlet and only after they publish it first I wrote to my local paper.

I learnt Sinhalese just by talking to army and police personnel, a letter or a word at a time. This helped me understand their thinking and enabled me to learn their language while remaining in the peninsula. But many of my colleagues viewed my friendship with army personnel with suspicion, specially during year 2005.

I faced imminent danger to my life soon after the assassination of journalist Mylvaganam Nimalarajan in year 2000 and I left Jaffna for Colombo, but despite making contact with many personalities and seeking help nobody were willing to help.

When I returned to Jaffna after a few years there were many new faces in peninsula journalism and I had to introduce myself to them in order to carry out my profession.

My dress helped me to pass over many srilankan army check points

But my dress code somehow made them suspicious that I was an army spy and some of them even made direct comments as if cracking a joke. I asked them not to suspect me or make sarcastic comments to no avail.

As mentioned earlier “let the news go out” was my guiding principle because I had realized that we were living in a difficult time and Tamils were losing their live sin numbers. Therefore making money out of my reports took a second place.

A classic example was in 2006 when the Sri Lankan war was reignited. Then I got information that some 56 children were stranded in Meesalai in southern peninsula but I was not going to report it because I thought it was important to rescue them before filing a report. I promptly informed the authorities, the district judge and UNICEF whose efforts ensured the rescue of the children.

In 2005 I was beaten up by the army and my taken mobile was taken away by them. Despite asking help from my friends to make contact with my family or my friends in Colombo no one was willing to lend his phone. But they had reported the circumstances that led to my assault to their respective media outlets.

I promptly informed the authorities, the district judge and UNICEF whose efforts ensured the rescue of the children.

Since I was a regional correspondent for state-owned Thinakaran newspaper I was not able to report all violent incidents. The editorial board always used news items for political purposes. Therefore I shared my information that I gathered with my colleagues. But their suspicion was so strong that they preferred to stay away from me, none of them was willing to share any information with me.

I had no stable income and my safety was at stake which made by parents unhappy about my practicing journalism. But I was able to manage my expenses somehow because of my work with Colombo media organs. But I endured all the hardships and rode 60-80 kilometers everyday for my job.

In an era of communication technological revolution telephones became a rare facility for us journalists to carry on our job. We approached telecommunication officials for connections but we were given various excuses for not being able to give us telephone unlike in the cases of traders who used to get their lines no sooner they applied. Even those who had the facility were not willing to share and toward the later stages even communication centers did not let us used their services because they feared retribution for allowing journalists telephone facilities.

During one time all we reported were about killings. We would discuss “today one here, two there, is the man out?” and so on. In short we were counting corpses and reporting on blood and tears for a living.

It was a time of fear and suspicion, I can’t forget meeting a classmate after a long time in a bus and trying to feel his hip in the guise of a gesture of affection. I feared that he might be hiding a pistol in his hip.

I photographed a policeman who assaulted me inside the Jaffna hospital

I spent time at night lying on the bed and planning escape routes should there be any trouble. Even at sleep I was alert to the smallest sound in the environment which will sound dread. But me and my colleagues were experts putting on a brave face.

I covered all the lights of my camera with stickers worn by women on forehead to take pictures at night without being betrayed by flashlights. I would experiment with my camera how I could take pictures at night clearly should anything happen to me and I survive to report it.

With all transport out of the peninsula cut off, there was a huge demand for ship transportation that took place whenever the military permitted. There the people were treated worse than animals. Once I witnessed a young mother with her infant child scrambling for her turn for travel being squeezed by her breast and beaten with an iron bar. I tried in vain to photograph the scene because there were a lot of soldiers around.

Experience of photographing a roundup check of my village

I can’t forget the experience of photographing a roundup check of my village. I was pleasantly surprised to see some villages co-operating with me. That morning soldiers took all the villagers to a school playground and I too went their with my camera knowing well that I would be dead if I get caught. But instead of getting checked I went and hid inside a classroom. As I was trying to point the lens through a hole nervously, a few young men walked in and contrary to my fear what would happen, they helped me take pictures by guarding the room.

