04
Jul
10

எங்கள் மனம் மட்டும் ஏன் சுடுகிறது?

“வானம் பொழிகிறது
மண் நனைகிறது
எங்கள் மனம் மட்டும் ஏன் சுடுகிறது?”
ஏற்கனவே அறிந்த கவிதையாக இது உங்களுக்கு இருக்கலாம் ஆனால் இது புதுக் கவிதை. புனர்வாழ்வு முகாம் ஒன்றில் எழுதப்பட்டிருந்த வலிகள் நிறைந்த வரிகள்.
இன்னும் மன தைரியத்தையும் நம்பிக்கையையும் ஊட்டும் பரிசுத்த வேதாகம வாக்கியங்கள், அங்கே வகுப்பறை சுவர்கள் வலிகளை சுமக்கும் வரிகளை சுமந்த மனத்திரையாக புனர்வாழ்வு போராளிகளுக்கு அமைந்துள்ளது.
53 புனர்வாழ்வு போரளிகளுக்கு ஆணி மாதம் இடம் பெற்ற திருமணவைபவத்திற்கு சென்றிருந்த ஊடகவியலாளர் ஒருவரால் அவதானிக்கப்பட்ட விடயங்களையே இங்கு குறிப்பிடுகின்றேன்.
அவர் மேலும் விபரிக்கையில்…
“பெண் போரளிகள் மிகவும் சகோதரத்துவமாக பெண் சிப்பாய்களுடன் உறவாடுகின்றனர், பார்க்கும் போது சந்தோசமாக காணப்படும் இவர்கள் தங்கியிருக்கும் பகுதியின் வகுப்பறை சுவர்களில் தங்கள் மனதின் வலியை கொட்டியிருக்கிறார்கள் அவர்களின் வரிகளினால் கை படிந்தள்ள அச்சுவர்கள் அவர்களின் உப்புநீரால் கட்டப்பட்டுள்ளது” என கூறினார்.
வெளியில் ஒரு உணர்வும் உள்ளத்தில் வேறொரு உழைவும் உள்ள உயிரினமாக தமிழினம் பரினாம் பெற்றள்ளது.
உண்மை தெரியாத உலகில் வாழ்தது போக, உண்மைகள் தெரியவருதால் “எங்கள் மனம் சுடுகின்றது”
எதுவுமே செய்ய முடியாத சூழ் நிலையில் வாழும் தமிழினம் கொதிக்கின்றது. அதுவம் எதுவரை?
ஏனெனில் முக்கிய போராளிகள் உட்பட விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் பலரும் யார் என்பது வெளிச்சத்திற்க வந்திருப்பது தான் அந்த சந்தேகத்திற்கு வழியமைக்கின்றது.
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் துரோகிகளின் பட்டியலில் யாரை சேர்ப்பது யாரை விடுவது.
எல்லோரும் ஏதோ ஒரு கட்டத்தில் துரோகிகளாக தான் உள்ளனர். கண்ணை மறைத்த சுயநலம் அனைவரையும் துரோகிகளாக மாற்றியது.
1980களின் ஆரம்பம் முதல் வெளிநாட்டு வாழக்கையை தெரிந்து கொண்ட தமிழர்கள் இலங்கையில் நடந்த வன்முறைகளை தமக்கு சாதகமாக பயன்படுத்தி அரசியல் தஞ்சம் கோரினார்கள். அதனையே ஒரு பிழைப்பாக கருதி உள் நாட்டில் இருந்தவர்களையும் வெளிநாட்டுக்கு இழுத்ததுமல்லாமல் தமது உறவினாகளின் பயனம் வெற்றியடைய அவலகுரல்கள் கேட்கவில்லையே என ஏங்கினர். “இங்கே எங்கள் மனம் சுடுகின்றது”.
யுத்தத்தின் வலி என்ன என்று தெரியாத பலர் விடுப்பில் நாட்டுக்கு வந்த போது குறுக்கு வழியில் சம்பாதித்த பணத்தை வீசிக்கி விஸ்கி தான் நாங்க பாவிப்பது என்ற நின்றுவிடாது படிச்ச சிவத்த பொம்பிளை வேண்டும் என்று அடம்பிடித்து தமது வாழ்க்கையை ஒருவழிபடுத்திய அவர்களின் கையில் மிதமிஞ்சிய பணம் இருந்தால் பணமும் பொருளும் தான் வாழ்க்கை என்ற மனநிலையை எமது சமூகத்துக்குள் திணித்து நியாயமற்ற சீதனத்தை எங்கள் ஏழை யுவதிகள் மீது சுமத்தி அவர்களின் வாழ்வை சீரழித்து தற்கொலைக்கும் தவறான வழிக்கும் நடத்தினீhகள். உங்கள் பெண்கள் பூப்பறிக்க எங்கள் கைள் ஆயுதம் ஏந்தியது. “இங்கே எங்கள் மனம் சுடுகின்றது”.
