17
Feb
10

எமக்கில்லாத இராஜதந்திர நகர்வுகள்….

புளியங்குளம் இராணுவத்தின் பிடிக்குள் வந்ததையடுத்து முருகண்டி நோக்கிய நகர்வுகள் ஆரப்பித்த வேளையில் முல்லைத்தீவும் இராணுவத்தின் பிடிக்குள் வரும் குறுகிய நிலத்தில்  புலிகள் அடைக்கப்பட்டதன் பின்னர் ஸ்ரீலங்காவில் அதிபர் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்கள் நிகழும் இது தான் அரசின் அடுத்த திட்டம் என பலருடனும் பகிர்ந்து கொண்டேன்.

ஆனால் அதற்கு மேலாக யாவும் நிறைவேறிமுடிந்து விட்டது. எனினும் சரத் பொன்சேகாவின் கைது யாரும் எதிர்பார்த்திராத அதிரடி நடவடிக்கை தான்.

இராணுவ தளபதியாக இருந்த இவரினால் எத்தனை குடும்பங்களில் சேகம் ஏற்பட்டது என்பதை தமிழர்கள் அறிவார்கள்.

அது ஒருபுறம் இருக்க இராணுவத்தில் இருக்கும் போது அரசியலில் ஈடுபட்டார் என குற்றச்சாட்டை அரசாங்கம் தற்போது முன்வைப்பது கேலிக்குரியது.

இறுதிக்கட்ட போர் உக்கிரமடைந்து கொண்டிருந்த வேளை தமிழக அரசியல் வாதிகளை “கோமாளிகள்” என சரத் விமர்சனம் செய்த போது மகிந்த மயங்கியா கிடந்தார்.

தவிரவும் வடக்கு கிழக்கு பகுதிகளில் அரச அதிபராகவும், ஆளுனர்களாகவும் நியமிக்கப்ட்டவர்கள் யார்?

இதற்கு மேலாக வடக்க கிழக்கு அரச அதிபர்கள் தமது தற்துணிவு அதிகாரத்தின் கீழ் ஏதாவது திடீர் முடிவு எடுக்க முடியமா? யாழ் அரச அதிபரின் முக்கிய கூட்டங்கள் எதற்காக பலாலி இராணுவ தலைமையகத்தில் நடைபெற வேண்டும்?

தமிழர்களின் குடிசார் நடவடிக்கைகளில் இப்படியாக இராணுவம் தலையிட்டுக்கொண்டிருக்கும் வியங்டகளை அடுக்கிமுடியாது நீண்டு செல்லும் வன்முறைகளாம்.

சரத்தின் விடயத்தில் மட்டும் அரசு எடுத்த முடிவு ‘இரும்பு ஆட்சியின்” விறைத்த மண்டை நடவடிக்கையாக இது உள்ளது.

இதன் கீழ் தமிழர்களின் நிலைப்பாட்டை இலகுவாக புரிந்து கொள்ள முடியும்.

இவ் முற்று முழுதான அரசியல் பழிவாங்களை தமிழர்கள் வேடிக்கை வினோதமாக பார்த்து கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர முடிகின்றது.

உண்மையில் அது தவறு, யுத்தத்தை ஸ்ரீலங்கா அரசு நடத்தி முடித்த போது ஏற்பட்ட மனித உரிமை மீறல்கள் உட்பட்ட போர் குற்றங்கள் நிகழ்த்தப்பட்டது. இதற்கு சரத் உள்ளிட்ட அரச நிர்வாகத்தினரின் முக்கிய புள்ளிகள் வழி நடத்தி கொண்டிருந்தார்கள். ஆகவே தண்டிக்கப்ட வேண்டியது மகிந்தவே சரத்தோ அல்ல ஸ்ரீலங்கா அரசு தண்டிக்கப்ட வேண்டும்.

எனவே சிங்கள மக்கள் தேர்தல் மூலம் வழங்கிய தீர்ப்பை தமிழ் மக்கள் கையில் எடுத்ததாக தெரியவில்லை ஆனால் மகிந்த தானாகவே மடியில் போட்டுக் கட்டிக் கொண்டுள்ளது வெறும் சரத் அல்ல அது கடும் விசப் பாம்பு என்பதை முதலில் மகிந்தவிற்கு உணர்த்த வேண்டும்.

அதவது சரத் விடயத்தை தமிழர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி ஸ்ரீலங்கா அரசை   எவ்வாறு சர்வதேச குற்றக் கூண்டில் நிறுத்த வேண்டும் என்பதை சிந்தித்து செயலாற்ற வேண்டியள்ளதை உணாந்தும் உணராதவர்கள் போல் உள்ளனர்.

இப்படியாக இரஜதந்திரங்கள் பயன்படுத்தப்பட வேண்டிய அதிகமான சர்ந்தப்பங்கள் தவறவிடப்பட்டதும் தமிழர்களின் போராட்டம் மொட்டையடிக்கப்ட்டதற்கு காரணமாக இருக்கின்றது.

இன்று ஸ்ரீலங்காவில் தமிழர்களின் கருத்துக்கள் ஏறெடுக்கப்படாது அதிகரித்துக் கெண்டே போகின்ற நிலை தமிழர்களின் எதிர்காலத்தை பாதிக்கும்.

ஸ்ரீலங்காவின் அரசியல் நிலைமைகளுக்கும் தயாகத்திலுள்ள தமிழ் மக்களின் கருத்துகளுக்கும் செவிசாய்க்காதா வேறுபட்ட முயற்சிகள் புலம் பெயர் தமிழர்களால் முன்னெடுக்ப்படுவது மீண்டும் விலலுக்கு இறைத்ததாகவே இருக்கும்.

மேலும் கூடுதலான புலம் பெயர் தமிழ் ஊடகங்களும் தமது பாணிகளை கைவிடாமல் இருப்பது எதிர் காலத்திற்கு சிறந்தது அல்ல.


0 Responses to “எமக்கில்லாத இராஜதந்திர நகர்வுகள்….”



  1. Leave a Comment

Leave a comment


  • பகிர் – Share

    Rightdiary பகிர் – Share

www.rightdiary.com LAUNCHING PROGRAM

February 2010
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728

Flickr My Photos