I knew I irritated my colleagues when I walked in the streets with a camera in such a dangerous period. The camera was an object to provoke the army but my was that we can’t live in fear everyday.

When I was preparing to cover the murders in Allaipiddi there was no one willing to accompany me. On the other hand I was not prepared to report just based on hospital sources or villagers’ account. I wanted to see it myself. After a long debate three of my colleagues agreed to join me. Four of us left in two motorbikes. As we reached the Pannai Road that connects the islet with the peninsular the soldiers manning a checkpoint threatened to shoot us if we stopped on the road which was a high security zone.

A picture of Allaipiddi incident.

On reaching Allaipiddi my colleagues were unable to stand the wailing and scenes of death and got ready to leave within five minutes of reaching there. But when I opposed to their suggestion they agreed to stay but gave their cameras to me. I went inside the houses and calmly shot the photographs.

I believe I used my camera as a weapon against media suppression because my carrying a camera even in such dangerous circumstances forced my colleagues to do the same even for the sake of professional competition who would otherwise been happy not taking pictures.

I must admit that I have not been able to be unshaken when I saw wailing men, women and children through my camera lens. These scenes had their fearful effects on me too. Even dogs running across evoked fear and I’d feel my heart pounding fast. Even though there was no mobile signal I would pretend to be in a serious conversation with someone walking on the road in the hope that anyone wanting to attack me would not dare to do so if they find me in contact with somebody.

I prayed to Jesus thus “I have not been party to anybody’s bloodshed. Please let me know the dangers to me in advance.” Indeed I received information of a plan to kill me through short message. I went into the toilet and cried, I shook and my chest ached, I felt as though my blood has dried up.

The Human Rights Commission when informed did not take the matter seriously. But when I contacted Colombo I got help to get out from Jaffna. The AP understood the value of life the way it knew the value of news. I presume I would not be alive today had my journalism been confined to local media only.

If have not move from jaffna i can not see my wife and children I would have had no opportunity to enlighten the truth data of the bloody war.

Government officials who co-operate with southern journalists not help the peninsula journalist saying they are not authorized to do so.

I have been badly affected by the ongoing war violations. Only remedy for to my brain relax, that I had been moved out of Jaffna early.

Moving freely in Sri Lanka, having only restriction mentioned ‘Security Reason’ which has been declared by the Sri Lankan Government.

I would have gain more experience and share with others, if I would have got the opportunity to migrate from Sri Lanka but very rare getting opportunities.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

எனது இரண்டு பிள்ளைகளை அரவணைத்து முத்தமிடும் போது எல்லாம் நினைவுக்கு வருவது இறுதி யுத்த காலத்தில் கொல்லப்பட்ட சின்னஞ்சிறுசுகளின் நினைவுகள், எனது மக்களின் பிஞ்சுகளின் நினைவு வரும் போதெல்லாம் என் பிள்ளைகளை அரவணைப்பேன்.

ஏனெனில் நானும் சுமார் மூன்று (2007) வருடங்களுக்கு முன்பு வீதியிலோ பற்றைக் காட்டுக்குள்ளோ கிணற்றிலிருந்தோ அல்லது எங்கேயோ என எனது வெற்றுடல் இருந்திருக்கும்.

1999இல் ஊடகத் துறையில் நுழைந்த 14 நாட்களுக்குள்ளே தூக்கியெறியப்பட்டேன், அப்போது எனக்குள் ஏற்பட்ட ஒருவித ஓர்மம் இதில் காலூன்ற வைத்தது, அல்லது போனால் எனது தெரிவாகவிருந்த இலத்திரனியல் துறையில் வளர்ந்திருப்பேன்.

