09
May
10

நிலத்தை பறித்து வளங்களை அழித்து

நெல்லியடியில் தறிக்கப்படுகின்ற ஆலமரம் படம் யாழ் செய்தியாளர்

நெல்லியடியில் தறிக்கப்படுகின்ற ஆலமரம். படம் யாழ் செய்தியாளர்

பல உயிர்களை பாதுகாத்த ஆலமரத்தின் உயிர் இன்று பறிக்கப்பட்டுள்ளது.

நெல்லியடி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்னால் அமைந்துள்ள ஆலமரத்துக்கே இத் துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அதன் அடியில் புரண்டுபடுத்து மரக்கிளை மறைவில் பதுங்கியருந்து தமது உயிர்களை பாதுகாத்துக் கொண்ட மக்களும் அதிகாரிகளும் அதையிட்டு சிறிதளவும் கவலையில்லாமல் உள்ளனர்.
ஒப்ரேஷன் லிபரேஷன் உள்ளிட்ட முக்கிய போர் காலங்களிலும், விமானத்தாக்குதல், எறிகனைத்தாக்குதல், உலங்குவானூர்தி தாக்குதல் மற்றும் வேளைகளிலும் முக்கிய பாதுகாப்பரனாக அவ் ஆலமரம் விளங்கியது.
நாட்டில் யுத்தம் முடிந்ததாக கூறப்பட்டுள்ள இன்றைய நிலையில் துரித அபிவிருத்தி பணிகள் இடம் பெறுகின்றன. அதில் ஏற்கனவே திட்டமிட்டபடி யாழ்-பருத்தித்துறை வீதி அகலப்படுத்தப்படுகின்றன.
குடாநாட்டின் அதிகளவான அரச அதிகாரிகளை கொண்டுள்ள வடமராட்சி பகுதிக்கு இவ்வாறான ஒரு விரைவு சாலை அத்தியவசயமானது. அமைக்கப்படவுள்ள சாலையின் பொருட்டு அவ் வீதியில் அமைந்துள்ள மரங்களும் கட்டடங்களும் அகற்றப்படுகின்றன. இது தவிர்க்க முடியாதது. எனினும் மாற்று ஆலேசனைகளும் மாற்று வழிகளும் தவிர்க்கப்பட்டு அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படுவது கண்டிக்கத்தக்கது.
இதற்கு மக்களும் அதிகாரிகளும் (சொந்த நிலத்தில் வாழ்வோர்) உணர்வற்றவர்களாய் இருப்பது மேலும் கண்டிக்கத்தக்கது.
திட்டமிடல்களும் ஆலேசனைகளும் இறக்குமதி செய்யப்பட்டவைகள், அத்துடன் அதற்கான தொழிலாளர்களும் இறக்குமதி செய்யப்பட்டவர்கள் (சிங்களவர்கள்) அவர்களுக்கு வேலை முடிந்தால் சட்டைப்பபை நிறையும், ஆனால் சொந்த நிலத்து மக்கள் வேலைவாய்ப்பையும் இழந்து வளத்தையும் இழக்கும் நிலை தான் தமிழர்பிரதேசங்களில் பரவலாக உருவெடுத்துள்ளது.
இவ் முக்கிய பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் நாடுகளில் இயற்கைவளங்களை தமது நாட்டு அரசு பாதுகாப்பதில் அக்கறை செலுத்துவதை அறிவார்கள்.
திட்டங்களை கூறிக்கொண்டிருந்த விரிவுரையாளர்கள், பல உலக நாடகளுக்கு சென்று அனுபவம் பெற்றவர்கள் என்று கூறிக்கொண்டிருந்தவர்கள் எங்கே?
நிலப்பரப்பு, சனத்தொகை, இயற்ககை வளம் , சொத்திழப்பு இவைகளை புறம்தள்ளியா பிற நாடுகள் அபிவிருத்திகளை செய்கின்றன தட்டிக்கேட்பதற்கான உங்கள் அறிவு எங்கே?
ஏற்கனவே அதிகாரிகளின் குருட்டுத்தனமான நடவடிக்கைகளால் (கையூட்டு) குடா நாட்டில் பல பயன் தரு மரங்களை அழிவடைந்துள்ளன. மேலும் நிலத்தடி நீருக்கான ஆபத்துக்கும் காரணம் அதிகாரிகளே, கண்மூடித் தனமாக கட்டடங்களை கட்ட அனுமதித்ததும், பல பகுதிகளில் தரைக்கு புற்கள் வளர்ப்பதை ஊக்குவிப்பதற்கு பதிலாக சீமெந்து பூச்சுக்களை அனுமதித்ததும், யாழ் நகரின் மத்தியில் அமைந்திருந்த பன்னை குளத்தை சமதரையாக்கி வர்த்தகர்களுக்காக அக்குளத்தை காணியாக தாரைவார்த்தது போன்ற செய்பாடுகளே நிலத்தடி நீருக்கான முக்கிய ஆபத்தாக அமைந்துள்ளது.
(903 குளங்கள் இருந்த குடா நாட்டில் இன்று சுமார் 600க்கும் குறைவான குளங்களே உள்ளது).
இதே போன்று புளிய மரங்கள் குடாநாட்டில் அழிவடைந்ததும், முள்முருங்கையின் அழிவை கண்டு கொள்ளாமல் விட்டதும் சுட்டிக் காட்டத்தக்கது.