தமது செல்வாக்குக்காக மட்டும் ஊடகத்துறையில் ஈடுபடுபவர்களால் “எங்கள் மனம் சுடுகின்றது” தமது பேருக்கும் புகழுக்காகவும் மட்டுமே எழுது கருவிகளை கையிலெடுத்த இவர்களின் பார்வையில் தூரநோக்கமல்ல தூக்கும் நோக்கமே உள்ளது.
நாம் கதறகின்றோம் எமது கண்ணீர் புரிகின்றதா? உங்கள் துர் வார்த்தைகளால் புண்பட்டுள்ளோம். எங்களுக்காக பொறுப்புணர்வுடன் ஏனைய ஊடக நண்பர்களையும் மதித்து செயற்படுங்கள்.
எம்மை இந்த குழியில் தள்ளியவர்களை ஏன் அன்று எங்களுக்கு சொல்ல மறுத்தீர்கள்? வாய்மூடிநின்றீர்கள்? எமது இனத்தின் வலிகளா உங்கள் பொழுது போக்கு? எங்கள் துப்பாக்கியிலும் மேலாக உங்கள் பேனாவையல்லவா நம்பியிருந்தோம் ஆனால் நீங்கள் இன்றும் மாறவில்லை நீங்கள் யார்? “இங்கே எங்கள் மனம் சுடுகின்றது”.
கருணா அண்ணாவே, துரோகியானாலும் வெளிப்படையாக இருப்பதால் உன்னிடம் உரிமையுடன் கேட்கிறேன் “கிழக்கின் உதயம்” என கிடைத்த 30கோடி ரூபாய்களை ஏன் திருடினாய்? நாம் ஆடு மாடு வளர்த்து அதன் பாலை நாமும் குடித்து ஊருக்கும் ஊற்றி செழிப்பாய் இருந்திருப்போமல்லவா? ஏன் கனடா ஈழ ஆதரவாளர்களுக்கு துரோகம் செய்தாய்? எம்மை ஏன் தவிக்க விட்டாய்? “இங்கே எங்கள் மனம் சுடுகின்றது”.
நாம் கூட்டில் அதனால் எமது வீடும் வயலும் இனி எமக்கில்லை என்பது உறுதியாகிவிட்டது, எமது உறவுகள் செய்த தொழிலும் எமக்கில்லை என்பதும் உறதி வயிறு கழுவுவதற்கு எவர் வருவார் என ஏங்குகிறோம். நாம் கூண்டில் வளர்க்கப்படும் விலங்கினமானோம், அந்நியசெலாவணியை ஈட்டும் விலங்கினமான நாம் சிந்தல்களில் சித்திரங்களானோம். எமக்காக எவர் குரல் கொடுப்பீர்?
உலக வீதிகளில் நாளொருமேனியும் பொழுதொருவண்ணமுமாக குரல் கொடுத்த என்னினமே ஏன் எமக்காக குரல் கொடுக்கவில்லை? கட்டளை யிட்டவர்கள் கார்கள் வாங்க சென்றுள்ளார்களா? “இங்கே எங்கள் மனம் சுடுகின்றது”
புரிந்துணர்வின்மையால் ஆரம்பத்தில் நீங்கள் யாவரும் (விடுதலைப்புலிகள் உட்பட) செய்த தவறுக்காக, இன்று வரை புலிஎதிர்ப்பு என எம் போன்ற அப்பாவிகளை தவிக்க விடுவது ஏன்? தலைவர்கள் நீங்கள் வளர்த்து வந்த பகைக்காக ஏன் எம்மை பகடைக்காய் ஆக்கினீர்கள்? எமது பெண்களை விதவைகளாக்கி சுகம் காணுவதொன்ன? பிள்ளைகளை, பெற்றோரை, உறவினர்களை பறித்ததென்ன? “இங்கே எங்கள் மனம் சுடுகின்றது”
எமது குடும்ப உறவுகளை கலக்கி, ஜனநாயக நீரேட்டத்தில் கலந்தவர்களே, ஓயாயத பொய்யையுரைத்து எமக்கு எதிர்பார்ப்பை ஊட்டாதீர்.
உங்களின் சொந்த கொடியை பிடிப்பதற்கே உரிமையற்றிருக்கும் நீங்கள் எமக்காக எப்போது குரல் கொடுப்பீர்கள்? ஓயாத பொய்யரே “இங்கே எங்கள் மனம் சுடுகின்றது”.
எப்போது பன்னீர் தெளிப்பீர்கள் எமக்கு? எமது கண்ணீர் தான் மீதம் இது எமது வாழ்க்கையாகின்றது. “இங்கே எங்கள் மனம் சுடுகின்றது”

0 Responses to “எங்கள் மனம் மட்டும் ஏன் சுடுகிறது?”



  1. Leave a Comment

Leave a comment


  • பகிர் – Share

    Rightdiary பகிர் – Share

www.rightdiary.com LAUNCHING PROGRAM

July 2010
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Flickr My Photos