எனது குடாநாட்டு ஊடக துறை அனுபவத்தில் நான் புரிந்து கொண்டது, “எப்படியாவது முதலில் செய்தி வெளியே செல்ல வேண்டும்“.

சில பாதுகாப்பு தொடர்பான செய்திகள் குறிப்பாக உயர் பாதுகாப்பு வலய பகுதிகளுக்குள் நிகழும் சம்பவங்களை எப்படியோ அறிந்து விடும் சர்ந்தப்பம் அதிகமாக இருந்தாலும் உள்ளுர் பத்திரிகையில் குறிப்பிட்ட செய்தி வெளியானால் அது எனக்கு அச்சுறத்தல் வரும் என்பதை ஆரம்பத்தில் உணர்ந்திருந்தேன். ஆகவே கொழும்பில் ஊடகம் ஒன்றுடன் இரகசிய தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு முதலில் அந்த ஊடகத்தில் வரும் வரை பொறுத்திருந்து பின்னர் எனது உள்ளுர் ஊடகத்திற்கு எழுதுவது வழமை.

குடாநாட்டில் படையினர் மற்றும் பொலிஸாரின் நடவடிக்கைகைள் அதிகமாக இருந்ததால் அவர்களின் மொழியை அறிய வேண்டும் என்ற ஆவலில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு எழுத்தும் சொற்களும் என பிழை பிழையான சிங்களத்தை அவர்களுடன் கதைப்பேன்.

இதனால் அவர்கள் மத்தியில் அதிகம் நெருங்கி பழகியதில் பல நகர்வுகளை அறிய முடிந்ததுடன் சிங்கள மொழியை யாழில் இருந்தே கற்றுக்கொண்டேன்.

எனினும் எனது நடவடிக்கைகள் எனது சக பத்திரிகையாளர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது, குறிப்பாக 2005 ஆம் ஆண்டளவில்.

நிமலராஜனின் மறைவவை அடுத்து எனக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாக குடாநாட்டிலிருந்து வெளியேறியிருந்தேன். எதுவித பாதுகாப்பு நடவடிக்கைகளும், மாற்று நடவடிக்கைகளும் எனக்கு கிடைக்கவில்லை, கொழுப்பிலிருந்து பலருடன் பலவிதமான தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தேன் எவரும் கைகொடுக்கவில்லை.(கவலை மிஞ்சிய கொழுப்பு அனுபவம் தனியானது)

மீண்டும் யாழுக்கு திரும்பிய போது புதிய முகங்களை ஊடகத்துறையில் கண்டேன். மீண்டும் என்னை அறிமுகப்படுத்தியே வேலைகளை செய்ய வேண்டியிருந்தது.

நான் வழமை போன்று சப்பாத்தும் ரீ.சேட்டும் அணிந்திருந்தது அவர்களுக்கு கேலியாக இருந்தது. நான் உடுத்திருந்த முறையை பார்த்து என்னை இராணுவ புலனாய்வாளன் என கிண்டலாக கதைக்கும் போது அதை ஆரம்பத்திலே கைவிடுமாறு கேட்டிருந்தேன். இக் கிண்டல் மெல்ல மெல்ல வளர்ந்தது அதுவும் ஒருபுறமிருக்கட்டும்.

எனது வெளிப்படை கொள்கை ‘முதலில் செய்தி வெளியே போகட்டும்”ஏனெனில் ‘இது தமிழரின் இரத்தம் ஆறாக ஓடிக்கொண்டிருக்கும் காலம்” என உணர்ந்தினால் வருமானம் என்பது இரண்டாம் கட்டம் என்பது தான் எனது நிலைப்பாடு.