சுனாமியின் பின்னர் யாழ் குடாநாட்டில் நோய் தாக்கத்திற்குள்ளான முள்முருங்கை மரம், தற்போது முற்றாக அழிவடைந்துவிட்டது. படம் வின்சென்ற் ஜெயன்

சுனாமியின் பின்னர் யாழ் குடாநாட்டில் நோய் தாக்கத்திற்குள்ளான முள்முருங்கை மரம், தற்போது முற்றாக அழிவடைந்துவிட்டது. படம் வின்சென்ற் ஜெயன்

2004 ஆண்டு சுனாமியின் பின்னர் குடாநாட்டின் கால்நடைகளின் முக்கிய உணவாக பயன்படுவதும், மனிதனின் பிணி போக்கியும், காலசார மரமுமாகிய முள்முருங்கை நோய் தாக்கத்திற்குள்ளாகி முற்றாக அழிவடைந்துவிட்டது. இது தொடர்பாக எவரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, அது தொடர்பான கேள்விகளுக்கும் அப்போது பதிலளிக்கவில்லை (மனித உரிமை மீறல்களின் உச்சக்கட்ட காலம் என்பதும் மறுக்க முடியாது)
விறகு தேவைக்காக புளிய மரம் அனுமதிக்கப்பட்டிருந்த அதே வேளை அதன் பதில் நடுகையை ஊக்கப்படுத்தியோ, கண்காணிக்கவோயில்லை, உணவுத் தட்டுப்பாட்டு காலத்தில் கொழும்பிலிருந்து புளி வரும்வரை காத்திருந்ததும் நாமே.
இன்று தமிழர் பிரதேசங்களில் பரவலாக தமிழர் வேலைவாய்ப்பை இழந்து கொள்வனவில் மத்திரமே ஈடுபடும் அபாய சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
பொருளாதார சுரண்டல் இடம் பெறுவதை உணராமல் தமிழர்களும் அள்ளி (பணத்தை) வீசி வாங்குவதிலும் ஏட்டிக்கு போட்டியாக கட்டுவதிலும் தான் குறியாக உள்ளனர். (புலம் பெயர் நாடுகளில் ஸ்ரீ லங்கா பொருளுக்கு எதிர்ப்பு தெரிவித்து என்ன பயன்? முதலில் தாயகத்தில் இருக்கும் உறவினர்களை கவணமீர்ந்துகொள்)
சைக்கிள் டைனமோவில் ரீ.வி. பார்த்த எம் சனத்திற்கு ரீ.வி க்கு அன்ரனா பொருத்துவதும் சி(சீ)னாகாரர் என்ற நிலையே உள்ளது.
பல நிறுவனங்கள் போட்டி போட்டு புனர்வாழ்பு புனரமைப்பு செயற்திட்டங்களை ஒழுங்குபடுத்துகின்றன. கமச் செய்கை, சுயதொழில் ஊக்குவிப்பு, தொழிற்பயிற்சி, என்று பல திட்டங்களை வைத்துள்ளன.
உண்மையில் இந்த மல்லுக்கட்டல்கள் அவசியம்தானா? உள்ளுரில் குவிந்து இருக்கும் வேலைவாய்ப்புக்களை சொந்த பகுதி மக்களையே செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ் உண்மையை இனம் காணமுடியாமல் இருப்பது ஏன்?