ஒரு உதாரணம் 2006 மீண்டும் போர் தொடங்கிவிட்டது குடாநாட்டின் தென்பகுதி மக்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர், மீசாலை என்ற பகுதியில் சுமார் 56 சிறுவர்கள் சிக்கியிருப்பதாக தவவல் கிடைத்தது, செய்தியைவிட அந்த பிள்ளைகளின் பாதுகாப்பு அவசியம் என்பது எனது கருத்தாய் இருந்தது, இராணுவத்தினரால் தொலைபேசிகளும் செயலிழக்கப்பட:டிருந்தன உடனடியாக எனது சகா ஒருவரிடம் சென்று நிலைமைகளை கூறினேன் அவர் அதை கேட்டு விட்டு தனது அலுவலக தொலைபேசி செயலிழந்திருப்பதாக கூறினார். நானும் கேட்டு விட்டு பொறுமையாக இருந்தேன், ஆனால் குறிப்பிட்ட நபரின் தொடர்பிலிருந்த வானொலி ஒன்றில் உடனடி செய்தியில் நான் கூறிய அதே தகவல்களை கேட்ட போது அதிர்ச்சியடைந்தேன், எனினும் உரிய அதிகாரிகளின் கவணத்திற்கு (மாவட்ட நீதிபதி, யுனிசெவ்) அவ்விடயத்தை தெரியப்படுத்தியிருந்தேன் அதையடுத்து அவர்கள் மேற்கொண்ட முயற்சியினால் அச் சிறுவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்கள்.

2005 ஆண்டு நான் பலமாக தாக்கப்ட்டிருந்த வேளையில் எனது கைத்தொலைபேசியை இராணுவத்தினர் கைப்பற்றியிருந்தனர், நான் வீட்டுடன் தொடர்பு கொள்ளவோ அல்லது கொழும்பில் உள்ள நண்பர்களுடன் விடயத்தை பகிரவோ அருகிலிருந்த நண்பர்களின் உதவியும் கிடைக்கவில்லை என்பதையும் நினைத்துப்பார்கின்றேன். ஆனால் நான் தாக்கப்பட்டவிடயம் தொடர்பான செய்திகளை பிற ஊடகங்களில் என்னால் கேட்க முடிந்தது.

அரச ஊடகமான தினகரன் பத்திரிகையின் யாழ் நிருபராக இருந்த காரணத்தால் எல்லா வன்முறை சம்பவங்களையும் அறிக்கையிட முடியவில்லை, ஆசிரியர் பீடம் பிரதேச செய்தியாளர்களின் தகவல்களை தமது அரசியல் இலாபங்களுக்காக பயன்படுத்தியதே இதற்கு காரணம். இதனால் சந்தேக பார்வைகள் எம்மீது அதிகமாகவே இருந்தது, எனினும் எனக்கு கிடைக்கும் தகவல்களை சக ஊடகவியலாளர்களிடம் பரிமாறுவது எனது வழமை, ஆனாலும் என் மேல் ஏற்பட்ட சந்தேகங்களினால் சகாக்கள் என்னை விட்டு விலத்தியே நின்றனர் ஒரு துளி தகவல்களும் எனக்கு அவர்களிடம் இருந்து கிடைப்பதில்லை.

கொழும்ப ஊடகங்களுடனான தொடர்புகள் அதிகரித்ததினால் எனது வாழ்க்கை செலவை ஓரளவிற்கு ஈடுசெய்ய முடிந்தது.

வருமானமற்ற ஒரு எதிர்காலமற்ற அடுத்த நிமிடம் இருப்பனோ என்ற நிச்சயமற்ற வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்ததினால் பொற்றோர் மத்தியிலும் பாதட்டமான உறவுகளே இருந்தது.

எனினும் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு தினமும் சுமார் 60 முதல் 80 கிலோமீட்டர்கள் வரை மிதி வண்டி பயணம் செய்தே எனது கடமையை செய்தேன்.(எனது வீட்டுக்கும் யாழ் நகரத்திற்கும் இடையில் போகவும் வரவும் சுமார் 48 கிலோமீட்டர்கள்)

நவீன தகவல் தொழில் நுட்பங்கள் வளர்ச்சியடைந்திருந்த உலகில் எமக்கு எமது கடமையை செய்வதற்கு அது கிடைக்கவில்லை. தொலைபேசி இணைப்புக்கு எத்தனை தடவை அதிகாரிகளை நாடியிருப்போம். எமக்கு பல காரணங்கள் கூறப்படும் ஆனால் வர்த்தகர்களுக்கு எந்த மறுப்பும் இல்லாமல் மறுநாளே இணைப்பு வழங்கப்பட்டுவிடும்.

அவற்றை வைத்திருந்தோரும் அதை பரிமாறிக் கொள்ள விரும்பவில்லை. இறுதி கட்டங்களில் தொலைத்தொடர்பகங்கள் எம்மை தமது ஸ்தாபனங்களுக்குள் அனுமதிக்கவேயில்லை, மணிக்கு ஒன்று என வீதிகளில் தலைகள் உருண்டு கொண்டிருந்ததினால் எம்மை அண்டிக்கொள்ள அச்சப்பட்டனர்.

ஒரு கட்டத்தில் கொழும்பில் தொடர்பு கொண்ட போது ‘நாம் பிரேதங்களை சேகரிப்பவர்கள்” அதாவது எமது தொலைபேசிகளின் பேசியது கொலைகளை மட்டுமே, இரத்தத்தையும் கண்ணீரையும் எமது பேனாக்கள் கக்கித்தள்ளியது, அவர்களின் உயிர்களால் எமது சட்டைப் பைகள் நிரப்பியது. இறுதியில் ‘ மச்சான் இன்றைக்கு அங்க 1 இங்க 2 ஆள் முடிஞ்சுதோ?” இவ்வளவும் தான் தகவல் இது தான் எமது அறிக்கையிடல்.

இதற்கிடையில் ஊடகங்டகளில் தெரிவிக்கமுடியாத சில விடயங்களை மக்களிடம் நேரடியாக சுட்டிக் காட்ட வேண்டிய தேவையும் இல்லாமல் இல்லை, யார் சொல்லுவதற்கு இருந்தார்கள்? இதை கூறிய எமக்கு வந்ததும் கெட்ட பெயரே. அச்சத்துடன் அச்சமாக அதுவுமிருக்கட்டுமே என்று இருந்த காலம் அது.

ஒரு முறை எனது வகுப்பு நண்பனை பேரூந்தில் சந்திக்க வேண்டி ஏற்பட்டது நீண்ட நாட்களின் பின்னர் அவனை சந்தித்ததினதல் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது, உடனடியாக நண்பனின் இடுப்பை தடவி நலம் விசாரிப்பது போல் அவனிடம் ஏதாவது ஆயுதங்கள் இருக்கின்றதா? என அவனைத் தெரியாமலே பரிசோதனை செய்ததை மறக்க முடியவில்லை. காலகட்டம் அப்படியாக இருந்தது.

படுக்கையில் இருக்கும் போது ஆபத்து வந்தால்? எப்படி தப்பி ஓடலாம் என்ன பாதுகாப்பு நடவடிக்கை? இது தான் சிந்தனை அரைகுறை தூக்கத்திலும் சலசலப்புகளுக்கும் சரசரப்புகளுக்கும் ஈரல் கரையும் ஆனாலும் அஞ்சாத முகபாவனை எனக்கு கைவந்தகலை, சகாக்களுக்கும் தான்.

இரவில் சுட வந்தால் என்ன செய்வது, அல்லது தாக்கிவிட்டு சென்றால் எப்படி அவர்களை சாட்சியாக்குவது, என்ற ஏகப்பட்ட சிந்தனை, பெண்களின் நெற்றிகளை அலங்கரிக்கும் பொட்டுகள் எனக்கு பாதுகாப்பளித்தன.