பூநகரி கௌதாரி முனையில் மிகப்பெரிய விடுதி கட்டப்பட்டு வருகின்றது இதற்காக விசேட வீதியும் அமைக்கப்பட்டு வருகின்றது. இதெற்கென அப்பகுதி மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளது, ஆனால் அப்பகுதி மக்களுக்கு இதில் எந்த வேலைவாய்ப்பும் வளங்கப்படவில்லை,
உல்லாச விடுதியாருக்கு?  வீதியாருக்கு?  அப்பகுதி மக்களுக்கு நன்மை என்ன? மக்களும் அடுத்தவன் நிலத்தை பிடுங்கி அதை மையமாக வைத்து வியாபார ஸ்தலத்தை ஆரம்பிக்கிறான். எழுகிறது காணிபிரச்சனை, குலைகிறது அமைதி, வளர்கிறது சிக்கல், கரைகிறது பணம், வாடுகிறது குழந்தை, வாழ்கின்றது அதிகார வர்க்கம்.
கால காலமாக இயற்கையை நம்பி விவயாயம் செய்த மக்களுக்கு கற்று கொடுக்க எனன உள்ளது, இயற்கை பொருட்களை நுகருவதில் பெரும் பணத்தை செலவு செய்யும் வெளிநாடுகள், எமது மண்ணிலும் இயற்கையை ஊக்குவிக்கும் திட்டங்களை முன்வைத்தால் வரவேற்கதக்கது.
எனினும் சொந்த நிலத்தில் வேலைவாய்ப்பை இழந்து நிற்கும் மக்களுக்கு தமது சொந்த நிழத்தில் வேலைவாய்ப்பை பெற்று கொடுப்பதற்கு அனைவரும் போராடுவது அவசியம்.
அதைவிடுத்து தமது பதவிகளை தக்க வைப்பதற்காக போலி திட்டங்களை திணிப்பதை தவிர்க்க வேண்டும்.
வேலையில்லா பட்டாளங்கள் அடுத்தவர் பகுதிகளுக்குள் சென்று சொந்த நிலத்து மக்களின் வாழ்வில் மண் அள்ளிப் போடுவதை நிறுத்த வேண்டும்.
அரசும் போரினவாதமும் நிறுத்துமா?
தமிழன் என்று ஞானமடைகிறானோ அன்று அது நடக்கும்.

நெல்லியடியில் தறிக்கப்படுகின்ற ஆலமரம் படம் யாழ் செய்தியாளர்

நெல்லியடியில் தறிக்கப்படுகின்ற ஆலமரம். படம் யாழ் செய்தியாளர்


0 Responses to “நிலத்தை பறித்து வளங்களை அழித்து”



  1. Leave a Comment

Leave a comment


  • பகிர் – Share

    Rightdiary பகிர் – Share

www.rightdiary.com LAUNCHING PROGRAM

May 2010
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Flickr My Photos