என்னுடைய நிழல்பட கருவியின் அத்தனை விளக்குகளையும் ஒட்டுப் பொட்டுகளால் மூடிமறைத்து வைத்திருந்தேன். படங்களை இரகசியமாகவே எடுக்க வேண்டிய அதிக சர்ந்தப்பங்கள் இருந்தமையே இதற்கு காரணம், மேலும் இரவில் வெளிச்சம் இல்லாமல் எவ்வாறு தெளிவாக படம் எடுக்கலாம் என்று எனது நிழல்பட கருவியை பினைந்து கொண்டேயிருப்பேன் சுமார் 200 வீதத்தினால் மின்கலத்தின் விலை அதிகரித்திருந்த போதும் உயிர் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியமாக எனக்கு மின்கலங்கள் இருந்தது.

யாழிற்கான அத்தனை போக்குவரத்துகளும் தடைப்பட்டிருந்த காரணத்தால் இராணுவம் அனுமதித்த வேளையில் மட்டுமே கப்பல் பயணம் இடம் பெற்றது இதற்கு மக்கள் முண்டியடித்து ஓடுவது வழமையாக இருந்தது, மிருகங்களுக்கு இருந்த மரியாதை கூட மக்களுக்க கிடைக்கவில்லை, ஒரு முறை இளம் தாயயொருத்தி தனது கைக்குழந்தையுடன் பயண அனுமதிக்கு முண்டியடித்துக் கொண்ட வேளை அவளின் மார்பை நசுக்கி அவளுக்கு ஓங்கி இரும்பினால் அறைந்த சம்பவத்தை படம் எடுக்க முயற்சித்தேன்(இரகசியமாக) அப்பகுதியில் ஏராளமான இராணுவத்தினர் குவிந்திருந்தினால் அதை படமாக்க முடியவில்லை.

எனது ஊரில் நிகழ்ந்த சுற்றிவளைப்பினை படமாக்கிய அனுபவம் மறக்க முடியாது.

நான் எதிர்பார்க்கவேயில்லை ஊர் மக்கள் ஒத்துழைப்பு தருவார்கள் என்று.

அங்கிருந்த பாடசாலை மைதானத்தை நோக்கி காலை வேளை இராணுவம் ஊர் மக்களை மேய்த்து சென்றனர், நானும் எனது நிழல்பட கருவியுடைய பையுடன் மைதானத்தை நோக்கி விரைந்தேன். பட கருவியுடன் அங்கு நின்ற விடயம் இராணவத்திற்கு தெரிந்தால் அன்று நான் இல்லை (மரணம்) என்று தெரிந்தும் அதை எடுத்துச் சென்று வகுப்பறை ஒன்றுக்குள் பதுங்கிவிட்டேன், மக்கள் எல்லோரும் மைதானத்தில் இருந்தனர். அச்சத்துடன் ஓட்டைக் கற்கள் (கிறீல்) இடையே பட கருவியை சொருக முயன்ற போது சிலபேர் குறிப்பிட்ட வகுப்பறைக்குள் வந்தார்கள், நான் பதுங்கும் விடயத்தை புரிந்து கொண்ட அவ் இளையோர் எனது வேலையை செய்வதற்கு தகந்த பாதுகாப்பை தந்ததை மறக்க முடியவில்லை.

ஊடகங்கள் மீது வன்முறைகள் அதிகமாக இருந்த அவ் வேளையிலும் வழமை போன்று படக்கருவியுடன் வீதிக்கு வருவதை சகாக்கள் பலரும் விமர்சித்திருந்தனர். அவர்களுக்கு கூறும் பதில் ‘எந்தநாளும் பயந்து வாழமுடியாது” மூக்கை சீண்டி கோபம் ஊட்டும் பொருளாக படகருவி இராணுவத்தினருக்கு தென்பட்டது உண்மைதான், எனினும் எல்லோரும் அஞ்சி நடந்தால் எதுவுமே நடக்காது, நடப்பது நடக்கட்டும் என்று இருந்து விட்டேன்.

குறிப்பாக அல்லைப்பிட்டி கொலை சம்பவத்தை அறிக்கையிட செல்வதற்கு யாரும் என்னுடன் உடன்படவில்லை. வழமை போன்று தொலைபேசி, வைத்தியசாலை மற்றும் குறிப்பிட்ட ஊராரின் தகவல்களையும் அடிப்படையாக வைத்து அறிக்கையிட நான் விரும்பவில்லை(அதிக சர்ந்தப்பத்தில்) என்னிடம் படக்கருவியோ அல்லது வாகனமோ இருக்கவில்லை, ஈ.பி.டி.பியின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் இருந்த அப்பகுதிக்கு செல்வதற்கு யாரும் உடன்படவில்லை. என்னுடைய வற்புறுத்தலினால் மூன்று பேர் என்னுடன் இறுதியில் உடன்பட்டார்கள், இரண்டு மோட்டார் வண்டியில் நான்கு போர் சென்றோம். யாழ் நகரையும் தீவகத்தையும் இணைக்கும் பண்ணை வீதியில் தரித்திருந்த இராணுவத்தினர் சோதனையின் பின்னர் எம்மிடம் கூறியது ‘ குறிப்பிட்ட இவ் நேர் வீதியில் எங்காவது உங்கள் வாகனம் நின்றால் சுடுவோம்” ஏனெனில் அவ் வீதி உயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் இருந்த பிரதான வீதி ஆகும்.

குறிப்பிட்ட பகுதிக்கு என்னுடன் வந்திருந்த சகாக்கள் மரண ஓலத்தை அங்கு கண்டு அஞ்சினர் 5 நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் மீண்டும் திரும்பி செல்வதற்கு எத்தனித்தனர். நான் அவர்களுடன் தர்க்ப்படதையடுத்து தங்கள் பட கருவிகளை என்னிடம் தந்துவிட்டனர், பொறுமையாக குறிப்பிட்ட வீட்டுக்குள் நுழைந்து படங்களை எடுத்து தீர்த்தேன். யாழ் நகரம் திரும்பிய பின்னர் அப்படங்களை சக ஊடகவியளாலர்களுக்கும் கொடுத்து உதவினேன். எனக்னெ ஒரு படக்கருவி அந்த நாட்களில் இல்லாததினால் அப்படங்களுக்குரிய சிறப்புரிமையை காத்துக் கொள்ளவும் முடியவில்லை.

ஊடக அடக்கு முறைக்கு எதிரான போர் கருவியாக எனது படக்கருவியை பாவித்தேன் என்றே நான் நம்புகின்றேன், ஏனெனில் என்னை காரணம் காட்டி (தொழில் போட்டியாக) குடாநாட்டின் சக ஊடகவியலாளர்கள் தமது படக்கருவிகளை இரகசியமாகவேனும் காவிக்கொண்டிருந்தனர் என்று நிச்சயமாக கூற முடியும்.

என் கண்களுக்கு நோராக படக்கருவியை வைத்து விம்பத்தைபார்க்கும் போது பெண்கள், குழந்தைகள், பெற்றொர்கள், சகோதரங்கள் கதறுவதைப் பார்த்து எனது மனது குலுங்கிய சம்பவங்களும் ஏராளம்.

இக்காட்சிகளை மனதில் உள்வாங்கி உள்வாங்கி நடுங்கிபோயிருந்த எனக்கு வீதியில் செல்லும் போதெல்லாம் ஒரே பயம், ஒரு நாய் குறுக்காக ஓடினாலும் இருதயம் படக் படக் என்று அடிக்கும் முற்றாக மனம் நெய்ந்து போனேன், வீதியில் தனியாக வரும் வேளையில் கைத்தொலைபேசிக்கான அலைகள் கிடைக்காத போதும் யாரோ ஒருவருடன் முக்கியமாக கதைத்துக் கொண்டிருப்பது போல் நடிப்பது எனது வாடிக்கை, ஏனெனில் இன்னொருவரின் தொடர்பில் இருந்தால் என்னை தாக்க வருபவர் பின்வாங்குவார் என்ற நம்பிக்கை இருந்தது.

இயேசுவிடம் ஒன்றை கேட்டேன் ‘நான் எந்த இரத்தபழிக்கும் உடந்தையாகவில்லை ஆகவே நான் செய்யும் வேலை உமக்கு சித்தமானால் எனக்கு நடக்க இருக்கும் ஆபத்தை முன்கூட்டியே அறிய வேண்டும்”என்று அதன் படி எனக்கு மரணத்திற்கான மணித்தியாளங்கள் எண்ணப்பட்டுள்ளதை குறுந்தகவல் மூலம் அறிந்தேன். மலசல கூடத்துக்குள் சென்ற நான் தனியாக அழுதேன் என் வாய்கிட்டியது, கழுத்து நடுங்கியது, நெங்சு ஈய்ந்தது, கண்களால் ஆறு ஓடியது, இரத்தம் காய்ந்து உறைந்தது,

முதலில் வீட்டிலிருந்து வெளியேறுவதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அறிவித்தேன், இது சாதாரண விடயம் என்று கைவிரித்தார்கள்.

உடனடியாக கொழுப்பிற்கும் தொடர்பு கொண்டிருந்தேன், உண்மையில் அவர்கள் கைகொடுத்தார்கள், உயிரின் பெறுமதியை அறிந்த அவர்கள் ஏற்கனவே பல தடவைகள் என்னை கொழும்பிற்கு அழைக்க முயற்சித்தார்கள் ஆனால் நான் மறுத்திருந்தேன், (காரணம் விலாவாரியாக அறிக்கையிட விரும்பாத யாழ் ஊடகவியலாளர்கள் மத்தியில் எதிர் நிலைப்பாட்டில் இருந்தேன்.) ஏபி நிறுவனம் செய்திகளை பெற்றுக் கொள்வதில் எவ்வளவு அக்கறையுடன் இருந்ததோ அதே போல உயிரின் பெறுமதியையும் அறிந்திருந்தது. தொடர்ந்தும் உள்ளுர் உள்நாட்டு ஊடகங்களுடன் மட்டுமே எனது ஊடக வாழ்க்கை அமைந்திருந்தால் இன்று இவ் அனுபவத்தை எழுதவோ எனது பிள்ளைகளுடன் இருந்து மகிழவோ நான் இருந்திருக்க வாய்ப்பேயில்லை.

குடாநாட்டில் நிகழ்ந்து கொண்டிருந்த வன்முறை சம்பவங்களினால் எனது மூளை களைப்படைந்திருந்தது, போக்கு வரத்து வசதிகள் இருந்த சமயத்தில் தேவையில்லாத காரணங்களை முன்வைத்து குடாநாட்டுக்கு வெளியே சென்று மனதை ஓயவிடமுடிந்தது.

எனினும் இலங்கையின் எல்லா பகுதிகளுக்கும் செல்வதற்கான உரிமைகளை ‘பாதுகாப்பு காரணம்” என்ற சொற்பதம் தடுத்தது.

நாம் நினைத்தவுடன் வெளிநாடுகளுக்கு செல்லும் வசதிகள் இலங்கையில் கிடைப்பதில்லை, சாந்தப்பம் இருந்தாலும் தரவும் மாட்டார்கள் அவ்வாறு வெளியுலகத்தை பார்த்திருந்தால் புதிய சிந்தனையுடன் வேலைகளை செய்திருப்பேன்.


1 Response to “Somebody save me , Somebody try to kill me”


  1. 1 Santhi
    November 9, 2010 at 11:39 am

    A very good report Vincent This would & should reach evcry corner of the world


Leave a comment


  • பகிர் – Share

    Rightdiary பகிர் – Share

www.rightdiary.com LAUNCHING PROGRAM

March 2010
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Flickr My Photos